போருக்கு செலவு செய்வதைவிட நிதியை ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு திருப்பலாம்!

 

 

 



 

   உள்நோக்கம் கொண்ட தேசபக்தி அரசியல்

 
 ஒருவகையில் பாகிஸ்தான் நாட்டுடன் உறவுகள் மேம்படுவதாக  இருந்தாலும், இன்னொருவகையில் அந்நாட்டுடன் சுமூகமான உறவு ஏற்படக்கூடாது என்று விரும்புகிறோம். நமது பிரதமர் பாகிஸ்தான் பகுதிகளைப் பற்றிப்பேசும்போது நாடாளுமன்றத்தில் பல அணிகளாகப் பிரிந்து நின்று பேசுவது நடக்கிறது. நாட்டின் ஊடகங்களில் இரு தரப்பு பற்றி கடும் கூச்சல் இடுவதுமாக இரு நாட்டு உறவுகள் சமநிலையடையும் நிலையில், இச்செயல்கள் அதைக் குலைத்துப்போட்டுவிடுகின்றன.

 நமது செயல்பாடுகள் பாகிஸ்தானுடனான ஒற்றுமையை உண்மையில் நாம் விரும்புவதில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. உறுதியாக, நாம் உறவுகளை சிறந்ததாகவும், ஆழமானதாகவும் கொள்ள முயற்சித்தும் அங்கே மனக்கசப்பும், கோபமும்தான் இறுதியில் மிஞ்சுகிறது. அனைத்தையும் விட பாகிஸ்தானுக்கு சரியான பாடத்தை கற்பிக்கவேண்டும்; அவர்களை சரியான இடத்தில் வைக்கவேண்டும்; எனவும், பாகிஸ்தானை இகழ்ந்து பேசுவதுதான் தேசபக்தி என்று கூறுவதில் பெரும் அரசியல் உள்ளது.

 மும்பை தீவிரவாதத் தாக்குதல் பிரச்சனைகளை தீர்க்காமல் பிரதமர் பாகிஸ்தானோடு பேசுவது சரியானதல்ல என்று நாம் எண்ணுகிறோம். பாகிஸ்தானுடன் பேசுகிறோமோ இல்லையோ மிக அதிகமாக அந்நாட்டுடன் இணைந்துள்ளோம். அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கவேண்டும் என்று கூறியபடி அரசியல்வாதிகள் அழுக்கான பார்வையை பகிர்ந்தபடி ஏதோ செய்வது போன்ற பாவனையோடு இருப்பார்கள்.

ஒவ்வொரு இந்தியரின் வாழ்வும் பாகிஸ்தானோடு இணைந்துள்ளது. அங்கு நடத்தப்படும் போரில் நமது மக்களின் பணம் பெருமளவு செலவிடப்படுகிறது. இதற்குக் காரணம் நமது பாதுகாப்புத்துறை நிதி அறிக்கைதான். பாகிஸ்தான் நாட்டிடமிருந்து பாதுகாப்பு என்ற வகையில் அரசு இதற்காக பெருமளவு செலவு செய்கிறது.

 தேசபக்தி என்ற போர்வையில் பாதுகாப்புத்துறை தொடர்பான செலவுகள் எந்த கேள்வியும் கேட்க முடியாதவை ஆகிவிட்டன. எல்லையில் உயிரைப் பயணம் வைத்து நாட்டைப் பாதுகாக்கும் வீரர்களுக்கான செலவை எப்படி கேள்வி கேட்கமுடியும்? நீங்களே கூறுங்கள். இதில் உள்ள கேள்வி என்னவெனில் உயிர்கொடுப்பது என்பதுதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது, பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும். பாதுகாப்பிற்காக இவ்வளவு செலவு செய்கிறோம், இதற்காக பிறகு நாம் என்ன பெறுகிறோம்?

 ஆம். கருத்தியலாக வலுவான ராணுவம் உருவாகிறது எனலாம். ஆனால் நாம் ஏழை நாடாயிற்றே. ஏழைகளாக இருந்தால் நடைமுறையை சிந்திக்கவேண்டும் அல்லவா. அனைத்து இந்தியர்களும் பாதுகாப்போடு இணைந்துள்ள மூன்று பகுதிகளை சரியாக புரிந்துகொண்டால் இதனோடு உடன்பாடு கொள்ளமுடியும்.

வெளிநாட்டுக்கொள்கை

 நமது வெளிநாட்டுக்கொள்கை நமது நாட்டின் ஆன்மாவை வெளிப்படுத்துவதாக இல்லை. வெளிநாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொண்டால் நாட்டிற்கு கிடைக்கும் நன்மைகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்படும் கொள்கைகளைக் கொண்ட அறிக்கைகளே இவை. அரசியல்வாதிகளை மறந்துவிடுங்கள். சக இந்தியர்களைக்கேட்கிறேன். நமக்கு இவ்வளவு சிரமப்பட்டு கிடைக்கும் காஷ்மீரின் தேவை என்ன?  அங்கு செலவிடும் தொகையில் இளைய தலைமுறையினருக்கான கல்லூரிகளை நாடு முழுவதும் ஏற்படுத்தலாம் அல்லவா?

