இடுகைகள்

மலமள்ளும் தொழிலாளர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மலக்கழிவை அள்ளினாலும் சாதிக்க முடியும்! - இரு உதாரணங்கள்!

படம்
கருப்பு இந்தியா! அவமதிப்பு வாழ்க்கையை மாற்றியது! விமல்குமார் தன் பள்ளி வாழ்க்கையை நினைக்கும்போதெல்லாம் கண்கலங்குவார். காரணம் ஹரியானாவிலுள்ள குருஷேத்ரா மாவட்டத்தில் உள்ளது அவரது ஊரான லத்வா நகரம். அதிலுள்ள வால்மீகி பஸ்தி என்ற பகுதியில் அவரது பெற்றோர் வாழ்ந்து வருகின்றனர். தந்தைக்கு மார்க்கெட்டில் வேலை. தாய்க்கு வீடுகளை சுத்தம் செய்து கூட்டிப் பெருக்குவது. விமல்குமார் மட்டுமல்ல அவர் பகுதியில் வசிப்பவர்கள் அனைவருமே மலக்கழிவை அள்ளுவது கூட்டி பெருக்குவது, அருகிலுள்ள சந்தையில் வேலை செய்வது என வாழ்ந்த வந்த மக்கள்தான். இதனால் அவர்கள் பள்ளிகளிலும் பிற இடங்களிலும் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் அதிகம். விமல்குமார் பள்ளியில் பணியாற்றும்போது அவரின் அம்மா பள்ளி மைதானம், வகுப்பறைகள், கழிவறைகளை சுத்தம் செய்துகொண்டு இருப்பார். அதைப்பார்த்துக் கொண்டு விமல் கண்ணீரை அடக்கிக்கொண்டு இருப்பார். அவரின் சாதிப்படி வேலை என்று கிடைப்பது அதுதான். பள்ளி விட்டதும், தன் அம்மாவுக்கு உதவி செய்துவிட்டு இருவருமாக வீடு திரும்புவார்கள். படிப்பில் தொடக்கத்தில் பெரிய ஆர்வம் காட்டவில்லைதான். ஆனால் ஏழாவது மற