இடுகைகள்

சீரியல் கொலைகாரர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீரியல் கொலைகாரரின் மகன் தனது கணவனா என சந்தேகப்படும் போலீஸ் அதிகாரி - ஃபிளவர் ஆப் ஈவில்

படம்
  ஃபிளவர் ஆஃப் ஈவில் - கே டிராமா லீ காங் ஜி - மூன் சே வோன் - ஃபிளவர் ஆஃப் ஈவில் பிளவர் ஆஃப் ஈவில் கே டிராமா லீ காங் ஜி, மூன் சே வோன்   பே சியாங் என்பவர் தனது டிடெக்டிவ் மனைவி, மகள் ஆகியோருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். பே சியாங்கிற்கு இரும்பு கைவினைப்பொருட்களை செய்வதுதான் வேலை. இந்த நேரத்தில், அவரை சந்திக்க டிவி நிருபர் வருகிறார். அவருக்கு பே சியாங்கின் கடந்த காலம் தெரியும். அதாவது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் செய்த கொலைக்குற்றம் பற்றி.. இதனால் நிருபவரை பே சியாங் தனது வீட்டில் கீழறையில் கட்டிப்போடுகிறார். இந்த நிலையில் உணவக உரிமையாளர் ஒருவர், சீரியல் கொலைகாரர் டியோன் சிக் என்பவரின் முறையில் கொலையாகிறார். அவர் தற்கொலை செய்துகொண்டு இறந்ததால் இப்போது கொலைகளை செய்தவர், அவரின் மகன் டூ சூ என ஊடகம், காவல்துறை முடிவு செய்கிறது. பழைய வழக்குகளை கையில் எடுத்து குற்றவாளி டூவை தேடத் தொடங்குகிறது. உண்மையில் டூ சூ வழக்கை ஆராயும் டிடெக்டிவ் மனைவிற்கு, கொலைகளை செய்வது தனது கணவரோ என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவர் நள்ளிரவில் வெளியே சென்று வரும் நாளில்தான் கணவர் அணிந்துள்ள உடைபோல அணிந

சமூகத்தை பழிக்குப்பழி வாங்க துடித்த பாய் - பாய் பாவோஷான்

படம்
  பாய் பாவோஷான் பாய், சீனாவைச் சேர்ந்த தொடர் கொலைகாரர். மொத்தம் பதினைந்து கொலைகளை நம்பிக்கையோடு செய்தவர். 1980ஆம் ஆண்டு முதல் கொலையை செய்தார். பிளானிங் சற்று சொதப்பிவிட்டது. பிடிபட்டவருக்கு கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்து பதிமூன்று ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. அப்போதே சமூகத்தை இரண்டில் ஒன்று பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தார். 1996ஆம் ஆண்டு பாயின் பழிக்குப்பழி தொடங்கியது. பெய்ஜிங்கில் காவலர் ஒருவரைத் தாக்கி துப்பாக்கி ஒன்றைத் திருடிக்கொண்டு சென்றார். டெமோ காட்ட, அதை வைத்து ஒருவரைக் கொன்று, ஆறுபேர்களை தாக்கி காயப்படுத்தினார். ஹெபாய் எனும் பகுதிக்கு சென்றபோது சிகரெட் வியாபாரியைக் கொன்று கொள்ளையடித்தார். பிறகும் கூட கொலை வெறி அடங்கவில்லை. மற்றொரு காவல்துறை காவலரைத் தாக்கி ரைபிளை கொள்ளையடித்தார். உரும்கி எனும் நகருக்குச் சென்றவர், பத்து நபர்களைக் கொன்றார். இதில், காவல்துறையினர், பொதுமக்கள் ஆகியோரும் அடக்கம். இதைச் செய்யும்போது அவருக்கு சில கூட்டாளிகள் இருந்தனர். கொலை செய்யும்போது கூட்டாளிகள் தேவைப்பட்டனர். ஆனால் கொல்லப்பட்டவர்களிடமிருந்து 1,80,000 டாலர்களைக் கொள்ளையடித்தபோது

சீரியல் கொலைகாரரின் உடலில் வெனோம் புகுந்தால்.... - வெனோம் 2 - டாம் ஹார்டி

படம்
  வெனோம் - லெட் தேர் பி கார்னேஜ் வெனோம் 2 Director: Andy Serkis Produced by: Avi Arad, Matt Tolmach, Amy Pascal, Kelly Marcel, Tom Hardy, Hutch Parker Screenplay by: Kelly Marcel     எடி பிராக் இந்த முறை ஆக்ரோஷமாக அடி உதையோடு உணர்கலக்குகிறார். சீரியல் கொலைகாரர் ஒருவர் சிறையிலிருந்து தப்பிவிடுகிறார். கூடுதலாக எடியின் உடலிலுள்ள வெனோமின் சக்தி கொண்ட ரத்தத்தை சுவைத்துவிடுகிறார். இதனால் அவரது உடலில் இன்னொரு வெனோம் உருவாகிறது. இதனை எதிர்த்து போராடி வெனோம் எப்படி வெல்கிறது என்பதுதான் கதை.    வெனோம் முதல் பாகத்தில் எடிக்கும் அவரது காதலிக்கும் காதல் செட்டாக  வாய்ப்பு இருக்குமா இல்லையா என்று சந்தேகம் அனைவருக்குள்ளும் இருந்தது. ஆனால் இந்த பாகத்தில் அதற்கு சுப மங்கலத்தை பாடிவிட்டார்கள். எனவே அடுத்தடுத்த பாகங்களில் ஆக்சன் காட்சிகள் இன்னும் பீதியூட்டும்படி இருக்கும் என நம்பலாம்.    முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் உணர்ச்சிகரமான காட்சிகள் அதிகம். சீரியல் கொலைகாரர் தனது மனநிலையைப் பற்றி பேசுவது, எடித்துடன் நட்பாக நினைப்பது, வெனோமுடன் எடித் ஈகோ பார்த்து சண்டை போடுவது என நிறைய பிரச்னைகள் படத்த