அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ குழுக்கள் இந்தியாவிற்கு அனுப்புகின்ற நிதி குறித்த அறிக்கை

அமெரிக்காவில் செயல்படும் இந்துத்துவ குழுக்கள் இந்தியாவிற்கு அனுப்புகின்ற நிதி குறித்த அறிக்கை

அமெரிக்காவில் உள்ள இந்து தேசியவாத நிறுவனங்கள் சங் பரிவாரின் பல்வேறு பெயரிலுள்ள நிறுவனங்களுக்கும் உள்ள நிதித்தொடர்புகள் குறித்து இக்கட்டுரை பேசுகிறது.
ஆங்கிலத்தில்: ஆரேஃபா ஜோகாரி

தமிழில்: வின்சென்ட் காபோ




















அமெரிக்காவில் இந்து தேசியம் பேசும் லாப நோக்கமற்ற நிறுவனங்கள் குறித்த அறிக்கை சவுத் ஏசியா சிட்டிசன் வெப்பில் ஜூலை 1 அன்று வெளியானது. இதில் இந்தோ அமெரிக்க இந்து குழுக்கள், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள லாபநோக்கற்ற நிறுவனங்கள்  பரிவார குழுக்களுடன் (ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக், விஷ்வ ஹிந்து பரிஷத்) ஆகியவற்றோடு கொண்டுள்ள தொடர்பு குறித்து கூறுகிறது. 

இந்த அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் வரிவிலக்கு பெற்ற அறக்கட்டளைகளாகும். இந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரி கணக்கு ஆவணங்களின்படி அவர்கள் பெறும் நன்கொடை நிதியினை என்ன செய்கிறார்கள் என்று ஆராய்கிறது. இந்த ஆராய்ச்சியால் இந்த அறக்கட்டளைகள் பல மில்லியன் டாலர் தொகையினை இந்தியாவில் உள்ள எண்ணற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கி வந்தது தெரிய வந்துள்ளது. 

அந்நிய நாட்டின் நிதியுதவி பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் குறித்த பிரச்சினைகள் கடந்த மாதம் தீவிரம்பெற்றிருந்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2% லிருந்து 3% என்று இருந்தபோதும் கூட க்ரீன்பீஸ் ஆம்னஸ்டி ஆக்சன் எய்டு போன்ற தன்னார்வத்தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து தடையில்லாமல் நிதி வந்து கொண்டு இருந்தது என்பது வெளியே கசிந்த அரசின் உளவுத்துறை அறிக்கையிலிருந்து தெரிய வருகிறது. 

அமெரிக்கா போன்ற பன்மைத்தன்மை வாய்ந்த கலாசாரங்கள் கொண்ட நாட்டில் இத்தகைய இனக்குழு அமைப்புகள் வெவ்வேறான உலகம் முழுக்க இயங்கி வரும் அரசியல் அமைப்புகளோடு தொடர்பு கொண்டுள்ளது பொதுவான ஒன்றாக கருதலாம். 

ஓர் உதாரணத்திற்கு அமெரிக்க இஸ்ரேலிய பொதுமக்கள் தொடர்பு மையத்தை எடுத்துக்கொள்வோம். அமெரிக்காவில் யூதர்கள் தொடர்பான கொள்கைகள் உருவாக்கப்படுவதற்காக பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் அமைப்பு இது. நாட்டின் பல்வேறு இடங்களில் இவ்வமைப்பிற்கு கிளைகள் உண்டு. ஏறத்தாழ இதுபோலவே கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் பிற இனக்குழுக்கள் தொடர்பான நல அமைப்புகளும் உள்ளன.

ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம் 1989 ம், விஷ்வ ஹிந்து பரிஷத் 1970 ம் அமெரிக்காவில் வரிவிலக்கு பெற்ற அமைப்புகளாக தோன்றி செயல்படத்தொடங்கின. இவ்விரு அமைப்புகளும் இளைஞர்கள் மற்றும் குடும்பம் குறித்த பயிற்சி பட்டறைகளையும் குழந்தைகளுக்கான கல்வி முகாம்களையும் நடத்தி அதன்மூலம் இந்து கலாச்சாரத்தையும் அடையாளத்தையும் பிரச்சாரம் செய்து வருகின்றன. 

