பெட்டிங் அப்பாவைக் காப்பாற்றும் குடும்ப காதல் காவியம் - ஜோடி!
ஜோடி - தெலுங்கு
இயக்கம் விஸ்வநாத் அரிகெலா
ஒளிப்பதிவு விஸ்வேஸ்வர் எஸ்.வி
இசை - பானி கல்யாண்
ஆதி சாய்குமார் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், நரேஷ், கொல்லப்புடி மாருதி ராவ்
ஆஹா!
ஆதி, ஷ்ரத்தா, நரேஷ், கொல்லப்புடி மாருதிராவ், பானி கல்யாண் இசை ஆகியவற்றைச் சொல்லலாம்.
ஐயையோ!
அடிக்கடி காணாமல் போகும் வில்லன் அவினாஷ். கதையில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் பணத்தை மட்டுமே தடையாக வாழ்வில் எதிர்கொள்ளுவது. மெலோடிராமா கதை. சிலசமயம் படம் பார்க்கிறோமா இல்லை சீரியல் பார்க்கிறோமா என்று தோன்றுகிறது.
கிரிக்கெட் பெட்டிங்கால் விளையும் விபரீதங்கள், பலியாகும் உயிர்கள், பிரச்னைதான்.
அதற்குள் காதலை நுழைத்திருக்கிறார்கள். அப்போதுதானே அழகான பானி கல்யாணின் பாடல்களை அங்கு வைக்க முடியும். ஓகே. புர்ர கதா படத்திற்கு இந்தப்படம் எவ்வளவோ தேறலாம். ஆதி முன்னேறி வர வாய்ப்புள்ளது. என்ன முடியுமோ அந்தளவு செய்திருக்கிறார். நரேஷ், ஆதி இருவருக்குமிடையேயான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. ஷ்ரத்தா - ஆதி காதல் காட்சிகள் ஆஹா சொல்ல வைக்கின்றன. உறவுகள் முக்கியம், அவர்களுக்காக நேரம் செலவிடவேண்டும் என்கிற மெசேஜ் அமுதம்.
அனைத்து கதாபாத்திரங்களும் எந்த இடத்திலும் இன்னொருவரை படுமோசமாக திட்டவில்லை. வில்லன் கூட பணம் மூலம் மிரட்ட நினைக்கிறாரே ஒழிய பெரியளவு வன்மம் கொண்டு ஆதியை துரத்தவில்லை. எனவே ரிலாக்சாக நல்லதே நினைப்போம். அதைவிட நல்ல கிளைமேக்சாக வரும் என பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே படம் பார்க்கலாம். பெரிய அதிர்ச்சி, க்ரைம் திருப்பங்கள், உளவியல் யூடர்ன் என்ற பீதி இல்லாமல் நிதானமாக படம் பார்க்க ஜோடியைத் தேர்ந்தெடுக்கலாம்.
கோமாளிமேடை டீம்