இடுகைகள்

தேன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சுக்கோ - கரடிகள்

படம்
  தெரிஞ்சுக்கோ – பழுப்பு நிற கரடிகள்   கரடிகள் தனிமையாக வாழ்பவை. மரம் ஏறும் திறன் பெற்றவை. ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா தவிர பிற பகுதிகளில் கரடிகளைப் பார்க்கலாம். கரடிகளில் 8 இனங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவில் வாழ்ந்த கரடி இனம் ஒன்பதாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்த கரடி இனம் அழிந்து போனது. துருவக்கரடிகள் வேட்டையாடுவதில் வெற்றிபெறும் சதவீதம் இரண்டு சதவீதத்திற்கும் குறைவு. தென் அமெரிக்காவில் வாழும் ஸ்பெக்டேக்ல்டு பியர் எனும் கரடி இனம், பழம், தாவரங்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்கிறது. இதன் உணவில் 5 சதவீதம் மட்டுமே இறைச்சி உண்டு. ஜெயண்ட் பாண்டா, தனது உடல் எடையில் 38 சதவீத அளவுக்கு மூங்கில்களை உண்கிறது. இப்படி சாப்பிடுவதை ஒரு நாளில் 10-16 மணிநேரம் செய்கிறது. உலகில் தற்போது 26 ஆயிரம் துருவக்கரடிகள்தான் உயிரோடு உள்ளன. ஸ்லாத் கரடி இனம், இந்தியா, இலங்கையில் வாழ்கிறது. இந்த கரடி இனம், தனது குட்டிகளை ஒன்பது மாதம் வரையில் தனது முதுகில் சுமந்து பராமரிக்கிறது. சன் பியர் எனும் கரடி இனம், 25 செ.மீ நீள நாக்கைக் கொண்டது. எதற்கு இந்தளவு நீளமான நாக்கு? தேன்கூட்டிலிருந...

வண்ணத்துப்பூச்சியை எப்படி பார்ப்பது? - இந்திய வண்ணத்துப்பூச்சியியலாளர்கள் நூலிலிருந்து....

படம்
  வண்ணத்துப்பூச்சி நடை!  வீட்டுத்தோட்டம், பூங்காக்கள், சாலையோரங்கள், குளக்கரை ஆகிய இடங்களில் வண்ணத்துப்பூச்சிகளைப் பார்ப்பது, வண்ணத்துப்பூச்சி நடை (Butterfly walk) ஆகும்.  காலையில் சூரியனின் ஒளிக்கதிர் பரவுவதற்கு முன்னர், வண்ணத்துப்பூச்சிகளை தாவர இலைகள், பூக்களில் பார்க்கலாம்.  வெயில் அதிகரிக்கும் நேரத்தில், வண்ணத்துப்பூச்சி உயரமான இடங்களில் உள்ள இலைகள், பூக்களில் இளைப்பாறும். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க ஆண்டின் இறுதி மாதங்களான அக்டோபர், நவம்பர் மாதங்கள் சரியானவை. இக்காலங்களில் இரைத்தாவரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுகின்றன. பிறகு, முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலையை உண்டபடியும், வளர்ந்த புழுக்கள் கூட்டுப்புழுவாகவும் மாறியிருப்பதையும் காணலாம்.  ஆண்டின் இறுதிக்குப் பிறகு இரண்டாவது பருவ காலமாக மார்ச் முதல் மே மாதம் வரையிலான காலகட்டம் உள்ளது. இக்காலத்தில் வண்ணத்துப்பூச்சிகளை அதிகம் காணலாம்.  பூக்கள், அழுகிய பழங்கள், பறவைகளின் எச்சம், கால்நடைகளின் சிறுநீர், சாணம், தாவரங்களின் சாறு, இறந்த  நண்டுகள் போன்றவையும் வண்ணத்துப்பூச்சிகளைக் கவர்கின்...

பிட்ஸ் - தேனீக்கள்

படம்
  பூமியில் 20 ஆயிரம் தேனீ இனங்கள் உள்ளன. அன்டார்டிகாவைத் தவிர்த்து அனைத்து கண்டங்களிலும் தேனீக்கள் வாழ்கின்றன. 2 மி.மீ. நீளத்திற்கும் குறைவான தேனீக்களும் உண்டு. இதில் பெரியது, 4 செ.மீ. நீளம் கொண்ட வாலஸ் ஜெயன்ட் பீ.  தேனீக்களில் சில இனங்களைத் தவிர பிற தேனீ இனங்கள் (Honey bees, bumble bees, stingless bees) காலனியாக ஒன்றாக இணைந்து வாழ்கின்றன.  5 கி.மீ. தூரத்திற்கும் அதிக தொலைவுக்கு பயணித்துச் சென்று தேனைச் சேகரித்து கூடு திரும்புகின்றன.  அனைத்து தேனீக்களும் தேனை சேகரித்து வைப்பதில்லை. 7 தேனீ இனங்களே தேனை சேகரித்து வைக்கின்றன.  9 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் தேனீக்களிடமிருந்து தேனைப் பெற்று வருகின்றனர். உலகில் நடைபெறும் 75 சதவீத மகரந்தச் சேர்க்கைக்கு தேனீக்களே முக்கியக் காரணம்.  National geographic kids Mar.2022

