அழுக்கு நல்லதா? கெட்டதா?




Hygiene: Is there such thing as 'too clean'? © Getty Images





மிஸ்டர் ரோனி

படுசுத்தமாக சிலர் இருக்கிறார்கள். சிலர் சோப்புகளை பயன்படுத்தினால் அலர்ஜி என்கிறார்கள். எதுதான் சரி?

பொதுவாக சுத்தம் என்பது டெட்டால் பாட்டிலை 25 ரூபாய்க்கு வாங்கி வந்து நீரில் கலந்து குளித்தால் வருவதல்ல. இயற்பாக உடலில் தோன்று இறந்த செல்களை அகற்ற குளித்தால் போதும். ஏன் சோப்பு போட்டு குளிக்கிறோம் என்றால் செல்களுடன் எண்ணெய் பிசுக்கையும் அகற்றவே.

நமது தோலில் எவ்வளவுதான் அகற்றினாலும் போகவே போகாத ஆயிரம் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் பூஞ்சைகள் உண்டு. கடுமையான உடல் உழைப்பில் அல்லது வெயிலால் வெளிவரும் வியர்வைக்கு பொதுவாக மணம் கிடையாது. ஆனால் உடலிலுள்ள பாக்டீரியாக்கள் அதில் செய்யும் சில வேதிவினை வேலைகளால் அதில் வாசனை உருவாகிறது. இதனை நாற்றம் வீச்சம் நெடி என வைத்துக்கொள்ளுங்கள்.

தோலில் வாழும் பாக்டீரியாக்கள் ஹாலிவுட் பல சைக்கோ வில்லன்களல்ல. அவை, ஸ்டாபைலோகாக்கல், ஸ்ட்ரெப்டோகாக்கல் ஆகிய பாதிப்புகளையும் தடுக்கிறது. குளிப்பது தவறில்லை. தரமான டிஎஃப்எம் அதிகமுள்ள சோப்புகளை வாங்கி குளியுங்கள். அவ்வளவுதான்.

-பிபிசி





பிரபலமான இடுகைகள்