உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க்

உரையாடல் போல் அமைதியும் பொருள் கொண்டதுதான் தி சஸ்பெண்டட் ஸ்டெப் ஆப் தி ஸ்டோர்க் எட்னா ஃபைனாரு – 1991 ஆங்கிலத்தில்: டேன் ஃபைனாரு தமிழில்: லாய்ட்டர் லூன் தற்போது நீங்கள் ஒரு தொலைக்காட்சி நேர்காணலை நிறைவு செய்திருக்கிறீர்கள் – அதாவது தொலைக்காட்சி நிருபராக இருக்கும் முக்கிய கதாபாத்திரம் ஒருவர் குறித்து உருவாகியிருக்கும் உங்களது படத்தினைக் குறித்து உரையாடலாம். தொலைக்காட்சி பார்ப்பது என்பதில் உங்களுக்கு பெரிய ஆர்வம் இல்லை என்றே படுகிறது. ஒரு உண்மையைச் சொல்லட்டுமா? அண்மையில் தி பேட்டில்ஷிப் பொடம்கின் படத்தை தொலைக்காட்சியில் பார்க்க முனைந்தேன். ஆனால் அது விரைவிலேயே இயலாத ஒன்றாக மாறிவிட்டது. பெர்க்மன் படம் தொலைக்காட்சியில் பார்க்க பொருத்தமாக இருக்கும். வலிமையான உணர்ச்சிகள், ஏராளமான அண்மைக்காட்சிகள் என உள்ளே உள்ள விஷயங்களை அவை தொலைக்காட்சிக்கு மாற்றப்பட்டாலும் எதுவும் இழக்கப்படாது உயிர்பிழைக்கும் வாய்ப்புகள் இதில் அதிகம். ஆனால் ஒரு படம் மிகுதியான அளவு அமைதியை நீண்ட நேரம் கொண்ட இயற்கைக் காட்சிகளை வசனங்களுக்கு இணையா க கொண்டிருக்கும் படத்திற்கு தொலைக்காட்சி முழுமையாக நி