இயற்கைச்சூழலை மேம்படுத்துவதில் பட்டாம்பூச்சிகளின் பங்கு!

படம்
  இயற்கைச் சூழலை மேம்படுத்தும் பட்டாம்பூச்சி!  பட்டாம்பூச்சிகளைப் பார்த்தால் என்ன தோன்றும்? அன்பு, அழகு, மகிழ்ச்சி ஆகிய  உணர்ச்சிகளை மனதில் ஏற்படுத்தும். இந்த வகையில் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு கூட ஒருவருக்கு ஆறுதல் தரலாம். மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்கா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்வராலி கோகடேவும் இப்படித்தான் பட்டாம்பூச்சியால் ஈர்க்கப்பட்டார். இவர், புனேவில், அபாசாகேப் கார்வாரே கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் துறையில் படித்துக்கொண்டிருந்தார். அப்போதுதான் படிப்பில், கொரோனா பெருந்தொற்று குறுக்கிட்டது. இக்காலத்தில் தேவ்கட் தாலுக்காவில் உள்ள தனது கிராமத்திற்கு வந்தார் ஸ்வராலி. அங்குதான், தனது பேராசிரியர் ஆனந்த் பாத்யே அறிவுறுத்தல்படி பட்டாம்பூச்சிகளை ஆய்வு செய்யத் தொடங்கினார்.  தேவ்கட் பகுதியில், மரங்கள் வெட்டப்பட்டதால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கண்டறிந்தார். இதற்கு மரங்களை அழித்து கட்டுமானங்களை எழுப்பிவருவதும் முக்கியமான காரணம் என்பதை அறிந்து செயல்படத் தொடங்கினார். பட்டாம்பூச்சி லார்வா நிலையிருந்து கம்பளிப்பூச்சியாக மாறுவதைப் பார்த்து, அவற்றை பாதுகாக்க ...

தேனீக்களை குணமாக்கும் தேன்!

படம்
  தேனீக்களை  காப்பாற்றும் வேதிப்பொருள்!  தேனீக்களை பூச்சிக்கொல்லி, பருவநிலை மாறுபாடு என பல்வேறு விஷயங்கள் பாதிக்கின்றன. கூடுதலாக வாரோவா எனும் ஒட்டுண்ணி(Varroa destructor) தேனீக்களை கடுமையாக தாக்குகிறது. இது, தேனீக்கூட்டிலுள்ள புழுக்களை உணவாக உண்பதோடு, உடலிலுள்ள  வைரஸ்களை தேனீக்களின் காலனிக்கும் தொற்ற வைக்கிறது. இதில் ஏற்படும் தாக்குதலால் தேனீக்களின் இறகு கடுமையாக பாதிக்கப்படுகிறது. வளரும் நிலையில் உள்ள பூச்சிகளுக்கு இறகு வளர்ச்சியில்லாமல் போய்விடுகிறது.  வைரஸ் தேனீக்களின் நினைவுகளையும் பாதிக்கிறது. இதனால் கூட்டை விட்டு தேனை தேட கிளம்பிய வேலைக்கார தேனீ, வீட்டுக்கு திரும்ப முடியாது. எப்படி வருவது என்பதை மறந்துவிடுவதுதான் காரணம். உணவு கிடைக்காததால், தேனீக்களின் கூட்டமே நிலைகுலைந்து அழியும் நிலை உருவாகும்.  தேனீக்களை தாக்கும் வைரஸ்களை அழிக்கும் வேதிப்பொருளை தேசிய தைவான் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது. சோடியம் பூடைரேட் (Sodium butyrate) எனும் வேதிப்பொருளை தினசரி தேனீக்களுக்கு கொடுக்கும்போது அவை வலிமையாகின்றன. மனிதர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் போலவே இந்த வேதி...

இந்திய நிறுவனங்கள் சுகர் சிரப்பை தேனில் கலந்து விற்கும் கொடுமை! - கலப்பட வணிகத்தில் கொடி கட்டும் இந்திய நிறுவனங்கள்

படம்
                    கலப்படத் தேன் ! அ்ண்மையில் நாளிதழ்களில் டாபர் , மாரிகோ ஆகிய நிறுவனங்கள் தங்களின் தேன் தாயின் பாலைப் போல பரிசுத்தமானது என விளம்பரப்படுத்துவதை பார்த்திருப்பீர்கள் . அண்மையில் ஜெர்மனி நிறுவனம் செய்த என்எம்ஆர் சோதனையில் டாபர் தேன் தோற்றுப்போயுள்ளது . இந்த சோதனையில் சபோலாதேன் வென்றுள்ளது . ஆனால் இந்தியளவில் நடைபெறும் என்ஆம் ஆர் சோதனையில் டாபர் வென்றுள்ளது . எப்படி ? அதுதான் இந்தியன் மேஜிக் .   கலப்படம் செய்து சோதனையில் தோற்ற தேன் நிறுவனங்கள்! தேனில் நுணுக்கமாக கலக்கப்படும் சுகர் சிரப் சீனாவிலிருந்து தருவிக்கப்படுகிறது . இந்த நிறுவனங்கள் இதனை பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது . இந்தியாவின் உணவுத்தர அனுமதி ஆணையம் இதுதொடர்பான விதிகளை இயற்றினாலும் , சோதனைகள் லஞ்சங்களைப் பெற்றுக்கொண்டு நடத்தப்பட்டுள்ளன . இதனால்தான் 13 நிறுவனங்கள் பங்கேற்ற என்எம்ஆரில் சில நிறுவனங்கள் மட்டுமே பாஸாகி உள்ளன . இதனால் டாபர் நிறுவனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது . அதன் விளம்பரங்களில் உள்நாட்டில் சோதனைகளில் வென்ற ...

திருடித் தேன் குடிக்கும் கரடிகள் - உண்மை என்ன?

படம்
கரடிகளுக்கு தேன் மிகவும் பிடித்தமானதா? கரடிகள் வின்னி தி பூ சீரிஸ் எல்லாம் பார்ப்பதில்லை. அவை தேன் மட்டும் சாப்பிடுவதில்லை. தேன்கூட்டிலுள்ள தேனீக்களின் லார்வாவையும் உண்ணுகின்றன. காரணம், அதிலுள்ள புரதச்சத்து. அதற்காக தேனீக்கள் கரடிகளை விட்டு வைப்பதில்லை. கடிக்கும்தான். கரடியின் அடர்த்தியான முடி, தேனீக்களின் கடியிலிருந்து பெருமளவு காப்பாற்றுகிறது. கடந்த ஆண்டு  ஃபின்லாந்தில் கரடி, 370 பல்வேறு தேனீ பண்ணைகளுக்குள் புகுந்து வேட்டையாடின. இதன் விளைவாக விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடு வழங்கியது. இதற்கான தொகை  1 லட்சத்து 43 ஆயிரம் டாலர்கள். காட்டில் உணவின்றி கரடிகள் பண்ணைகளுக்குள் புகுகின்றன. மின்சார வேலி என்பது தற்காலிகமானதே. பசி வரும்போது, வீட்டில் இருப்பதை வைத்து நீங்களே சமைப்பீர்கள். அல்லது எதையாவது எடுத்துப்போட்டு சாப்பிடுவீர்கள். அதேதான் கரடி விஷயத்திலும்  நடந்தது. அது சாப்பிட்டது போக மீதியை நாம் எடுத்துக்கொள்வதே சரியானது. நன்றி: மென்டல் ஃபிளாஸ்

தேனீக்களைக் காப்பது எப்படி?

படம்
ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி தேனீக்களின் பெருக்கத்திற்கு நாம் எப்படி உதவுவது? பொதுவாக நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில்  வாங்கும் தேன் அனைத்தும் இறக்குமதி ரகத்தைச் சேர்ந்தவை. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு காசு தவிர வேறெந்த லாபமுமில்லை. குறிப்பாக, சீனாவிலிருந்து பெருமளவில் தேன் இறக்குமதியாகி வருகிறது. தேனை அறுவடை செய்வதால் தேனீக்களுக்கு பிரச்னையில்லை. நீங்கள் தேனீக்களுக்கு உதவுவது என்றால், பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வலியுறுத்தலாம். அதுவே தேனீக்களைக் காக்கும். தேனை கடையில் வாங்கும்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்க எந்த கலப்படமில்லாத, சுவையூட்டி சேர்க்கப்படாத தேனை வாங்கலாம். நன்றி: பிபிசி image:  exchange.prx.org