பொழுதுபோக்குத்துறையில் சாதித்த ஓரினச்சேர்க்கையாளர்! - எலன்



Image result for ellen degeneres




மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள்!

எலன் டிஜெனரெஸ்

அறிமுகம்

எலன், பொழுதுபோக்குத் துறையில் நாடறிந்த பிரபலம். 1994 ஆம் ஆண்டு, தி டுநைட் ஷோ வித் ஜானி கார்சன்  என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு டிவியில் முக்கியமான நேரத்தில் வரும் தொடரில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்தார். இச்சமயத்தில் இவரின் பாலினம் பற்றி அறிந்த மரபான கிறிஸ்தவர்கள், எலனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

தி எலன் டிஜெனரெஸ் ஷோ நிகழ்ச்சியிலிருந்து இவர் இந்த ஆண்டு விடைபெறுகிறார் என்று கிசுகிசுக்கிறார்கள். 

அமெரிக்காவில் 1958 ஆம் ஆண்டு பிறந்த எலனுக்கு இன்று 61 வயதாகிறது. பல்வேறு டிவி, நிகழ்ச்சிகள், அனிமேஷன் படங்களுக்கு டப்பிங், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என இவர் வெகு பிரபலமான ஆள். அமெரிக்காவின் லூசியானாவிலுள்ள மெடாய்ரே நகரில் பிறந்தவர். தாய், பேச்சுக்கலை பயிற்சியாளர். தந்தை, காப்பீட்டு முகவர். 1973 ஆம் ஆண்டு இவரது தாய், தந்தையை விவகாரத்து செய்துவிட்டு மறுமணம் செய்தார். புதிய தந்தையுடன் சென்ற எலன், அவரால் சில ஆண்டுகளுக்குப் பிறகு வல்லுறவு செய்யப்பட்டார். பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்தவர் தன்னை அடையாளம் காண முற்பட்டார். சிறிய கிளப்புகளில் ஸ்டாண்ட்அப் காமெடி செய்ய முயன்றார். 1984 ஆம் ஆண்டு நாடெங்கும் சென்று காமெடி நிகழ்ச்சிகளை செய்து பிரபலமானார். 

1997 இல் தன் பாலினம் பற்றி ஓப்ரா வின்ப்ரே நிகழ்ச்சியில் வெளிப்படையாக அறிவித்து விட்டார் எலன். பல்வேறு உறவுச்சிக்கல்களை எதிர்கொண்டாலும் தனக்கு விருப்பானவரைத் தேடி மணந்தும் கொண்டார். போர்ட்டியா டி ரோசி என்ற பெண்ணை மணக்க நீதிமன்றப் போராட்டமும் செய்தார். இறுதியில் வென்றார். 

தன் நிகழ்ச்சி வழியாக வீகன் உணவுக்கான பிரசாரமும் செய்து வருகிறார். பல்வேறு விலங்கு அமைப்புகளுக்கு நிதி அளித்து அவற்றைக் காக்கவும் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்து வருகிறார். 

நன்றி: அவுட்.காம்
தமிழில்: வின்சென்ட் காபோ

பிரபலமான இடுகைகள்