இடுகைகள்

ஓவியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுயநலமான காரியக்காரர்களால் நண்பருக்கு ஏற்பட்ட துயரம்!

படம்
  சில உறவுகளை நாம் தேடிச்செல்கிறோம். சில உறவுகள் நம்மைத் தேடி வருகின்றன. என்னைப் பொறுத்தவரை நம்மைத் தேடி வரும் உறவை முக்கியமாக பார்க்கிறேன். அதில் நாம் ஏற்பவையும் குறைவுதான். அனைத்தும் நமது குணநலன்களுக்கு ஏற்ப இருப்பதில்லை. கார்ட்டூன் கதிரை நான் முதல்முறையாக முரசு அலுவலகத்தில் பார்த்தபோது எனக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. இவரின் திறமையை நாம் நிச்சயம் நல்லமுறையில் பயன்படுத்தவேண்டும் என நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கு இருந்த சூழலில் அவருக்கு அதிக நம்பிக்கையைத் தர முடியவில்லை. ஆனால் அவரின் வலைப்பூ சென்று சோதித்துப் பார்த்தேன். நான் அப்படி செய்தது ஆசிரியர் தூயவருக்கு பிடிக்கவில்லை என்பது பின்னர்தான் தெரிந்தது. ஆனால் எதையும் லட்சியம் செய்யும் நிலையில் இல்லை. இப்படியொரு திறமைசாலி ஏன் உளுத்துப்போன இதழுக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்போது கார்ட்டூன் கதிரவனுக்கு, சாதி சார்ந்து இயங்கும் பத்திரிகையில் வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை தோன்றியிருக்கிறது. பின்னாளில் அது தவறான முயற்சி என உணர்ந்திருப்பார்.  கார்ட்டூன் கதிரவன் பதினைந்து நாட்களில் மயிலாப்பூரில் உள்ள தினசரியில் வேலைக்கு சேர்ந்ததைப் ப

மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவிய நரம்பியலாளர்! கோர்பினியன் பிராட்மன்

படம்
  கோர்பினியன் பிராட்மன் (Korbinian Brodmann 1868-1918) ஜெர்மனியின் தெற்குப் பகுதியில்  பிறந்தவர் பிராட்மன். பெற்றோர் ஜோசப் பிராட்மன், சோபி பேங்க்லர். நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களில் படித்து, 20 வயதில் மருத்துவப்படிப்பை நிறைவு செய்தார். தனது 30வது வயதில் உளவியல், நரம்பியல் ஆகிய துறைகளில் கவனம் செலுத்த தொடங்கினார். அப்போது அலாயிஸ் அல்சீமர் என்பவர், டிமென்ஷியா நோய்க்காக பிராட்மன்னை சந்தித்தார்.  பெர்லினில் உள்ள தனியார் ஆராய்ச்சிக்கூடத்தில் அல்சீமரின் செரிபிரல் கார்டெக்ஸ்  பகுதியை ஆராய்ந்தார். வோக்ட் (Vogt), எடிங்கர் (Edinger), வெய்கெர்ட்( Weigert) ஆகிய மருத்துவர்களால் பிராட்மன் ஊக்கப்படுத்தப்பட்டார். 1910ஆம் ஆண்டு டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். கூடுதலாக, பல்கலைக்கழக உளவியல் மருத்துவமனையிலும் முக்கிய பங்கு வகித்தார். பிறகுதான், மருத்துவ ஆராய்ச்சியில் முழுக்க இறங்கினார்.  நுண்ணோக்கி மூலம் மூளையின் செரிபிரல் கார்டெக்ஸ் பகுதியை ஆராய்ந்து வரைபடமாக்கும் முறையை உருவாக்கினார். ஆராய்ச்சியாளர்கள் மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்ள உதவியதில் நரம்பியலாளரான பிராட்மனி

ஓவியத்தில் நிறைய பரிசோதனை முயற்சிகள் அவசியம் ! ராதிகா ஷேக்சரியா - ஓவியக்கலைஞர்

படம்
  ராதிகா ஷேக் சரியா  ஓவியக்கலைஞர் 20 ஆண்டுகளாக ஓவியக்கலைஞராக ராதிகா ஷேக் சரியா பணியாற்றி வருகிறார். கோரக்பூரில் பிறந்து வளர்ந்தவர், சிறுவயதிலிருந்தே கலையின் கைபிடித்து வளர்ந்தவர். ரூமியின் கவிதைகளை ஓவியங்களாக வடிவமைக்க முயன்று வருகிறார். தற்போது அக்ரிலிக் ஓவியங்களை வரைந்து வருகிறார்.  கலை மீதான காதலைப் பற்றிச் சொல்லுங்கள்.  சிறுவயது முதலே பெயின்ட் பிரஷ் மீது காதல் பிறந்துவிட்டது. தொடக்க காலத்தில் நான் நிறைய நிறங்களை பரிசோதித்து வந்தேன். இதில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்தேன்.  பிறகு எனக்கு திருமணமானபோது நான் மும்பைக்கு இடம்பெயர்ந்தேன். ஜேஜே கலைப்பள்ளியில் ஓவியத்தை பயின்றேன். இதற்குப் பிறகு நான் வரைந்த ஓவியங்களை மிராயா என்ற பெயரில் ஓவியக் கண்காட்சியாக வைத்தேன்.  நடிகை ராகேஸ்வரி என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு, அதில் ஆன்மிகத்தன்மை இருக்கிறது என்று விமர்சனம் செய்தார். அவர்தான் ரூமியை வாசி என்று கூறினார்.  பிறகுதான் என்னுடைய பயணம் ரூமியுடன் தொடங்கியது. அதில் வாழ்க்கைக்கான கொண்டாட்டம், ஒற்றுமை, பேரானந்தம் என நிறைய விஷயங்கள் இருந்தன.  உங்களுடைய ஆன்மிகம் தொடர்பான கலை கண்காட்சி பற்றி சொல

அனிமேஷன் உலகம் - சுதந்திரமாக இயங்கும் உலகில் சாதிக்கும் இயக்குநர்கள்

படம்
  லவ்விங் வின்சென்ட் இயக்குநர்கள் வெல்ச்மேன் - கோபியலா டேஷ் ஷா தனது திரைப்படத்திற்கு ஒரு சிறிய காட்சிக்கு தேவையான நடிகரை தேடிக்கொண்டிருந்தார். இவர் அமெரிக்காவில் வசிப்பவர். கிராபிக் நாவலை எழுதுபவர் இப்போது திரைப்படங்களை எடுத்து வருகிறார். சிறிய காட்சிக்கான நடிப்பை இவரது நட்பு வட்டத்தில் உள்ள ராஜ் என்பவரே கொடுத்திருக்கிறார்.  ராஜின் முழுப்பெயர், ராஜேஷ் பரமேஷ்வரன். இவர் இந்திய அமெரிக்க எழுத்தாளர். சென்னையை பூர்விகமாக கொண்டவர், ஐ யம் எக்சிகியூஸ்னர் என்ற நூலை எழுதியிருக்கிறார். ஷாவின் படம் 34 ஆவது டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டிருக்கிறது.  ஷா தனது படங்களுக்கு தேவையான நடிகர்களை அதற்கென உள்ள நடிப்பு குழுக்கள், நண்பர்கள் வட்டாரம் ஆகியவற்றிலிருந்து தேர்ந்தெடுத்து வருகிறார். இன்று எடுக்கும் பல்வேறு அனிமேஷன் படங்கள் அனைத்துமே தொழில்நுட்ப வளர்ச்சியால் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன. தனி உலகமாக சிறந்த முறையில் சுதந்திரமாக செயல்படுகிறது என்பது முக்கியமானது.  பாம்பே ரோஸ், லவ்விங் வின்சென்ட் போன்ற கடுமையான உழைப்பை கோரும் படங்கள் முதல் டிஸ்னியால் எடுக்கப்படும் டாய் ஸ்டோரி, இன்சைட் அவுட்

ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  ஊக்கப்படுத்துங்க ப்ரோ? பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும்.  செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி? திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார்.  பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உடனே மூக்கு விடைத்து

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்

குறுகிய தேசியவாத நோக்கில் கலை வரலாற்றைப் பார்க்க கூடாது! - பிரதாம் ஆதித்யபால், எழுத்தாளர்

படம்
  பிரதாப் ஆதித்ய பால் பிரதாப் ஆதித்ய பால் கல்வியாளர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ, பிஹெச்டி படித்தவர். 1967ஆம் ஆண்டு போஸ்டனில் உள்ள கலை அருங்காட்சியகத்தை நிர்வகிக்குமாறு பணிக்கப்பட்டார். சிகாகோவில் உள்ள கலை கழகத்திற்கு வருகை தரும் ஆசிரியராக 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அறுபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவை பெரும்பாலும் கலை தொடர்பானவைதான்.  2009ஆம் ஆண்டு இவருக்கு ஒன்றிய அரசு பத்ம ஸ்ரீ விருதுகொடுத்து கௌரவித்தது.  கலை வரலாறு பற்றிய படிப்பில் ஏன் இந்தியா பின்தங்கியுள்ளது? இந்தியாவில் கலை வரலாறு பற்றி படிப்பது பொருளாதார ரீதியாக பயன் கொடுக்குமாறு இல்லை. வசீகரமானதாகவும், பொருளாதார ரீதியாகவும் கலை வரலாறு சிறப்பாக இருந்திருக்குமானால், அசல் எது, போலி எது என அறிந்து சொல்லக்கூட கலை வல்லுநர்கள் யாரேனும் இருந்திருப்பார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி யாரும் உருவாகவில்லை. கலை தொடர்பாக பட்டம் பெற்றிருந்தாலும் புத்திசாலியாக இருந்தாலும் கூட கலை தொடர்பான அத்தனை விஷயங்களிலும் திறமை பெற்றவராக சாதித்துவிட முடியாது. இந்தியா மட்டுமல்ல. இங்கு நிறைய வேறுபாடுகள் கொண்ட கலைத்தன்மை வடிவங்கள் இருப்ப

டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகரிக்குமா?

படம்
பதில் சொல்லுங்க ப்ரோ? அருங்காட்சியகங்களில் ஃபிளாஷ் போட்டு போட்டோ எடுப்பதை எதற்கு தடை செய்திருக்கிறார்கள்? இந்தியாவில் எப்படியோ, வெளிநாடுகளில் ஃபிளாஷ் போட்டு புகைப்படம் எடுக்க கூடாது என்பதை உறுதியான விதியாக வைத்திருக்கிறார்கள். இதன்மூலம்,  அருங்காட்சியகங்களிலுள்ள தொன்மையான ஓவியங்கள் பாதுகாக்கப்படுகின்றன. ஒவியங்களிலுள்ள வண்ணங்கள் வெளிச்சத்துடன் வினைபுரியும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளன. இவை ஃபிளாஷில் வரும் ஒளியோடு சேர்ந்து வினைபுரிவதால் ஓவியம் அழிய வாய்ப்புள்ளது. எனவே, புகைப்படம் எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக ஓவியம் அச்சிடப்பட்ட அஞ்சல் அட்டை, புகைப்படங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லுகிறார்கள்.  டிவி பார்ப்பதால் கார்பன் அளவு அதிகமாகுமா? இன்று டிவி மட்டுமல்லாது இணையம் கூட வேகமாக ஸ்ட்ரீமிங் சேவைகளை தந்து வருகிறது. சன்டிவி, விஜய், கலர்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகியவற்றை ப் பார்த்தால் ஒரு மணிநேரத்திற்கு 56 கிராம் கார்பன் உருவாகிறது என பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்படியே தினசரி பார்த்தால் ஆண்டுக்கு 41 கி.கி அளவுக்கு கார்பன் வெளியாகிறது என கொள்ளலாம்.  சயின்ஸ் போகஸ்  

கலைத்துறையில் சாதித்த இந்தியா! இந்தியா 75

படம்
  கலைகளில் சாதனை சாகித்திய அகாதெமி, இந்தியாவில் நூல்களை பல்வேறு மொழிகளில் வெளியிட்டு வரும் நிறுவனம். இந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 1953ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் கலாசாரங்களை சாகித்திய அகாதெமி ஒன்றிணைக்கிறது. இதுவரை ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை பதிப்பித்திருக்கிறது. ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், இளைய எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்களை கௌரவித்து வருகிறது. போடோ, டோக்ரி, கொங்கணி போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் பொக்கிஷங்களையும் அனைவரும் அறியும்படியாக மொழிபெயர்க்கும் பணியை சாகித்திய அகாதெமி செய்கிறது.  தூர்தர்ஷன் அறிமுகம் இன்று அனைவரும் ஓடிடியில் வெளியாகும் படங்களை பார்க்கவும், இணையத்தில் உள்ள வெப் சீரிஸ்களையும் பார்த்து வருகிறோம். ஆனால் இந்தியாவில் தொடக்கத்தில் தூர்தர்ஷன்தான் அனைவருக்கும் ஒரே டிவியாக இருந்தது. 1959ஆம்ஆண்டு தூர்தர்ஷன் தொடங்கப்பட்டது. பல்வேறு தொலைக்காட்சிகளை தொடங்கி மூடினாலும் கூட தூர்தர்ஷனிடன்  21 சேனல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது. கிராமங்களில் தூர்தர்ஷன் மட்டுமே ஒரே டிவியாக முதலில்

தந்திரமான ஆட்களை எதிர்கொள்வது கடினமாக உள்ளது! - கடிதங்கள்

படம்
               பெண்களை மயக்கும் காமம்! - பரந்தாம ராஜூவின் வேட்கை   அன்புத்தோழர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? அஞ்சல் அட்டையில் எழுதுவது பற்றி நண்பர்களுக்கு நிறைய மாற்றுக்கருத்துகள் உள்ளன . அதனை யாரும் எளிதாக படித்துவிட முடியும் என்று கூறுகிறார்கள் . அது உண்மைதான் . ஆனால் இன்லேண்ட் கார்ட் வாங்கி எழுதும் அளவு்க்கு . என்னிடம் விஷயங்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை . அஞ்சல் அட்டை எளிமையாக இருக்கிறது என்பதுதான் அதனைப் பயன்படுத்துவதற்கு முக்கியமான காரணம் . எங்களது பத்திரிக்கையில் புதிதாக கணித பாடத்திற்கென உதவி ஆசிரியர் இணைந்துள்ளார் . அவர் கொஞ்சம் தடுமாறுவதால் வானியல் , இயற்பியலை எனக்கென பொறுப்பாசிரியர் ஒதுக்கியுள்ளார் . ஆனால் எனக்கு துணுக்குகள் எழுத தெரியும் . ஆனால் நீண்ட கட்டுரைகளை எழுதுவது கடினமான காரியம் . குங்குமத்தில் அப்படி அறிவியல் கட்டுரைகளை இரண்டே இரண்டு பேருக்கு எழுதியுள்ளேன் . அங்கு அறிவியலை எழுதுவதற்கு ஆட்கள் இல்லாத சூழலில் எனது மேசைக்கு வந்த வாய்ப்பு அது . மற்றபடி இவற்றை எழுதுவதற்கான சரியான ஆள் நான்தானா என்பதில் எனக்கே சந்தேகம் உள்ளது . நான் எ

வேதிப்பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

படம்
வின்சென்ட் வான்கா வரைந்த சூரியகாந்தி தோட்ட ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள். அது வரையப்பயன்படுத்தி பெயின்டை குடித்து தற்கொலை செய்துகொள்ள வான்கா நினைத்தார். அந்த பெயின்டில் குரோமியம் நச்சு இருந்தது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு, வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ளது. இதற்கு மாற்று ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதுதான். பலரும் குளிக்கும் நீச்சல் குளங்களில் நுண்ணுயிரிகள் ஏராளமாக வாழ வாய்ப்புள்ளது. அவற்றை அளிக்க குளோரினை தூள் வடிவில் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் பாக்டீரியாக்களை அழிக்கலாம். காட்மியம் நச்சுத்தன்மை கொண்டது. எனவே பல்வேறு பொருட்களைத் தயாரிப்பவர்கள் அதனை கைவிட்டு வருகின்றனர். ஆனால் சோலார் பேனல்களில் காட்மியத்தை முக்கியமான பகுதிப்பொருட்களாக சேர்க்கின்றனர். இதற்கு மாற்று கண்டறியப்படவில்லை.

பரலோக நரகம் - அக்னியில் கொதிக்கும் ஆன்மா!

படம்
தெரிஞ்சுக்கோ! நரகம்! இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என அனைத்து மதங்களிலும் நரகத்திற்கு முக்கியமான இடமுண்டு. புத்த மதத்தில் ஏழு பனி நரகங்கள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளன. ஒழுக்கம் தவறுபவர்களை அச்சுறுத்த நரகங்கள் புராணக் கதைகளில் உருவாக்கப்பட்டன. இன்று மோசமான ஆட்சியாளர் அதனை தன் வாழ்நாளில் மக்களுக்கு உருவாக்கிக் காட்ட முடிகிறது. இதையும் நாம் கர்ம பூர்வம் என்று சொல்லித் தப்பிக்க முடியும். கொடும் செயல்களை செய்பவர்களுக்கு நரகம் விதிக்கப்படுகிறது. மெசபடோனிய நம்பிக்கைப்படி, மோசமான செயல்களைச் செய்தவர்கள் கழிவுநீரைக் குடித்தபடி கற்களைத் தின்றபடி இங்கு வாழ வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டில் தியோபிளஸ் அடானா என்பவர், வரலாற்றில் முதன்முறையாக தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்கிறார். இதற்குப் பரிசாக பிஷப் பதவியைப் பெறுகிறார். ஒரு கட்டத்தில் குற்ற உணர்வு பெருக்கெடுக்க, கன்னி மேரியிடம் மன்னிப்புகேட்க, சாத்தானின் ஒப்பந்தத்தை மேரி முறிக்கிறார். ஜெரிலாக் என்பவர், ஸ்பெயினில் படிக்கிறார். இவரது எதிரிகள் இவர் சாத்தானின் அருள் பெற்றவர் என பிரசாரம் செய்கின்றனர். காரணம் இவர் போப்

புகைப்படம் மூலம் மாற்றம் வரும் - ஜனேலா முகோலி

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜனேலா முகோலி தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கலைஞர். புகைப்படம்  எடுப்பதே இவரது வாழ்க்கை. அதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தார். இதற்காகவே பல்வேறு உதவித்தொகைகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார். 1972 ஆம் ஆண்டு டர்பனில் பிறந்தவருக்கு, ஐந்து சகோதர சகோதரிகள் உண்டு. பெற்றோர் கூலித்தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். 2003 ஆம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் புகைப்படம் தொடர்பான படிப்பையும், ஓவியக்கலை படிப்பை டொரண்டோவிலும் முடித்தார். ஆப்பிரிக்கர்கள், இனபாகுபாடு தொடர்பான ஓவியங்கள், கலைப்படைப்புகள் ஜனேலாவின் பெயரை உலகிற்கு அறிவித்தன. 2009 ஆம் ஆண்டு Inkanyiso எனும் அமைப்பை நிறுவி மாற்றுப்பாலினத்தவர்களின் உலகை ஆவணப்படுத்த முயன்றது இவரது மகத்தான பங்களிப்பு, புகைப்படம் வழியாக மக்களுக்கு தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஜனேலா உருவாக்கினார். இவரது பணியை டபிள்யூ இபி டுபோய்ஸூடன் ஒப்பிடுவது இவருக்கு கிடைத்த பெருமை. 2012 ஆம் ஆண்டு ஜெனேலா ஜெர்மனியில் உருவாக்கிய டாக்குமெண்டா எனும் கண்காட்சியில் பெரும் புகழ் பெற்றார். ஃப்யூ(FEW)  எனும் அமைப்பை உருவாக்கி மாற்றுப