இடுகைகள்

ராணி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கையெழுத்து - விநோதரச மஞ்சரி

படம்
  துணுக்குகள்   தன் கையெழுத்துக்கு கீழே ஒருவர் உருவாக்கும் குறியீடு அல்லது அடையாளத்திற்கு பாரப் (Paraph) என்று பெயர். அமெரிக்க   வரலாற்றிலேயே அரசியல் மற்றும் இலக்கியத்துறை சார்ந்த பிரபலங்களின் கையெழுத்துகளை போலியாக உருவாக்கி புகழ்பெற்றவர், ஜோசப் கோசெய் (Joseph Cosey). இவர், முன்னாள் அமெரிக்க அதிபர்   ஆபிரகாம் லிங்கன், கவிஞர் மார்க் ட்வைன் தொடங்கி அமெரிக்க நாட்டின் விடுதலை பிரகடனத்தை எழுதி வெளியிட்ட தாமஸ் ஜெஃபர்சன் வரை போலி கையெழுத்துகளை உருவாக்கினார். பின்னாளில், ஜோசப்பின் போலி கையெழுத்துகள், சேகரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்ட வினோதமும் நடந்தது. அமெரிக்காவின் சிகோகோவைச் சேர்ந்த நாவல் மற்றும் சிறுகதை எழுத்தாளர்   நெல்சன் ஆல்கிரென் (Nelson Algren), தனது புத்தக வாசகர்களுக்கு கையெழுத்து போடும்போது கூடவே பூனையின் படத்தையும் வரைவது வழக்கம். 1948ஆம் ஆண்டு, அமெரிக்காவின் சிகாகோ நகரில் கையெழுத்துகளை சேகரிப்பதற்கான முதல் அமைப்பாக‘தேசிய கையெழுத்து சேகரிப்பாளர் சங்கம்’ (National Society of Autograph Collectors) தொடங்கப்பட்டது. இதில், உறுப்பினராக விரும்புபவர் தீவிரமான வரலாற்று ஆய

உலக நாடுகளை ஆண்ட ராணிகள்! - கிரேட் கேத்தரின், முதலாம் எலிசபெத், டாய்டு பெடுல், சீன ராணி வூ ஸெட்டியான்

படம்
          கிரேட் கேத்தரின் ஜெர்மனியில் அரச குடும்பத்து இளவரசுக்கு மகளாக பிறந்தவர் கேத்தரின் . இவர் ரஷ்யா நாட்டை கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்திற்கு அழைத்து சென்றவர் என்று கூறுகிறார்கள் . சோபி அகஸ்டே என்ற பெண்மணி ஜெர்மனியில் 1729 ஆம் ஆண்டு பிறந்தவர் . இவரை பதினைந்து வயதில் ரஷ்யாவுக்கு திருமணம் செய்விக்க அழைத்தனர் . மாப்பிள்ளை பீட்டர் . மாப்பிள்ளை பெண் என இருவருமே அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் . மாப்பிள்ளையின் தாய் எலிசபெத்தான் திருமணத்திற்கான தானாவதி . 1745 ஆம் ஆண்டு பீட்டருடன் திருமணம் நடைபெற்றது . அதற்குப் பிறகுதான் சோபிக்கு கேத்தரின் என்ற பெயர் சூட்டப்பட்டது . பீட்டரும் ஜார் மன்னராக மாறினார் . ஜார் என்றால் பேரரசர் என்று பொருள் . ஜார் மன்னருடன் கேத்தரினுக்கு பிரச்னை தொடங்க , அவரை மன்னர் பதவியிலிருந்து விலக்கி கைதுசெய்து சிறையில் தள்ளினார் கேத்தரின் . பிறகு அரியணை ஏறி ராணியானார் . ரஷ்யாவின் ராணி என்றால் அழகாக இருக்கும் . அடுத்த முப்பது ஆண்டுகள் பதவியில் இருந்து ரஷ்யாவை ஆண்டார் . கேத்தரின் நாட்டில் ஏராளமான சீர்திருத்தங்களை தொடங்கினார் . அதில் முக்கியமானது கல்வ