2002 லிருந்து 2012 வரை ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம் 1.4 மில்லியன் டாலர்களை இளைஞர்கள் மற்றும் குடும்பம் தொடர்பான பயிற்சி முகாம்களை நடத்த செலவழித்துள்ளது. விஷ்வ பரிஷத் அமைப்பு 1 மில்லியன் டாலர்களை இதேகாலத்தில் தன் செயல்பாடுகளுக்கு செலவழித்துள்ளது. 

ஹிந்து ஸ்வயம் சேவக் சங்கம் ஒவ்வொரு வாரமும் பால் கோகுலம் எனும் பெயரில் யோகா, குழந்தைகளுக்கான கல்வி மற்றும் பிரார்த்தனை கூட்டங்களை தனது அமைப்பு சார்பில் நடத்திவருகிறது. இவ்வமைப்பு அமெரிக்கா முழுவதும் 140 ஷாக்கா எனும் பெயரில் வகுப்புகளை நடத்தி வருகிறது.

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு 19 துணை அமைப்புகளின் மூலம் பால விஹார் எனும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. 

மேரிலேண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த இந்தியா மேம்பாட்டு மற்றும் நிவாரண நிதியகம் எனும் அமைப்பிலிருந்து பெருமளவிலான நிதி 50% சங் பரிவார அமைப்புகளுக்கு வழங்கப்பட்டதாக 1994 லிலிருந்து 2000 ஆம் ஆண்டுவரை அவ்வமைப்பின் கணக்கு விபரங்கள் தெரிவிப்பதாக சப்ரங் கம்யூனிகேஷன் மற்றும் சவுத் ஏசியா சிட்டிசன்ஸ் வெப் 2002 ல் அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

2002லிருந்து 2012 வரை இந்த அமைப்பு 17.3 மில்லியன் டாலர்களை சங் பரிவார அமைப்புகளான அகில் பாரதிய வன்வாசி கல்யாண் ஆஷ்ரமம், தி ஏகல் வித்யாலயா பவுண்டேஷன் ஆப் இந்தியா, பரம் சக்தி பீத் மற்றும் சேவா இன்டர்நேஷனல் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான அமைப்புகளுக்கு தந்திருக்கிறது. ஆதிவாசி இனக்குழுக்களின் மேம்பாடு நிவாரணத்திற்கென இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. 

$ 1,039,780 எந்த அமைப்புகளுக்கு வழங்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை.

$ 1,086,600 (33க்கும் கூடுதலான அமைப்புகளுக்கு)
மகாராஜா அக்ராசென் சிக்ஷா சமிதி – ஆக்ரா(உ.பி) – $123,000
விவேகானந்தா யோகா அனுஸந்தான சம்ஸ்தனா –பெங்களூரு(கர்நாடகா) -$100,000
அகில் பாரதிய வன்வாசி கல்யாண் ஆஸ்ரமம் – ஜஸ்பர் நகர்(சட்டிஸ்கர்)- $87200
சஹாஜ் சேவா சம்ஸ்தான் (ஹைதராபாத்) - $83,300
ஏகல் வித்யாலயா பவுண்டேஷன் ஆப் இந்தியா (நியூ டெல்லி) $ 73,000
ராஜேஸ் கங்காதர் படேல் சாரிடபிள் ட்ரஸ்ட்(குஜராத்) - $60,000


ஏகல் வித்யாலயா பவுண்டேஷன் ஆப் இந்தியா (நியூ டெல்லி) $ 25,000
பாரத் கல்யாண் பிரதிஸ்தான் (நியூ டெல்லி) - $ 209,000
பரம் சக்தி பீத்(டெல்லி) - $ 208,000


ஏகல் வித்யாலயா பவுண்டேஷன் ஆப் இந்தியா (நியூ டெல்லி) $335,000
விவேகானந்தா யோகா அனுஸந்தான சம்ஸ்தனா –பெங்களூரு(கர்நாடகா) -$199,000
சேவா இன்டர்நேஷ்னல் (நியூ டெல்லி) -$ 91,000

