இடுகைகள்

பிரிட்டானியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருந்தொற்று காலத்தில் கற்றுக்கொண்ட நிர்வாக விஷயங்கள்!

          80-20 ரூல் வருண் பெர்ரி , தலைவர் , பிரிட்டானியா இன்றுள்ள கடினமான சூழ்நிலையை யாரும் யோசித்தே பார்த்திருக்கமுடியாது . வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு , பொருட்களை வாங்கிக்கொண்டு இருப்பதை எந்த நிறுவனங்களுமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் . ஆனால் சூழ்நிலை அப்படி இருக்கிறது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு அதன் போக்கில் வியாபாரத்தை அமைத்துக்கொள்வது நல்லது . இம்முறையில் நாங்கள் மெல்ல உற்பத்திதிறனை கட்டமைத்து வருகிறோம் . அலுவலகத்தில்தான் வேலை என்ற நிலை இன்று பெருமளவு மாறியுள்ளது . பெருந்தொற்று காலம் பல்வேறு புதிய உற்பத்திமுறைகளை கண்டுபிடிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது . நாங்கள் இன்று மார்க்கெட்டிங் குழுக்களை அதிக தொலைவுக்கு அனுப்ப முடியாது . அதேசமயம் பொருட்களை சரியானபடி விற்பனையாளர்களுக்கு அனுப்ப முடியாத சூழலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு செயல்பட்டுவருகிறோம் . எங்களுக்கு 80 சதவீத வருமானம் குட்டே , மில்க் பிக்கிஸ் , மாரி , நியூட்ரிசாய்ஸ் பிஸ்கெட்டுகளிலிருந்து கிடைக்கிறது . 2 அலுவலகத்தில் வேலை செய்வது கலாசாரத்தை , கண்டுபிடிப்பை உருவாக்க உதவுகிறது .

டாடா பொருட்களின் விற்பனையை ஏறுமுகமாக்கி சாதனை செய்த பெண்மணி! - ரிச்சா அரோரா, டாடா

படம்
    ரிச்சா அரோரா, டாடா ரிச்சா அரோரா டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்(பேக்கேஜ் புட்ஸ்), இயக்குநர். 2014ஆம் ஆண்டு டாடா நிறுவனத்திற்குள் காலடி எடுத்து வைத்தார் ரிச்சார். இவருக்கு விற்பனைத்துறையில் 30 ஆண்டு அனுபவம் உண்டு. இதற்கு முன்னர் பிரிட்டானியா, விப்ரோ, மெக்பான் புட்ஸ், பல்சாரா, எப்சிபி உல்கா ஆகிய நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றியவர். பேக்கேஜில் வரும் பல்வேறு பொருட்களை உருவாக்குவது, விற்பனை உத்திகள், விற்பனை என அனைத்துமே ரிச்சாவின் திட்டமிடலில்தான் உள்ளது. இதன்காரணமாகவே டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்கள் சிறப்பாக விற்பனையாகின்றன. லண்டன் பொருளாதார பள்ளியில் படித்திருக்கிறார். அகமதாபாத்திலுள்ள ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தவர். பொருளாதார பட்டதாரி. இவற்றையெல்லம் விட சிறந்த புகைப்படக்காரர். இந்திய கலைக்கண்காட்சியில் ரிச்சா தான் எடுத்த புகைப்படங்களை தனியாகவே காட்சிக்கு வைத்திருந்தார்.   இம்பேக்ட் 50, சாதனைப் பெண்கள், பிரிட்டானியா, விப்ரோ, பல்சாரா, எப்சிபி உல்கா

கருகுகிறது பிஸ்கட் துறை!

படம்
ஜிஎஸ்டி வரிகளால் கருகும் பிஸ்கட் துறை! behance தற்போது பிஸ்கட் துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாதாரண கம்பெனிகளல்ல. பிரிட்டானியா, பார்லே, ஐடிசி ஆகிய கம்பெனிகள். என்ன காரணம்? ஜிஎஸ்டிதான். இதனால் மாநிலங்களிலுள்ள சிறு சிறு பிஸ்கட் கம்பெனிகள் குறைந்த விலையில் பிஸ்கட்டுகளை கடைகளில் கிடைக்கச் செய்துவருகின்றனர். இதன் விளைவாக, இந்தியளவில் விற்பனை செய்துவரும் பார்லே பெரும் சரிவை சந்தித்துள்ளது. முதலிடத்தில் உள்ள பிரிட்டானியாவும் இதனை உணரத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் பிஸ்கட் சந்தையின் மதிப்பு 35 ஆயிரம் கோடி ரூபாய். தற்போது ஏற்பட்டுள்ள சரிவு 350 கோடி ரூபாயாக உள்ளது. தற்போது பிஸ்கட்களுக்கு உள்ள வரி பதினெட்டு சதவீதம். இதனை 12 சதவீதமாக குறைக்க பிஸ்கட் நிறுவனங்கள் அரசை வற்புறுத்துகின்றன. பிரிட்டானியா, பார்லே, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் மூன்றும் 69 சதவீத பங்குகளை கையில் வைத்துள்ளன. நன்றி: எகனாமிக் டைம்ஸ்