பெருந்தொற்று காலத்தில் கற்றுக்கொண்ட நிர்வாக விஷயங்கள்!
80-20 ரூல்
வருண் பெர்ரி, தலைவர், பிரிட்டானியா
இன்றுள்ள கடினமான சூழ்நிலையை யாரும் யோசித்தே பார்த்திருக்கமுடியாது. வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டு, பொருட்களை வாங்கிக்கொண்டு இருப்பதை எந்த நிறுவனங்களுமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சூழ்நிலை அப்படி இருக்கிறது என்றால் அதனை ஏற்றுக்கொண்டு அதன் போக்கில் வியாபாரத்தை அமைத்துக்கொள்வது நல்லது. இம்முறையில் நாங்கள் மெல்ல உற்பத்திதிறனை கட்டமைத்து வருகிறோம்.
அலுவலகத்தில்தான் வேலை என்ற நிலை இன்று பெருமளவு மாறியுள்ளது. பெருந்தொற்று காலம் பல்வேறு புதிய உற்பத்திமுறைகளை கண்டுபிடிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் இன்று மார்க்கெட்டிங் குழுக்களை அதிக தொலைவுக்கு அனுப்ப முடியாது. அதேசமயம் பொருட்களை சரியானபடி விற்பனையாளர்களுக்கு அனுப்ப முடியாத சூழலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டு செயல்பட்டுவருகிறோம். எங்களுக்கு 80 சதவீத வருமானம் குட்டே, மில்க் பிக்கிஸ், மாரி, நியூட்ரிசாய்ஸ் பிஸ்கெட்டுகளிலிருந்து கிடைக்கிறது.
2
அலுவலகத்தில் வேலை செய்வது கலாசாரத்தை, கண்டுபிடிப்பை உருவாக்க உதவுகிறது.
ரிஷாத் பிரேம்ஜி, தலைவர், விப்ரோ
எங்களது நிறுவனத்தில் இப்போது 1,80, 000 பேர் வீட்டிலிருந்து பணிசெய்து வருகிறார்கள். இதனை முன்னர் கேட்டிருந்தால் எனக்கு சிரிப்புதான் வந்திருக்கும் என்கிறார் ரிஷாத்
இன்று அலுவலகத்தில் நடைபெறும் சந்திப்புகளில் பணியாளர்களை பெருமளவு வீட்டிலிருந்து பணியாற்ற கேட்டுக்கொண்டு வருகிறார்கள். விப்ரோ இப்போதைக்கு அத்தனை பணியாளர்களையும் அலுவலகத்திற்கு வரச்சொல்லப்போவதில்லை. குறிப்பிட்ட சதவீத ஆட்கள் மட்டும் வந்தால் போதும் என கூறலாம் என்று நினைத்துள்ளோம். நிறுவனத்திற்கு வந்து ஆட்கள் பணிபுரியும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவார்கள். நிறுவனத்தைப் பற்றி பேசுவார்கள். கஃபேடீரியா, தண்ணீர் குடிக்கும் இடம் என அவர்கள் பேசுவது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும். நிறுவனத்தின் கலாசாரம், கண்டுபிடிப்புகள் இப்படித்தான் உருவாக முடியும் என்று உறுதியாக வலியுறுத்துகிறார் ரிஷாத்.
போர்ப்ஸ் இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக