மேற்குவங்கத்தில் மம்தாவை காப்பாற்றப் போகும் திட்டங்கள் என்னென்ன?

 

 

 

 

When a young Mamata Banerjee challenged Pranab Mukherjee ...
முதல்வர் மம்தா

 

மேற்குவங்கத் தேர்தலுக்காக அங்கு பல்வேறு கட்சிகள் வாக்குகளைப் பெற போட்டா போட்டி போட்டு வருகி்ன்றன. முதல்வர் மம்தா அங்கு என்னென்ன திட்டங்களை தீட்டியிருக்கிறார் என்று பார்ப்போம்.


கன்யாஶ்ரீ

13-21 வயது வரையிலான பெண்களுக்கு உயர்கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ. 1000 வழங்கப்படுகிறது. பதினெட்டு வயதை எட்டிய பெண்களுக்கு ரூ.25000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இம்முறையில் அரசு 7 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளது.

இதில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.


காத்யா சதி


மலிவு விலையில் அரசி வழங்கும் திட்டம். ஒரு கிலோ அரிசி ரூ.2க்கு வழங்கப்படுகிறது. இதனால் அரசுக்கு ஏற்படும் செலவு ஆண்டுக்கு 5 ஆயிரம் கோடி. கோடிக்கணக்கான மக்கள் இதனால் பயன் பெறுகிறார்கள்.


ஸ்வஸ்திய சதி


ஆண்டுக்கு 1.5 முதல் 5 லட்சம் வரையிலான காப்பீட்டுத் திட்டம் அரசு மக்களுக்கு வழங்குகிறது. நடப்பு ஆண்டில் இதற்கு 906 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.


ஜெய்ஜோகர் அண்டு தபோசிலி பந்து


ஆதி திராவிடர்கள், பழங்குடியினருக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு இத்திட்டம் மூலம் அரசுக்கு ஏற்படும் செலவு 3 ஆயிரம் கோடி.


கர்மா சதி பிரகல்பா


வேலையில்லாத இளைஞர்களுக்கு இரண்டு லட்சம் வரையிலான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம் அரசுக்கு 500 கோடி வரையில் செலாவாகிறது. பத்து லட்சம் இளைஞர்கள் இதன்மூலம் பயன்பெறுகிறார்கள்.


ஸ்னேகர் பராஷ்


பொதுமுடக்க காலத்தில் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு ஒருமுறை வழங்கும் உதவியாக ரூ.1000 வழங்கப்பட்டது. 85 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு.

பத்து லட்சம் இடம் பெயர் தொழிலாளர்கள் இதன்மூலம் பயன்பெற்றனர்.


மாதிர் சிரிஷ்டி


50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வணிக பயன்பாட்டிற்கு வழங்கும் திட்டம்.

திட்டத்தொகை கூறப்படவில்லை. வருமானம் இல்லாத பான்குரா, மேற்கு மிட்னாபூர், ஜார்கிராம், பிர்பும் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்றனர்.


இந்தியா டுடே

ரோமிதா த த்தா



கருத்துகள்