பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் - ஏ ஜி நூரானி - அஞ்சலிக் குறிப்பு

 



 

 




அஞ்சலி
ஏஜி நூரானி 1930-2024
காபூர் பாய் என அழைக்கப்படும் நூரானி, அரசியலமைப்பு சட்டத்தை அறிந்த கூர்மையான மனிதர்களில் ஒருவர்.

கல்வியாளர், வழக்குரைஞர், சுயசரிதையாளர், வரலாற்று அறிஞர், அரசியல் விமர்சகர், சிந்தனையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர், அப்துல் காபூர் மஜீத் நூரானி. தனது தொண்ணூற்று மூன்று வயதில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றிய நூரானி, சட்டம், அரசியல், வெளிநாட்டு உறவுகள் என பன்முகத்தன்மை கொண்ட தளங்களில் இயங்கி வந்தார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்தார்.

எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, தைனிக் பாஸ்கர், தி இந்து, பிரன்ட்லைன் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் காஷ்மீர் பற்றி நுட்பமான பல்வேறு தகவல்களோடு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக அரசியல் சூழல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதகுல வரலாற்றில் பத்து முக்கிய சம்பவங்களில் ஒன்று என இந்திய பாகிஸ்தான் பிரிவினையைக் குறிப்பிட்டார்.

குடிமகன்களின் உரிமை, பேச்சுரிமை போன்றவற்றில் பாறை போன்ற பிடிவாதமான உறுதியைக் கொண்டிருந்தார். அவர் பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர். பேச்சுரிமைக்கு பிரச்னைகள் வரும்போது அதை எதிர்த்து எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் கெடுவுக்கு முன்னதாக கட்டுரைகளைக் கொடுக்க முயன்றவர். இதழுக்கு கட்டுரைகளை அனுப்ப முடியாது போனால், அதைக் குறித்து மாறாத வருத்தம் கொண்டிருக்கிறார். காபூர் எனது சிறந்த நண்பர். தனது வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்திருக்கிறார். அவர் இயற்கை எய்தியதால் இந்திய பத்திரிக்கைத்துறை போதாமையில் வாடுகிறது என் ராம் கூறியிருக்கிறார். காஷ்மீர் பிரச்னை, 370 சட்டம், இந்தியா சீனா எல்லைப்பிரச்னை, ஆர்எஸ்எஸ், பாஜக, சாவர்க்கர், இந்துத்துவா, பாபர் மசூதி, குடிமக்களின் உரிமை ஆகியவை பற்றி ஆதாரப்பூர்வமாக ஆராய்ச்சி செய்து கட்டுரைகளை எழுதியுள்ளார் நூரானி.

தொழிலில் வழக்குரைஞராக இருந்தாலும், தனது பணியை அதிகமாகவே செய்தார். அவர் இந்தியா பாகிஸ்தான் உறவு பற்றி தெளிவான புரிதல் கொண்டவராக இயங்கி வந்தார். அவரது செயல்பாடுகளை அரசியல், அறிவுஜீவிகள் வட்டாரத்தில் மதிப்பளித்து நடத்தவில்லை என முன்னாள் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கூறினார்.

காஷ்மீர் பிரச்னை பற்றி இரண்டு பாகங்களைக் கொண்ட நூல்களை எழுதியுள்ளார். பாபர் மசூதி பற்றியும் தனித்துவமாக நூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூலை கடைசியாக எழுதியிருக்கிறார். டெல்லி நகரை விரும்புகிற நபராகவும், பல்வேறு உணவகங்களில் அமர்ந்து உணவை ரசித்து உண்பவராகவும் நூரானி இருந்திருக்கிறார். நெருங்கிய நண்பர்களிடம் இந்தியா பாகிஸ்தான் உறவு பற்றிய தகவல்களை உரையாடும்போது துல்லியம் தவறாமல் கூறி ஆச்சரியம் ஏற்படுத்தும் தனித்துவ இயல்பைக் கொண்டிருந்திருக்கிறார்.

பொதுவாழ்க்கையில் சமரசம் செய்துகொள்ளாத நீதியுணர்வைக் கொண்டிருந்தார். காஷ்மீர் விவகாரத்தில் அரசுகள் சரியாக செயல்படவில்லை என்ற தீர்மானமான கருத்தைக் கொண்டிருந்தார். காஷ்மீரின் முதல் பிரதமராக இருந்த ஷேக் அப்துல்லாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர். ஷேக் அப்துல்லாவை காங்கிரஸ் அரசு, பதினொரு ஆண்டுகள் சிறையில் அடைத்து வைத்திருந்தது. இவரை நேரு சிறையில் அடைத்து வைத்தது பற்றிய விமர்சனத்தை உள்ளடக்கிய கட்டுரையை நூரானி எழுதி, அக்கட்டுரை காஷ்மீர் கனெக்டட் வலைத்தளத்தில் வெளியானது. சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்ட 2019ஆம் ஆண்டின்போது, பிரதமரின் செயலை அரசியலமைப்புக்கு எதிரானது, துரோகம் என விமர்சித்தார். ஒன்றிய அரசின் செயல் காரணமாக, மாநில சுயாட்சி தன்மை பறிபோவதைப் பற்றி பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நூரானி இறப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் அரசியல் குழு உறுப்பினரான பிருந்தா காரத், தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரான ஓமர் அப்துல்லா, அனைத்திந்திய மஜ்லிஸ் இட்டேஹாடுல் முஸ்லீம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். நூரானி மதச்சார்பின்மைக்கு சட்டம், செயல்பாடு ரீதியாக பாதிப்பு ஏற்படும்போது அதை தீவிரமாக எதிர்த்தார். தான் எழுதிய வார்த்தைகளுக்கு உண்மையாக இருந்தார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆபத்தான செயல்பாடுகள் பற்றிய ஆழமாக ஆராய்ச்சி செய்து பல்வேறு நூல்களை எழுதினார்.

இந்தியாவுக்கு உள்நாடு, வெளிநாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், மேம்பாடு, அதற்கு ஏற்பட்ட வலதுசாரி, இந்துத்துவ சக்திகளால் ஏற்பட்ட ஆபத்துகளை கட்டுரைகளில் வெளிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடக்கத்தில் கட்டுரைகளை தாளில் பல பக்கங்களுக்கு எழுதி பிறகு கணினியில் தட்டச்சு செய்து நாளிதழ்களுக்கு அனுப்பி வந்திருக்கிறார். கட்டுரைகளை எழுதும்போது நிறைவு பெறும் வரை சாப்பிடாமல் கூட இருக்கும் பிடிவாதம் உள்ளதை அவரது உதவியாளர் குறிப்பிடுகிறார். கட்டுரைகளில் வரும் தகவல்கள் துல்லியத்திற்கும் தெளிவிற்கும் மெனக்கெட்டிருக்கிறார்.

டி கே ராஜலட்சுமி
பிரன்ட்லைன்
தமிழாக்கம்
விபுத்தன்

நூரானி எழுதிய நூல்கள்

The Kashmir Dispute 1947-2012, Article 370: A
Constitutional History of Jammu and Kashmir,
Constitutional Questions in India, Ministers’ Mis-
conduct, The Presidential System, Brezhnev Plan
for Asian Security, The Trial of Bhagat Singh, The
Destruction of Hyderabad, and The Babri Masjid
Question.

He authored the biographies of Ba-
druddin Tyabji and Zakir Husain. In his later
years, his association with LeftWord Publica-
tions led to several more books: The RSS and the
BJP: A Division of Labour, Islam and Jihad, Savar-
kar and Hindutva: The Godse Connection, and
The RSS: A Menace to India.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்