இடுகைகள்

தக்காளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைகீழாக வளரும் வாழைப்பழம்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  அமெரிக்க கொடியை  பள்ளி மாணவர் உருவாக்கினார்! உண்மை. 1958ஆம் ஆண்டு பாப் ஹெஃப்ட் ( Bob Heft) என்ற மாணவர், பள்ளியில் புராஜெக்ட் வேலையாக இதனைச் செய்தார். பாப், தேசியக்கொடியில் 50 மாகாணங்களை நட்சத்திரங்களாக உருவாக்கியிருந்தார். இதனை ஆசிரியர் ஏற்கவில்லை என்பதால், அவருடைய திட்ட மதிப்பெண் குறைக்கப்பட்டது. மாணவர், மனம் தளராமல் பாப் ஹெஃப்ட் அமெரிக்க அதிபரான   ட்வைட் டி ஐசன்ஹோவர் ( Dwight D. Eisenhower)தனது தேசியக்கொடி வடிவமைப்பை அனுப்பினார். இரண்டு மாகாணங்களை இதில் இணைத்துள்ளேன் என தெரிவித்தார். அதிபர், அந்த வடிவமைப்பை ஏற்றுக்கொண்டார்.  வாழைப்பழம் தலைகீழாக வளருகிறது! உண்மை. நாம் வாழைப்பழத்தை தலைகீழாகவே பிரித்து உண்கிறோம். அவை வளரும் விதத்தில், பின்புறப்பகுதி வானைப் பார்த்து அமைந்திருக்கிறது. இவை பெரிதாக வளரும்போது சூரியனைப் பார்த்து வளர்ந்து வளைவான வடிவத்தைப் பெறுகிறது.  நாய் தனது இடது மூக்கில், நறுமணத்தை முகர்கிறது!  உண்மை. நாய், முகரும்போது வலது மூக்கில் வாசனைகளை முகரும். பிறகு, அதில் ஆபத்தான சமிக்ஞைகள் தெரிந்தால், அதிலேயே நுகர்ந்து உண்மையா என ஆராயும். நறுமணம், ஆபத்தில்லாத விஷயங்கள், இணை சேர

சுவையூட்டப்பட்ட தக்காளி ரெடி!

மரபணு மாற்றப்பட்ட தக்காளி! தக்காளி முக்கியமான காய்கறி என்பதில் சந்தேகமில்லை. நாட்டுத்தக்காளி என்பது பழுப்பதும் தெரியாது, கெட்டுப்போவதும் தெரியாது. எனவே ஷெல்ஃபில் வைத்தால் காலகாலத்துக்கும் கண்ணுக்கு இனிமையாக அப்படியே இருக்கவேண்டும். அப்போதுதானே லாபம் பார்க்க முடியும். இதற்காகவும் நோய்த்தாக்குதல்களைக் குறைக்கவும் மரபணு மாற்றப்பட்ட தக்காளிகளை உருவாக்கினர். பாய்ஸ் தாம்சன் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் நாட்டுத்தக்காளியின் மணம், சுவையைக் கொண்ட 725 என்ற மரபணுக்களைக் கொண்ட தக்காளி இது. 4873 மரபணுக்களைக் கண்டறிந்து அதிலிருந்து இதனை உருவாக்கி உள்ளனர். விவசாயிகள் இதன்மூலம் சுவையான தக்காளிகளை உருவாக்கலாம்.  நாங்கள் உருவாக்கிய தக்காளிகளின் வரிசை 2012 இல் வெளியானது. 35 ஆயிரம் மரபணுக்களை ஆராய்ந்துள்ளோம். இவற்றை வரிசைப்படி பட்டியலிட்டுள்ளோம். இவ்வகையில் 166 வரிசைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். புதிய மரபணுக்கள் மூலம் உருவாக்கியுள்ள தக்காளிகளை நீங்கள் பயிரிட்டு எலைட் தக்காளிகளை உருவாக்கலாம். மேலும் இதில் நோய்த்தாக்குதலும் குறைவாக இருக்கும் என்கிறார் அறிவியலாளர் ஜேம்ஸ் ஜியோவன்னோனி. நன்றி: பிசிக்ஸ்