சக்திவாய்ந்த இந்தியப் பெண்கள்! - பிசினஸ் டுடே கௌரவம்!





Image result for nadia chauhan
நாடியா சௌகான், பார்லே அக்ரோ




பிசினஸ் டுடே சக்தி வாய்ந்த பெண்கள் என்ற அட்டைப்பட கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சாதித்த பெண்கள் இளம் தலைமுறையினருக்கு என்ன சொல்கிறார்கள்?

ஃபால்குனி நாயர், நிறுவனர், நைகா.

பெண்கள் உயர்பதவிகளை அடைய தங்களை அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் நிறுவனத்தின் முக்கியமான பதவிகளைப் பெறமுடியும். உங்கள் விதி நீங்கள் சுமக்கும் பொறுப்பில்தான் இருக்கிறது.

மைலீட் அகா வில்லியம்ஸ், தெற்காசியத் தலைவர், பிபிசி ஸ்டூடியோஸ்

பெண்ணாக நீங்கள் பணியில் நிறைய போராட வேண்டும். உங்கள் வேலை தரும் சுதந்திரத்தை நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் உங்கள் குழுவில் உள்ளவர்களுக்கு அதனால் பாதிப்பு ஏற்படக்கூடாது. குழுவில் உள்ளவர்களையும் அரவணைத்துச் செல்லும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ளவேண்டும்.


நாடியா சௌகான், தலைவர், பார்லே அக்ரோ

இன்று தொழில்துறையில் பெண்கள் முன்னேற நிறைய வாய்ப்புகள் உள்ளன. தேவை கொஞ்சம் ஆர்வமும், உழைப்பும்தான். உங்கள் உழைப்பே உங்களின் பெயரை பிறருக்குச் சொல்லும்.

அபூர்வா புரோகித், தலைவர் ஜாக்ரன் குழுமம்

பெண்கள், தம்மை புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான்  தொழில்துறையில் தங்களை தக்க வைத்துக்கொண்டு நிரூபிக்க முடியும்.

அபந்தி சங்கரநாராயணன், டியாகோ நிறுவனம்

பெண்கள் முதலில் தாங்கள் செய்யும் தொழிலில் நேர்த்தியைக் கற்கவேண்டும். அதுதான் முதல் தகுதி. சிக்கலான சூழ்நிலைகளை எப்படி சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கு பதவி உயர்வு உட்பட வெற்றிகள் கிடைக்கும்.


நன்றி: பிசினஸ் டுடே.