பீகார் அரசியல், சாதியிலிருந்து விலகி மேம்படவேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம்! - முகேஷ் சாஹ்னி

 

 

 

 

Bihar elections 2020: Bihar elections: Who is ‘VIP’ Mukesh ...

 

நேர்காணல்

முகேஷ் சாஹ்னி

விகாஷீல் இன்சான் கட்சி


உங்கள் சாதி சார்ந்த சமூகம் பெரிதாக இல்லாத நிலையில் நீங்கள் அதிக சீட்டுகளை கேட்பது எப்படி சரியாக இருக்கமுடியும்?

பொதுவான நம்பிக்கையாக குறிப்பிட்ட சாதி சார்ந்த ஆதரவு இருந்தால்தான் ஒருவர் பதவியில் இருக்க முடியும் என நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. 1990களுக்குப் பிறகுதான் இந்த எண்ணம் அதிகரித்துள்ளது. லாலுபிரசாத் யாதவ், ராம்விலாஸ் பாஸ்வான், நிதிஷ்குமார் ஆகியோர் இப்படி வென்று வந்தவர்கள்தான்.  என்னைப் பொறுத்தவரை அரசியல் என்பது விபத்துதான்.

நிதிஷ்குமார் ஆட்சியை நீங்கள் எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

இன்னும் இந்த மாநிலத்திற்கு செய்யவேண்டிய வேலைகள் அதிகம் உள்ளன. பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால் பீகார் இன்னும் கீழேதான் உள்ளது. தேஜஸ்வி யாதவை விட நிதிஷ்குமார் தெளிவான திட்டங்களை உடையவர். முதல்வர் பதவிக்கு சரியான தேர்வாகவும் இருப்பார்.

பீகாருக்கான உங்கள் பார்வை என்ன?

2015ஆம் ஆண்டு நான நிஷாத் என்ற எங்கள் இனம் சார்ந்து குரலை எழுப்பினேன். நாங்கள் அதிகாரத்திற்கு வந்தால், எங்கள் இனம் சார்ந்து பல்வேறு கோரிக்கைகளை தீர்க்க முயல்வேன். நீண்டகால நோக்கில் சாதி சார்ந்த அரசியல், தேர்தல் தேர்வு என்பது பயனளிக்காது என்பதே எனது உறுதியான எண்ணம்.

மகாபந்தன் கூட்டணியிலிருந்து திடீரென விலக என்ன காரணம்?

தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரே தேஜஸ்வி யாதவிடம் நான் பேசினேன். அப்போது 25 சீட்டுகளோடு துணை முதல்வர் பதவியியையும் தருவதாக சொன்னார். ஆனால் பின்னர் சீட்டுகளை அறிவிக்கும்போது மாற்றி பேசினார்கள். இதனால் நான் கடுமையாக ஏமாற்றப்பட்டேன். எனவே அக்கூட்டணியிலிருந்து விலகுவதை விட வேறு வழியில்லை.

2019இல் நாங்கள் மக்களவை உறுப்பினர், மற்றும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்காக தேர்தலில் நாங்கள் 25ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்று மூன்றாவது இடம் பெற்றோம். எங்களுக்கும் வாக்கு வங்கி உள்ளது.

பிஸினஸ் ஸ்டாண்டர்ட்

கருத்துகள்