கடற்கரையில் நடக்கும் போதைமருந்து வியாபாரத்தை முறியடிக்கும் லைஃப் கார்டு குழுவின் சாகசங்கள்! - பே வாட்ச்
பே வாட்ச்
Screenplay by | |
---|---|
Story by |
|
Based on | Baywatch by Michael Berk Douglas Schwartz Gregory J. Bonann |
Directed bySeth Gordon
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள எமரால்டு பே ஏரியாவில் கதை நடக்கிறது. அங்குள்ள பே வாட்ச் எனும் ஏரியா, வசதியான ஆட்கள் வந்து இளைப்பாறும் இடம். அங்கு கடலுக்குள் சென்று சிக்குபவர்களை காப்பாற்ற அரசு லைப் கார்டுகளை பணிக்கிறது. அக்குழு தலைவர் மிட்ச் - டிவைன் ஜாக்சன், அவருடன் கிளுகிளு உடையில் இரண்டு பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அனைவரது வேலையும் ஒன்றுதான். யாராவது கடல் நீரில் மூழ்கினால் அவர்களை அதிலிருந்து மீட்டு கரை சேர்த்து மருத்துவ உதவியை நாடுவது.
அங்குள்ள ஹன்லி கிளப் நிறுவனத்தின் உரிமையாளரான விக்டோரியா லீட்ஸ் என்ற பெண்மணி, இந்த மொத்த கடற்கரையையும் தனது சொத்தாக்க முயல்கிறார். இதற்காக அங்குள்ளவர்களை அடித்து மிரட்டி நிறுவனங்களை கையகப்படுத்துகிறார். அதேநேரம் அங்கு போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை மிட்ச் கண்டுபிடித்து எப்படி தடுக்கிறார் என்பதை அதிக கவர்ச்சி, குறைந்த பரபரப்புடன் சொல்லியிருக்கிறார்கள்.
படத்தில் உருப்படியான விஷயம் படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான டிவைன் ஜாக்சன்தான். மற்ற பாத்திரங்கள் வலுவாக இல்லை. படம் முழுக்க பீச்சில் நடைபெறுவதால், நாயகிகள் அனைவரும் நீச்சல் உடையில்தான் அறிமுகமாகிறார்கள். தொடக்கம் முதலே இப்படி இருப்பதால் அனைத்து விஷயங்களும் அப்படியே பழகி விடுகிறது. அதனால் தனியாக விரசம் என எதுவும் தோன்றாது.
தொலைக்காட்சி தொடர் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தை காமெடி, கவர்ச்சிக்காக பார்க்கலாம். மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ள ஏதுமில்லை.
கடற்கரையில் ஜாலி வாக்கிங்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக