அட்மிஷன் நேரத்து ஆபத்து! - மக்கப் மகேஷ்கள் வேண்டாம் - சேட்டன் பகத்



Image result for indian education tragedy


அட்மிஷன் நேரத்து முட்டாள்தனம்!

Image result for extrovert

பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்க்கும் நேரம் இது. டெல்லி பல்கலைக்கழகம், சில இடங்கள் மட்டுமே அங்கு உள்ளது என்று கூறியுள்ளது. நாளிதழ்களில் நிறைய விளம்பரங்கள் இடைவிடாமல் வருகின்றன. அவற்றில் பலவும் அட்மிஷன் தங்கள் கல்லூரிகளில் நடைபெறுகிறது. விரைவீர் என தங்க நகைக்கடை போல விளம்பரங்கள் கொடுக்கின்றனர். இதனால் என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை.

டெல்லி பல்கலைக்கழகம் போன்ற கல்வி அமைப்புகள் சிறிதேனும் விதிவிலக்கான முயற்சிகள் ஏதேனும் செய்யலாம். இப்போது, இரண்டு மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அம்மாணவருக்கு நிறைய திறன்கள் உண்டு. என்எஸ்எஸ் அமைப்பில் இருக்கிறார். பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கிறார். நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஆர்வம் உண்டு. இவர் பள்ளியில் பெற்ற மதிப்பெண்கள் 87 சதவீதம்தான். ஆனால் இன்னொரு மாணவருக்கு இத்திறன்கள் ஏதும் கிடையாது. பள்ளிக்குச் செல்வார். அதைவிட்டு வீட்டுக்கு வருவார். அவர் 94 சதவீதம் மதிப்பெண்கள் பெறுகிறார். இவர்களில் யாருக்கு பல்கலையில் இடம் கிடைக்கும்? 94 சதவீதம் மதிப்பெண் எடுத்தவருக்குத்தானே.
Image result for extrovert




பாடம் மட்டுமே வாழ்க்கை என்பவர் படித்து வெளிவரும்போது சமூகத்திற்குத்தான் ஆபத்து. அவருக்கு அவர் செய்யும் வேலை முக்கியம். அதோடு, அதில் கிடைக்கும் பணம் மட்டுமே பிரதானமாக  கண்ணுக்குத் தெரியும். மற்ற விஷயங்கள் பற்றி அவருக்குத் தெரியாது. தெரியாது என்பதோடு தெரிந்துகொள்ள ஆர்வம் இல்லை என்பது மிக ஆபத்தானதுதானே. இன்று பல்கலைக்கழகங்களில் மதிப்பெண்களைக் குவித்து பதக்கங்களைப் பெறுபவர்களைப் பற்றி படிக்கும்போதெல்லாம் மனம் அதிர்ந்துபோகிறது.

நாம் இம்மாணவர்களை வெறுக்கவில்லை. ஆனால் ஒருவருக்கு தான் சார்ந்த சமூகம் பற்றிய அக்கறை இயல்பாக வரவேண்டும். அப்படி இல்லையெனில் அது ஆபத்து என்கிறேன். கல்வியும் அப்படி அமையவேண்டும்.

மற்ற மாணவர்களையும் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும். அவர்கள் டெல்லி பல்கலைக்கழகம் போன்ற இடத்தில் படிக்கும்போது அவர்களுக்கும் பிற மாணவர்களுக்கும் நிறைய விஷயங்கள் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். சில கல்வி நிறுவனங்களேனும் இதில் ரிஸ்க் எடுத்து தேர்வு முறையை மாற்றலாம். எப்போதும் மார்க், கட் ஆஃப் என மாணவர்களை மதிப்பிடுவது ஆபத்தான வழிமுறை. இது காலாவதியான தேர்வு முறை என்பதற்கு நிறைய எடுத்துக்காட்டுகளைப் பார்க்க முடியும். பாடம் சிறிதும், மனிதர்கள் பலவும் கற்றுத்தருவார்கள். கல்வி என்பது வேலைக்குச் செல்வதற்கான திறனை வளர்ப்பதல்ல. அது சமூகத்தில் நீங்கள் வாழ்வதற்கான அடிப்படை அறிவைக் கற்றுத்தருகிறது. மக்கப் செய்யும்போது, இந்த விஷயம் பலருக்கும் புரிபடாது.

மக்கப் மகேஷ்களால் அவர்களுக்கு மட்டுமே நல்லது செய்துகொள்ள முடியும். சமூகத்திற்கு நயாபைசா பயனில்லை. காரணம், மக்களைச் சந்தித்து அவர்களைப் புரிந்துகொள்பவர்களால்தான் மாற்றங்கள் சாத்தியம். தனியாக இருப்பதும் சிந்திப்பதும் தவறல்ல; ஆனால் அதனை எடுத்துச்சொல்ல நண்பர்கள் தேவை. மக்களிடம் கூறவோ தைரியமும், திறனும் தேவை. அவை இல்லாதவர்களின் யோசனைகள் அவர்களின் மூளையில் அடக்கமாகிவிட வாய்ப்புள்ளது.

இதில் கல்வி நிறுவனங்களும் அரசும் வேகமாக யோசித்து மாற்றங்களைச் செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் நம் இந்தியாவின் வளர்ச்சி நிலைத்ததாக இருக்காது.

சேட்டன் பகத்தின் மேக்கிங் இந்தியா ஆசம் நூலைத் தழுவியது.










பிரபலமான இடுகைகள்