வொயிட் காலர் டிரெஸ்ஸில் ரத்தவெறியாட்டம்! எ கம்பெனி மேன் 2012
- Movie: A Company Man
- Country: South Korea
- Release Date: Oct 18, 2012
- Director: Im Sang Yoon
ஹியூங் டூ என்பவர் இரும்பு தொழிற்சாலை ஒன்றில் விற்பனை பிரிவில் வேலை பார்க்கிறார். அவரின் உடைகள், ஆபீஸ் அப்படி தோற்றம் காட்டும். ஆனால் ஆபீசிற்கு கீழே உள்ள பாதாள அறைகளில் முழுக்க யாரை போட்டுத்தள்ளவேண்டும் என அசைன்மெண்டை நிறைவேற்றும் ஆபீஸ், துப்பாக்கிகள், பிளான் என அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. என்சிஎம் என்ற அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறார் ஹியூங் டூ. ஒருமுறை போலீஸ் அலுவலகத்தில் நடக்கும் அசைன்மெண்டில், ஒருவனைக் கொல்ல பள்ளியை விட்டு இடைநின்ற ஆளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அவனைக் கொன்றுவிடுவதுதான் திட்டம். ஆனால் அவனது இளம் வயது ஹியூங்கை யோசிக்க வைக்கிறது. அதனால் அவனை உயிர்பிழைக்க வைத்து, பராமரிக்கிறார். அவனது குடும்பத்திற்கு பண உதவிகளை செய்கிறார். ஒருகட்டத்தில் பிறரை கொலை செய்யும் நிறுவனத்தின் வேலை கூட ஹியூங்கிற்கு எதற்கு இந்த வேலை என்று தோன்றுகிறது. அப்போதுதான் அவருக்கு ஆபீசில் கொலைகளை பிறருக்கு செய்யச்சொல்லி வழங்கும் இயக்குநராக பணி உயர்வு கிடைக்கிறது.
சொல்லாத காதலும் பூக்கிறது. இதனை மோப்பம் பிடித்த கொலைகார கம்பெனி, அவரை தீர்த்துக்கட்ட முயல்கிறது. இதில் காதலி இறந்துவிட, வெறியாகிறார் ஹியூங். அப்புறம் என்ன சிங்கம் 3யின் வேட்டை தீம் சாங்கை போட்டு கம்பெனியிலுள்ள அங்காளி பங்காளிகளை ரத்தவெறியுடன் வேட்டையாடுகிறார். இந்த முயற்சியில் அவர் வென்றாரா இல்லையா என்பதுதான் இறுதிக்காட்சி...
வாழ்க்கையின் எதிர்காலத்தை உருவாக்க முயற்சிக்கையில் இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் எடுக்கு்ம முடிவுகளால் வாழ்க்கை எப்படி நாசமாகிறது என்பதுதான் படம். படத்தில் போலீஸ்காரர் பாத்திரம் இன்னும் கொஞ்ச நேரம் வந்திருக்கலாம். மற்றபடி காதல் பகுதி நன்றாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஏறத்தாழ அக்காட்சிகளின்போதே சோகமாக முடிவுதான் என்பது பார்வையாளர்களுக்கு தெரிந்துவிடுகிறது. தனது குடும்பத்தை இழந்து கம்பெனி கொலைகாரரின் வாழ்க்கை, அவர் பேசும்போது வாழ்க்கை பற்றி கவனத்தை நாயகன் பெறுவது, நாயகனை வேலையில் சேர்த்துவிட்டவர் உண்மையைத் தெரிந்துகொண்டும் கொலையை வேலையாக நினைத்து செய்வது ஆகிய காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன.
வேட்டை!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக