திருடித் தேன் குடிக்கும் கரடிகள் - உண்மை என்ன?




ronniechua/iStock via Getty Images



கரடிகளுக்கு தேன் மிகவும் பிடித்தமானதா?


கரடிகள் வின்னி தி பூ சீரிஸ் எல்லாம் பார்ப்பதில்லை. அவை தேன் மட்டும் சாப்பிடுவதில்லை. தேன்கூட்டிலுள்ள தேனீக்களின் லார்வாவையும் உண்ணுகின்றன. காரணம், அதிலுள்ள புரதச்சத்து. அதற்காக தேனீக்கள் கரடிகளை விட்டு வைப்பதில்லை. கடிக்கும்தான். கரடியின் அடர்த்தியான முடி, தேனீக்களின் கடியிலிருந்து பெருமளவு காப்பாற்றுகிறது.

கடந்த ஆண்டு  ஃபின்லாந்தில் கரடி, 370 பல்வேறு தேனீ பண்ணைகளுக்குள் புகுந்து வேட்டையாடின. இதன் விளைவாக விவசாயிகளுக்கு அரசு, நஷ்ட ஈடு வழங்கியது. இதற்கான தொகை  1 லட்சத்து 43 ஆயிரம் டாலர்கள்.

காட்டில் உணவின்றி கரடிகள் பண்ணைகளுக்குள் புகுகின்றன. மின்சார வேலி என்பது தற்காலிகமானதே. பசி வரும்போது, வீட்டில் இருப்பதை வைத்து நீங்களே சமைப்பீர்கள். அல்லது எதையாவது எடுத்துப்போட்டு சாப்பிடுவீர்கள். அதேதான் கரடி விஷயத்திலும்  நடந்தது. அது சாப்பிட்டது போக மீதியை நாம் எடுத்துக்கொள்வதே சரியானது.

நன்றி: மென்டல் ஃபிளாஸ்