இடுகைகள்

மொழிபெயர்ப்புக் கட்டுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ குழுக்கள் இந்தியாவிற்கு அனுப்புகின்ற நிதி குறித்த அறிக்கை

படம்
அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ குழுக்கள் இந்தியாவிற்கு அனுப்புகின்ற நிதி குறித்த அறிக்கை அமெரிக்காவில் உள்ள இந்து தேசியவாத நிறுவனங்கள் சங் பரிவாரின் பல்வேறு பெயரிலுள்ள நிறுவனங்களுக்கும் உள்ள நிதித்தொடர்புகள் குறித்து இக்கட்டுரை பேசுகிறது. ஆங்கிலத்தில்: ஆரேஃபா ஜோகாரி தமிழில்: வின்சென்ட் காபோ அமெரிக்காவில் இந்து தேசியம் பேசும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் குறித்த அறிக்கை சவுத் ஏசியா சிட்டிசன் வெப்பில் ஜூலை 1 அன்று வெளியானது. இதில் இந்தோ அமெரிக்க இந்து குழுக்கள், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள லாபநோக்கற்ற நிறுவனங்கள்  பரிவார குழுக்களுடன் (ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக், விஷ்வ ஹிந்து பரிஷத்) ஆகியவற்றோடு கொண்டுள்ள தொடர்பு குறித்து கூறுகிறது.  இந்த அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் வரிவிலக்கு பெற்ற அறக்கட்டளைகளாகும். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரி கணக்கு ஆவணங்களின்படி அவர்கள் பெறும் நன்கொடை நிதியினை என்ன செய்கிறார்கள் என்று ஆராய்கிறது. இந்த ஆராய்ச்சியால் இந்த அறக்கட்டளைகள் பல மில்லியன் டாலர் தொகையினை இந்த

பசுமையின் காவலன்

பசுமையின் காவலன் பெங்களூரைச்சேர்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஒருவர் மாநகரங்களில் உள்ள மரங்களைப் பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது காட்டுயிர் குறித்த தகவல் தெரிவிப்பது குறித்த தனித்துவமான திட்டங்களோடு இயங்கி வருகிறார்.                       ஆங்கிலத்தில்: மீரா பரத்வாஜ்                       தமிழில்: வின்சென்ட் காபோ     பெங்களூரைச்சேர்ந்த விஜய் நிஷாந்த் பெங்களூருவில் உள்ள இயற்கை வளம் செறிந்த பகுதிகளை வேகமான நகரமயமாதல் மற்றும் வளர்ச்சி எனும் பெயரில் அழியாமல் காப்பதற்கான தனித்துவமான திட்டங்களை தீவிரமாக செயல்படுத்தி வருகிறார். விருக்சா எனும் இத்திட்டத்தில் இவரோடு நான்கு உறுப்பினர்கள் குழுவாக இணைந்து செயல்பட்டு இதனை சாத்தியப்படுத்தி வருகின்றனர்.       ‘‘தாவரம் தொடர்பான தகவல்களை எழுத்து, படம் மற்றும் துல்லியமான தகவல்கள் அடிப்படையில் அவற்றினை தயாரித்து கொள்கிறோம். எங்களது மரநில அமைவு முறையினை சோதித்த டெல்லி, அகமதாபாத், ப்ரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உயரதிகாரிகள் தங்களது நகரங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் ’’ என்று உற்சாகமாய் பேசும் விஜய் நிஷாந்த்

கௌரவமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு

            கௌர வமிக்க ஒரு இந்தியத்தயாரிப்பு                       ஆங்கிலத்தில்: அனுஜ்குமார்                           தமிழில்: வின்சென்ட் காபோ அமித்ராய் இயக்கியுள்ள ‘ஐ பேட் ’ திரைப்படம் திரைவிழாக்களில் இந்தியப்பெண்களின் குறிப்பிடத்தக்க அவசியமான தேவை குறித்து பேசியதில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.      தான் வாழும் உல்கஸ் நகரில் தயாரிக்கப்பட்ட ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சட்டையில் இருக்கும் அமித்ராயை நாம் எளிதில் புறக்கணித்து கடந்துபோய்விட முடியும்தான். ஆனால் அவர் இயக்கியுள்ள படங்களை அப்படி கடந்துவிட முடியாதபடி, திரையிலிருந்து கண்களை எடுக்க முடியாது தனித்துவ திரைமொழியால் வசீகரிக்கிறார் அமித் ராய். 2010 இல் ரோட் டூ சங்கம் திரைப்படம் இதற்கு உத்தரவாதம் தருவது போல் சாதாரண வாழ்வில் அசாதாரண கதாபாத்திரங்களை நடமாடச்செய்து காட்டியிருப்பார் அமித் ராய்.      மகாத்மா காந்தியின் சாம்பல் திரிவேணி ஆற்றில் கரைக்க எடுத்துச்செல்லப்படும் கார் ஒன்றினை பழுது பார்க்கும் பொறுப்பு ஹஸ்மதுல்லா எனும் மெக்கானிக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியான சம்பவங்கள்தான் கதையாக அமைக்கப்பட்டிருக்க

சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும்

படம்
சட்டம் என்பது கற்களில் பொறிக்கப்பட்டதல்ல; மக்கள் அதனை புரிந்துகொள்ள முடியும் கோர்ட் பட இயக்குநர் சைதன்யா தம்ஹனே ஆங்கில மூலம்: மாணிக் சர்மா தமிழில்: வின்சென்ட் காபோ கோர்ட் படத்தில் நாராயண் காம்ளே எனும் சமூக செயல்பாட்டாளர் தன் அறுபது வயதில் மும்பை தெருக்களில் சிறுநாடக இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி நகரத்தின் தொழிலாளர்கள் பிரச்சனைகளை அனைவரும் அறியும் விதமாக செயல்பாடுகளை மேற்கொள்கிறார். காம்ளே தனது பாடல்களினால் மலமள்ளும் தொழிலாளர் ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டி வழக்கு பதிவுசெய்யப்படுகிறது. அடுத்து அவ்வழக்கின் விசாரணை, அதில் அதில் பங்கேற்கும் விசித்திரமான மனிதர்களான அரசு வழக்குரைஞர் (நியூடன்) நீதிபதி (சதவர்தே), பிரதிவாதி தரப்பு வழக்குரைஞர் (வினய் வோரா) ஆகியோரின் வாழ்க்கையை பின் தொடர்கிறது கதை. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் கோர்ட் படமானது அண்மையில் தேசியவிருதினையும் வென்றுள்ளது. கோர்ட் படத்தினை உருவாக்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?       ஆங்கிலப்பட்டதாரியான நான் எனது பதின