அரசின் அநீதியால் உயிர்துறந்த கணினி மேதை - ஆலன் டூரிங்!
மாற்றுப்பாலின சாதனையாளர்
ஆலன் டூரிங்
கணினி சாதனையாளர். இன்று அமேசான், கூகுள் எல்லாம் கோயில் கட்டி வழிப்படும் அளவுக்கு ஏ.ஐ விஷயங்களைச் செய்தவர். என்க்ரிப்ஷன் முறைகளைக் கண்டுபிடித்தவர். ஜெர்மனியைத் தோற்கடிக்க பிரிட்டிஷாருடன் இணைந்து உழைத்தார். ஆனால் அதற்கு பரிசாக பிரிட்டிஷ் அரசு, எதிரிக்கு உதவினார் என்ற பெயரில் ஆலனைக் கைது செய்து சிறையில் அடைத்தது. எழுத்தாளர் ஆஸ்கர் வைல்டும் இதேபோல் அப்போது கைது செய்யப்பட்டிருந்தார்.
அரசு அவரின் திறமையை விட தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டியெடுக்க முயன்று வெற்றியும் பெற்றது. இதன்விளைவாக ஆலன், இன்னொருவருடன் வைத்திருந்த ஓரினச்சேர்கை உறவு வெளிவர, மக்களால் இகழப்பட்டார். இதனால் இரண்டே ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்து இறந்தார். சயனைடு அவரின் படுக்கையறையில் இருந்து பெறப்பட்டது.
அன்று ஓரினச்சேர்க்கையாளர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என்று கருத்து நிலவி வந்தது. இதனை நியாயப்படுத்த பிரிட்டிஷ் அரசு, அவரின் மனநிலை சரியில்லை என்று கூறியது. அவர் தற்கொலை செய்துகொண்டது உண்மை. அதற்கான காரணம் என்ன என்று உறுதியாக தெரியவில்லை என்று அரசு கூறிவிட்டது.
ஆனால் அரசின் அதிகாரிகள் இதன் பின்னால் உள்ளனர் என்று நாளிதழ்கள் கிசுகிசு எழுதின. 2009 ஆம் ஆண்டு ஆலன் டூரிங்கிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பிரதமர் கார்ட் ப்ரௌன் மன்னிப்பு கோரினார். பின்னர் அரசு 2013 ஆம்ஆண்டு விருது கொடுத்து தன் குற்றவுணர்ச்சியை சமாளித்துக்கொண்டது.
ஆங்கில மூலம் அவுட்.காம், பிரிட்டானிகா.காம்
தமிழில் - வின்சென்ட் காபோ