இடுகைகள்

அக்சயபாத்ரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமூக வளர்ச்சிக்கு உதவும் திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்!

படம்
சென்னையில் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு அக்சயா பாத்ரா அமைப்புடன் இணைந்து தொடங்கியுள்ளது . பெங்களூருவைச் சேர்ந்த இந்த அமைப்பு பல்வேறு மாநிலங்களுடன் இணைந்து பள்ளிக்குழந்தைகளுக்கான மதிய உணவுத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது . அமைச்சர் வேலுமணி இத்திட்டம் பற்றி ட்விட்டரில் முன்னமே அறிவித்தாலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி எந அறிவிப்பையும் வெளியிடவில்லை . அக்சய பாத்ரா அமைப்பின் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கட்டிடம் பேசினோம் . தமிழ்நாடு அரசு மதிய உணவுத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது . அதுபற்றிய உங்கள் கருத்து ? தமிழ்நாடு அரசின் மதிய உணவுத்திட்டம் பல்வேறு மாநிலங்களுக்கும் முன்னோடியான திட்டமாக உள்ளது . இதைப் பின்பற்றி பல்வேறு மாநிலங்களும் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தி வருகின்றன . உங்களது அமைப்பு இந்தியாவில் உள்ள பன்னிரண்டு மாநிலங்களில் செயல்பட்டு வருகிறது . ஆனால் தமிழகத்தில் உங்களுக்கென சமையல் செய்ய ஒரே ஒரு சமையற்கூடம்தானே உள்ளது ? நாங்கள் வரும் மார்ச்சிலிருந்து சென்னை கார்ப்பரேஷன் அமைப்புடன் இணைந்து 5, 090 மாணவர்களுக்கு நாங்கள் கா