                 -



மஹாராஜா அக்ராசென் டெக்னிகல் எஜூகேசன் சொசைட்டி (ஹிமாச்சல் பிரதேசம்) - $ 24,500
சஹாஜ் சேவா சம்ஸ்தன் (ஹைதராபாத்) - $ 92000
சமெர்த் சாரிடபிள் ட்ரஸ்ட் (குஜராத்) - $78,050



 
பிற நன்கொடையாளர்கள்: அமெரிக்காவைச் சேர்ந்த வளர்ச்சி சம்பந்தமான அறக்கட்டளைகள் சங் பரிவாரம் சார்ந்த தலைவர்களுடன் கொண்டிருந்த நிதி தொடர்புகள் வரி தொடர்பான அறிக்கை வழி வெளியே தெரிய வந்துள்ளது. ஏகல் வித்யாலாயா பவுண்டேஷன், பரம் சக்தி பீத், சேவா இன்டர்நேஷ்னல், மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்(அமெரிக்கா) 55 மில்லியன் டாலர்களை இந்தியாவுக்கு பல்வேறு திட்டங்களுக்காக வழங்கியுள்ளன. இந்த அமைப்புகளின் தலைவர்கள் குறித்த விவரங்கள் தெரியவில்லை. 

அமெரிக்காவைச் சேர்ந்த சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த நிறுவனங்கள் 2001 லிருந்து 2012 வரை அளித்த நிதி தொடர்பான அட்டவணை இது. 


ஏகல் வித்யாலயா பவுண்டேஷன்
இந்தியா மேம்பாடு மற்றும் நிவாரண நிதி
விஷ்வ ஹிந்து பரிஷத் 
சேவா இன்டர்நேஷ்னல்(2005)
பரம் சக்தி பீத் ஆப் அமெரிக்கா (2004) 27 மில்லியன் டாலர்கள்

19.4 மில்லியன் டாலர்கள்
3.9 மில்லியன் டாலர்கள்
3.3 மில்லியன் டாலர்கள்
1.9 மில்லியன் டாலர்கள்

  
 
 டெக்சாஸை சேர்ந்து இந்து அறக்கட்டளை நிறுவனம் ஒன்று ஏகல் வித்யாலயா பவுண்டேஷன் அமைப்புக்கு 7000 டாலர்களையும் 2006 இல் ஆர்எஸ்எஸ் கிராம பள்ளிகளுக்கு 7000 டாலர்களையும் 2007 இல் விஹெச்பி பள்ளிகளுக்கு 14000 டாலர்களையும் நன்கொடையாக அளித்துள்ளது. 

2006 ஆம் ஆண்டு விவேக் பப்ளிக் வெல்ஃபேர் மற்றும் எஜூகேசன் பவுண்டேஷன்  10000 டாலர்களை விஹச்பி அமைப்புக்கு கல்வி, மருத்துவ உதவி, மற்றும் ஏழ்மை நிவாரண உதவிகளை இந்தியாவில் செய்வதற்காக அளித்துள்ளது. 

அமெரிக்கா ஹிந்து பல்கலைக்கழகம்

விஹெச்பி, அமெரிக்கா: இதன் கல்வி நிறுவனமான ஹிந்து பல்கலைக்கழகம் 1985 இல் வரிவிலக்கு பெற்ற நிறுவனமாக செயல்படத்தொடங்கியது. ஹிந்து தத்துவம், யோகா, தியானம், சமஸ்கிருதம், வேத ஜோதிடம் உள்ளிட்ட பலவற்றுக்கு  படிப்புகளை போதித்து பட்டமளிக்கிறது இப்பல்கலைக்கழகம். 2002 லிருந்து 2008 வரை விவேக் பப்ளிக் வெல்ஃபேர் மற்றும் எஜூகேசன் பவுண்டேஷன் அமைப்பிடம் 4.2 மில்லியன் டாலர்களை நிதியாக பெற்றிருக்கிறது. 

பஜ்ரங்தள் அமைப்பு

சங் பரிவாரத்தின் இளைஞர்கள் பிரிவான இது மற்ற அமைப்புகளைப் போல வரிவிலக்கு பெற்றதல்ல. அமெரிக்க அரசின் ஆண்டறிக்கைகளும், உலக மத சுதந்திர அமைப்பும் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து கடும் தாக்குதல் நடத்திவருவதால் இவர்களை அதி தீவிரம் கொண்டவர்கள் என்று கூறுகிறது.