புரோஜெரியா எனும் சிறுவயது முதுமை நோய்!

 

 




 

 

அறிவுப்பற்று
மிஸ்டர் ரோனி

அவசியமான சத்துகள் எவை?
மாவுச்சத்து, புரதம், நீர், வைட்டமின், கனிமச்சத்து ஆகியவை உடலுக்கு அவசியமானவை. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு என்பதை ஆற்றல் சத்துகள். இவை உடலின் தினசரி செயல்பாட்டிற்கு முக்கியமானவை.

வைட்டமின் சப்ளிமென்டுகள் அவசியமா?

உணவில் இருந்து போதுமான சத்துகள் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் வைட்டமின் சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்ளலாம். இதற்கென ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளனர். அவர்களிடம் வழிகாட்டுதல் பெறுவது நல்லது.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்றால் என்ன?

மாட்டின் பாலில் உள்ள சர்க்கரைக்கு லாக்டோஸ் என்று பெயர். இதை செரிமானம் செய்ய லாக்டேஸ் என்ற என்சைம் தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு மாட்டுப்பால் செரிமானம் வயதாக வயதாக குறைந்துகொண்டே வரும். இப்படி பால் செரிமானம் ஆகாதபோது, உடலில் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், அதிகளவு வாயு உருவாவது ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். இதையே லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று மருத்துவர்கள் கூறிப்பிடுகிறார்கள். இதற்கு ஒரே வழி, பால் பொருட்கள் உண்பதைக் குறைத்துக்கொள்வதுதான். முற்றாக பால் பொருட்களை நிறுத்திக்கொள்ள வேண்டியதில்லை. சீஸ், யோகர்ட், உணவு உண்ணும்போது சிறிதளவு பால் என பயன்படுத்தலாம்.

சிறுவயதிலேயே வயதாவதை எப்படி குறிப்பிடுவது?

அதற்கு புரோஜெரியா என்று பெயர். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, ஹட்சின்சன் ஹில்போர்ட் சிண்ட்ரோம். இதில், ஒருவருக்கு நான்கு வயது தொடங்கி வேகமாக வயதாவது தொடங்குகிறது. முடி வெள்ளையாகும், தோலில் சுருக்கங்கள் உருவாகும், தலை வழுக்கையாகும், உடல் உள்ளுறுப்புகளும் பலவீனமாகி இருபது வயதுக்குள் மரணம் நேரும். அடுத்து, வெர்னர் சிண்ட்ரோம். இதில் ஒருவர் நாற்பது அல்லது ஐம்பது வயது வரை உயிர் வாழ முடியும். இருபது அல்லது முப்பது வயதில் வயதாகும் அறிகுறிகள் தோன்றும்.







 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்