கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களும் இனி ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கவேண்டும்! - வரித் தீவிரவாதத்தின் அடுத்த கட்டம்

 

 

 




 

 

 

 

 


ஆராய்ச்சிகளை நிலைகுலைய வைக்கும் வரி தீவிரவாதம்

மாத சம்பளம் வாங்குபவர்களை வரி என்ற பெயரில் கொள்ளை அடிப்பது மட்டுமின்றி இப்போது ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களையும் வலதுசாரி மதவாதிகள் குறிவைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த வகையில் நாட்டிலுள்ள அனைத்து ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பி அதுவரை பெற்ற மானியங்களுக்கான ஜிஎஸ்டி வரியை நிதி அமைச்சகம் கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை நிலுவையில் உள்ள வரியைக் கட்டியே ஆகவேண்டுமாம்.

ஏற்கெனவே பணவீக்க நிலையில், ஆராய்ச்சிக்கு கிடைக்கும் நிதி உதவிகள் பெரியளவில் உயரவில்லை. அந்த நிலையிலும் கிடைக்கும் பணத்தை வைத்து ஆராய்ச்சிகளை மாணவர்கள் செய்து வந்தனர். மதவாத அரசு, நிதிநிலை அறிக்கையை அறிவிக்கும் போதெல்லாம் கல்விக்கான நிதியை குறைத்துக்கொண்டே வந்தனர். பொது நுழைவுத்தேர்வு என்று வைத்து, பயிற்சி மைய நிறுவனங்களுடன் சேர்ந்து மாணவர்களை கொள்ளையடித்து சம்பாதித்து வருகின்றனர். இத்தனைக்கும் பயிற்சி மையங்களின் வணிகம் ஆண்டுக்கு ஐம்பத்தெட்டாயிரம் கோடி என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. ஆனால், நாம் இந்த உண்மையை அறிய குடிமைத்தேர்வுகளுக்கு படித்து வந்த மூன்று மாணவர்கள் டெல்லியில் சாக வேண்டியுள்ளது. தேர்வுத்தாள் கசிவு என்பதும் இயல்பான செய்தியாக மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர். ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு வரி என்பது கல்வியில் இந்துத்துவா மூடர்கள் இறக்கும் அடுத்த இடி.

டெல்லியில் உள்ள ஐஐடி, சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் ஏழு கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி ஆணையம் வரித்தொகை, அதற்கான அபராதம் என ஐந்து கோடி முதல் அறுபது கோடிவரை கட்டுவதற்கு அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐஐடி டெல்லி மட்டும் பெற்ற மானியத்திற்கு நூற்றி இருபது கோடி ரூபாய் வரியைக் கட்டவேண்டும் என நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரி தீவிரவாதம் என இன்போசிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனர் டி வி மோகன்தாஸ் பாய், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதே நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஸ் கோபாலகிருஷ்ணன், ஆராய்ச்சி மானியத்திற்கு ஜிஎஸ்டி கட்டக்கூறினால், கிடைத்து வரும் சொற்ப நிதியும் பெருமளவில் குறைந்துவிடும் என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்துகளை மோகன்தாஸ் பாய், நாட்டின் ஆட்சித்தலைவருக்கும் ஜிஎஸ்டி ஆணையத்திற்கும் டேக் செய்துள்ளார். இதனால் என்ன மாற்றம் வரும் என தெரியவில்லை.

ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அமைச்சகம் நிதியை வழங்கும்போதே ஜிஎஸ்டி வரியை எடுத்துக்கொண்டு கொடுக்கலாம். உதவியை வழங்கிவிட்டு கல்வி அமைப்புகளை வரி கட்டச்சொல்லி தொந்தரவு கொடுப்பது தவறானது என ஐஐடி வாரிய உறுப்பினரான அறிவியலாளர் அசோக் ஜூன்ஜூன்வாலா கருத்து தெரிவித்துள்ளார். மாட்டுச்சாணி, மூத்திரத்தில் செய்யும் பொருட்களை விற்றுப் பிழைக்கும் சாமியாருக்காக சட்டங்களை மாற்றி அறிவிக்கும் ஒன்றிய மதவாத அரசு, மேலே சொன்ன கருத்துக்களை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளுமா என்று தெரியவில்லை. அப்படி மாற்றம் நடந்தால் அது அரிதானது.  

கல்விப் பிரச்னையை இ்ந்துத்துவ குண்டர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நினைக்கிறார்கள் போல. ஒன்றிய அரசோ, விமானக்கடத்தல் பற்றிய நெட்பிளிக்ஸ் படத்தில் வரும் தீவிரவாதிகளின் பெயர் இந்துவா முஸ்லீமா என ஆராய்ந்து வருகிறது. அந்தப்படத்தின் கதையே எடுத்துக்கொண்டாலும் கூட உளவுத்துறை, புலனாய்வு அமைப்புகளின் தோல்வியை படம் விரிவாக எடுத்துக்கூறுகிறது. இந்துத்துவ கிறுக்கர்களுக்கு அதையெல்லாம் எடுத்து பேச விருப்பமில்லை. இந்து, முஸ்லீம் பிரிவினை பற்றி பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை விடுவானேன் என இணையத்தில் உளறிக் கொட்டி வருகிறார்கள்.

நாடு எதற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் கல்விக்கா, பொழுதுபோக்கு திரைப்படத்திற்கா?

புஷ்பா நாராயணன், டிஓஐயில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.  

#tax terrorism #derail projects # curtail innovations #gst #research #academic #grants #iit delhi #anna university #dggi #not excempt #funds #tax relief #chilling effect #infosys #harassment #donation 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்