ஓவியத்தில் நிறைய பரிசோதனை முயற்சிகள் அவசியம் ! ராதிகா ஷேக்சரியா - ஓவியக்கலைஞர்
ராதிகா
ஷேக் சரியா
ஓவியக்கலைஞர்
20 ஆண்டுகளாக ஓவியக்கலைஞராக ராதிகா ஷேக் சரியா பணியாற்றி வருகிறார். கோரக்பூரில் பிறந்து வளர்ந்தவர், சிறுவயதிலிருந்தே கலையின் கைபிடித்து வளர்ந்தவர். ரூமியின் கவிதைகளை ஓவியங்களாக வடிவமைக்க முயன்று வருகிறார். தற்போது அக்ரிலிக் ஓவியங்களை வரைந்து வருகிறார்.
கலை மீதான காதலைப் பற்றிச் சொல்லுங்கள்.
சிறுவயது முதலே பெயின்ட் பிரஷ் மீது காதல் பிறந்துவிட்டது. தொடக்க காலத்தில் நான் நிறைய நிறங்களை பரிசோதித்து வந்தேன். இதில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்தேன்.
பிறகு எனக்கு திருமணமானபோது நான் மும்பைக்கு இடம்பெயர்ந்தேன். ஜேஜே கலைப்பள்ளியில் ஓவியத்தை பயின்றேன். இதற்குப் பிறகு நான் வரைந்த ஓவியங்களை மிராயா என்ற பெயரில் ஓவியக் கண்காட்சியாக வைத்தேன்.
நடிகை ராகேஸ்வரி என்னுடைய ஓவியங்களைப் பார்த்துவிட்டு, அதில் ஆன்மிகத்தன்மை இருக்கிறது என்று விமர்சனம் செய்தார். அவர்தான் ரூமியை வாசி என்று கூறினார்.
பிறகுதான் என்னுடைய பயணம் ரூமியுடன் தொடங்கியது. அதில் வாழ்க்கைக்கான கொண்டாட்டம், ஒற்றுமை, பேரானந்தம் என நிறைய விஷயங்கள் இருந்தன.
உங்களுடைய ஆன்மிகம் தொடர்பான கலை கண்காட்சி பற்றி சொல்லுங்கள். !
ஷிபார் என்ற பெயரில் நான் ஓவியத்தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். ஒன்றுமில்லாத தன்மையை மையமாக வைத்து ஓவியங்களை உருவாக்கியிருக்கிறேன். தெய்வீக தன்மையை உணர இந்த தன்மை அவசியம். கலைஞர்களுக்கு நான் வரைந்த ஓவியத்தன்மை கொண்ட ஒன்றுமில்லாத தன்மை அவசியம். அவர்கள் இதனை மனப்பூர்வமாக உணரவேண்டும்.
காதலனுக்கு எப்படி காதலிக்கும் பெண் இருப்பாளோ அப்படி தியானம் செய்பவர்களுக்கு அவர்களுடைய அனுபவம் துணையாக இருக்கும்.
புதிதாக இத்துறையில் நுழையும் கலைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
மக்களிடமிருந்து ஊக்கம் பெற்று கலைகளை உருவாக்க வேண்டும். அந்த படைப்பு அசலாக இருப்பது முக்கியம். பிற படைப்புகளை பார்த்து பொறாமைப்படுவது உதவாது. படைப்புகளிடமிருந்து ஊக்கம் பெறுவது முக்கியம்.
படைப்புகளை உருவாக்கும்போது அதை படைப்பவர் வயது குறைவாக இருப்பது, அதிகமாக இருப்பது முக்கியமல்ல. நீங்கள் படைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கும் வரையில் வளர்ந்து கொண்டுதான் இருப்பீர்கள். நிறங்களில் வடிவங்களில் நிறைய பரிசோதனை முயற்சிகளை செய்து பார்ப்பது முக்கியம்.
ஃபெமினா 2021
கருத்துகள்
கருத்துரையிடுக