தெரிஞ்சுக்கோ - க்ரீன்லாந்தை அமெரிக்கா வாங்கினால் என்ன விலை கொடுக்கும்?



Image result for gif greenland ice








தெரிஞ்சுக்கோ!


பனிப்பிரதேசத்தில் அமைந்துள்ள தன்னாட்சி அதிகாரம் பெற்ற நாடு க்ரீன்லாந்து. இதனை நாம் பேசக்காரணம், அமெரிக்க அதிபர் ட்ரூமேன் முதல் இன்று டிரம்ப் வரை அதனை வாங்கும் ஆசையை வெளிப்படுத்துவதுதான். அப்படியென்ன இந்த நாட்டில் இருக்கிறது?


இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கை 57 ஆயிரம்

க்ரீன்லாந்தின் அளவு எட்டு லட்சத்து 36 ஆயிரத்து 300 சதுர மைல்கள்.

க்ரீன்லாந்திலுள்ள மூன்று இடங்கள், யுனெஸ்கோவினால் பாரம்பரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜூலை 2019 அன்று 12.5 பில்லியன் டன்கள் பனிக்கட்டி உருகி கடலில் சேர்ந்தது. இது பனிக்கட்டி உருகுதலில் தனிப்பட்ட அளவில் அதிக அளவாகும்.

க்ரீன்லாந்திலுள்ள சுறா ஒன்றின் தோராய  வயது 272.

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரூமன் க்ரீன்லாந்தை வாங்க கொடுப்பதாக கூறிய தொகை 100 மில்லியன் டாலர்கள். இன்று அதன் மதிப்பு 500 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடலாம்.

1972 ஆம் ஆண்டு முதலாக 11 க்வாட் ட்ரில்லியன் பவுண்டுகள் நீரை, க்ரீன்லாந்து இழந்துள்ளது.

நன்றி: க்வார்ட்ஸ்