பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டலைப் பேசியதால், துரோகிகள் என வசைபாடுகிறார்கள்! பீனாபால், படத்தொகுப்பாளர்

 

 

 


 

 bina paul
திரைப்பட படத்தொகுப்பாளர், பெண்கலைஞர்கள் அமைப்பின் நிறுவன உறுப்பினர்

ஹேமா கமிட்டியின் முக்கிய சாதனை என்னவென்று கூறுவீர்கள்?

மக்களிடம் திரைக்கலைஞர்களின் பாலினத்தை நாங்கள் கவனிக்க வைத்தோம். 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த சந்திப்பில், பாலினம் என்பது திரைப்படத்துறையில் உள்ளது என கூறியபோது, பலரும் ஆச்சரியப்பட்டனர். பாலினம் என்றால் என்ன என கேள்வி எழுப்பினர். பெண் கலைஞர்கள் அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, திரைப்படத்துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் வெளிச்சத்திற்கு வந்தன. பெண்கள் பங்களிப்பு, பணியிட பாலியல் சீண்டல்கள், பெண்கள் கதைகள், மையப்பொருள் என பல அம்சங்கள் பல்லாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. இப்போது ஹேமா கமிட்டி பெண்களின் பிரச்னைகளை மக்களின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதை பெண் திரைக்கலைஞர்களும் ஏற்றுள்ளனர். இந்த எதிர்வினைதான் முக்கியமான சாதனை என்று நினைக்கிறேன்.

பெண்களில் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் உள்ளனர். இதில் வேறுபாடு உள்ளதா?

இது கொஞ்சம் சிக்கலான கேள்வி. கலைத்துறை சார்ந்த உதவியாளரோடு ஒப்பிடும்போது கேமராவின் முன்னே நிற்கும் கலைஞர்களுக்கு முன்னுரிமை அதிகம். ஆனால், சிகை அலங்கார கலைஞர் அல்லது உதவி இயக்குநர் ஆகியோரோடு நடிகர்களை ஒப்பீடு செய்யவேண்டியதில்லை. அடிப்படையில் அனைத்து பணிகளும் ஒன்றுதான். நடிகர் அளவுக்கு, திரைப்பட உதவியாளர், கலைத்துறை உதவியாளர் திரைப்படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டால் யாரும் கவலைப்படமாட்டார்கள். இரு தரப்பிலும் சந்திக்கும் சவால்கள் வேறுவிதமானவை. ஆனால் இருவரும் சந்திக்கும் அனுபவங்கள் என்ற வகையில் ஒற்றுமை உண்டு. பாலின அடிப்படையில் இரு தரப்பிலும் உள்ள பகிர்ந்துகொள்ளப்படும் அனுபவங்களில் கவனம் கொள்ளவேண்டும்.

கமிட்டியின் அறிக்கை வெளியான நாள்தொட்டு திரைக்கலைஞர்கள் மீது அதிக கவனம் குவிகிறது. இதை சாதகமானதாக நினைக்கிறீர்களா?

அதிர்ஷ்டமோ துரதிர்ஷ்டமோ ஹேமா கமிட்டி, பெட்டியில் இருந்த புழுக்களை திறந்துவிட்டுவிட்டதாக நினைக்கிறேன். நடிகர்கள், தயாரிப்பாளர், உதவி இயக்குநர்கள் என பலரும் பேசுகிறார்கள். பெண்களும் பேசத்தொடங்கியுள்ளனர். திரைத்துறையில் உள்ள காஸ்டிக் கவுச் சார்ந்தே பலரும் கவனிக்கிறார்கள். இதுபற்றிய செய்திகளில் ஊடகங்களின் வாயேரிச அணுகுமுறை வினோதமாக தோன்றுகிறது. பேசப்படும் மையப்பொருள் சார்ந்து நேர்மறையாகவே பார்க்கிறேன். பெண்கள் அமைப்பு சார்பாக இப்படி திரைத்துறையில் பிரச்னை உள்ளதாக கூறும்போது, நீங்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் திரைத்துறையை அழிக்கும் துரோகிகள். பெண்ணியவாதிகள், பிரச்னை செய்துகொண்டே இருக்கிறீர்கள். திரைத்துறையை களங்கம் செய்கிறீர்கள் என முத்திரை குத்துகிறார்கள்.  பெண்ணியம் என்பது இந்த விவகாரத்தில் சற்று பெரிய வார்த்தை. அடிப்படை விவகாரத்தை நோக்கி கவனத்தை திருப்ப முயன்று வருகிறோம்.

மலையாள திரைப்படத்துறை, இந்திய திரைப்படத்துறை பரிந்துரைகளை எப்படி அணுகுகிறது?

திரைப்படத்துறையில் குறிப்பிட்ட கொள்கைகளை உருவாக்கவேண்டும் என நினைக்கிறோம். அதற்கென சில பரிந்துரைகளை உருவாக்கி வருகிறோம். அந்த வகையில் இந்த இடம் அழுக்காக இருக்கக்கூடாது. தூய்மையாக இருக்கவேண்டும் என மெனக்கெடுகிறோம்.

பிரன்ட்லைன் -




கருத்துகள்

பிரபலமான இடுகைகள்