பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலைப் பேசியதால், துரோகிகள் என வசைபாடுகிறார்கள்! பீனாபால், படத்தொகுப்பாளர்
bina paul திரைப்பட படத்தொகுப்பாளர், பெண்கலைஞர்கள் அமைப்பின் நிறுவன உறுப்பினர் ஹேமா கமிட்டியின் முக்கிய சாதனை என்னவென்று கூறுவீர்கள்? மக்களிடம் திரைக்கலைஞர்களின் பாலினத்தை நாங்கள் கவனிக்க வைத்தோம். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த சந்திப்பில், பாலினம் என்பது திரைப்படத்துறையில் உள்ளது என கூறியபோது, பலரும் ஆச்சரியப்பட்டனர். பாலினம் என்றால் என்ன என கேள்வி எழுப்பினர். பெண் கலைஞர்கள் அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பெண்கள் பங்களிப்பு, பணியிட பாலியல் சீண்டல்கள், பெண்கள் கதைகள், மையப்பொருள் என பல அம்சங்கள் பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. இப்போது ஹேமா கமிட்டி பெண்களின் பிரச்னைகளை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதை பெண் திரைக்கலைஞர்களும் ஏற்றுள்ளனர். இந்த எதிர்வினைதான் முக்கியமான சாதனை என்று நினைக்கிறேன். பெண்களில் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் உள்ளனர். இதில் வேறுபாடு உள்ளதா? இது கொஞ்சம் சிக்கலான கேள்வி. கலைத்துறை சார்ந்த உதவியாளரோடு ஒப்பிடும்போது கேமராவின் முன்னே நிற்கும் கலைஞர...