அடிப்படை கொள்முதல் விலைக்காக போராடும் விவசாயிகளுக்கான புதிய திட்டங்களை ஏன் உருவாக்கக்கூடாது? சாலைகளை, மின்நிலையங்களை ஏன் அமைக்கக்கூடாது? அதீத பணவீக்க நிலைமையில் எப்போதுமே இருக்கவேண்டுமா? இவை அனைத்தும் சிறந்தவையாக இல்லையெனினும் இணைந்து உள்ளன.

பாதுகாப்பு என்பதைத் தாண்டி மேற்கூறிய துறைகளின் திட்டத்தொகையை ஒன்றாக சேர்த்தாலும் கூட அவ்வளவு தொகை அவற்றை உருவாக்க கிடைப்பது இல்லை. அரசிடம் அதிகளவு நிதி இல்லாத நிலையில் தொடர்ந்து பிற நாடுகளுடன் சண்டையிடுவது நாட்டின் முக்கிய ஆக்கப்பூர்வச் செயல்பாடுகளை முடக்கும். எனவே இதனைக் காக்க அமைதி நடவடிக்கைகளை எடுத்தால் அப்பணத்தினைக் கொண்டு  ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்யமுடியும். வெளிநாட்டுக்கொள்கை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாதுகாப்பு கூட்டுறவு

 உலகமயமாதலின் விளைவாக பொருளாதாரம் முன்னெப்போதையும் விட அதோடு ஊடும் பாவுமாக இணைந்துள்ளது. யாரும் எதையும் செய்வது என்பதை சுயமாக செய்துகொள்ளவேண்டும். இன்னொரு நாட்டுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு நம் நாட்டு எல்லைகளை பாதுகாக்க முயற்சிக்கலாம். உதாரணமாக, அமெரிக்காவிற்கு தன் நாட்டு எல்லைகளை கவனமாக பாதுகாக்கும் தேவையுள்ளது.

உலகளாவிலான பயங்கரவாதத்தினையும் தடுக்கும் அவசியம் உள்ளது. நாம் அவர்களோடு இணைந்து பணிபுரியலாம். நமது நாட்டின் சில பகுதிகளை அவர்களுக்கு அணுக வாய்ப்பளிக்கலாம். இதனால், நம்மைக் காத்துக்கொள்வதில் செலவும் மிச்சமாகிறது. பாலைவனப்பகுதிகளில் சிறப்பாக காவல் காத்த அனுபவமும் அவர்களுக்கு உண்டு. அமெரிக்கா நமது நாட்டின் பாதுகாப்பு குறித்த முனைப்பு காட்டுவது என்பதில் நம்மில் சிலருக்கு நடுக்கம் ஏற்படக்கூடும். ஆனால் வெளிப்படையாக கூற வேண்டுமானால், நமது எல்லைகளை காத்து நிற்பதால் அவர்களுக்கு கூடுதலாக என்ன விஷயங்கள் கிடைத்துவிடும்? பின்னாளில் நமக்கு எதிராக செயல்படுவார்களோ?  

நவீனத் தொழில்நுட்ப யுகத்தில் இந்தியாவைத் தாக்கும்  அளவு தகவல்களோ (அ) திறமையோ அவர்களுக்கு கிடையாதா என்ன? நம்மை அவர்கள் தாக்குவதற்கான தேவையில்லை. இந்தியா அவர்களுக்கு முக்கியமான வணிக சந்தையாகவும், குறைந்த கட்டணத்தில் வேலைகளைச் செய்து தரும் இடமாகவும் விளங்குகிறது. நமது பாதுகாப்பு வேலைகளை அவர்களிடம் கொடுத்து பணத்தினை மிச்சம் செய்யலாம். வளமான, வலிமையான நண்பன் அரிதாகவே யாரையேனும் காயப்படுத்துவான்.


காலாவதியான அமைதி

 புத்தர் மற்றும் காந்தி பிறந்த தேசமான நம்நாடு அமைதி என்ற லட்சியத்தை இழந்து வெகுகாலமாகிறது. பாகிஸ்தானுடன் பேசவேண்டும்தான் ஆனால் அவர்களை சரியான இடத்தில் வைத்து நமது கருத்தை அவர்களது தொண்டையில் திணித்து அதனை செய்யவேண்டும் என்கிற நிலைமை உள்ளது.  வெளிப்படையாக கூறினால், இந்த எதிர்ப்பு, தேசபக்தி சினிமா போல கைத்தட்டல்களைப் பெற்றுத்தரலாம் ஆனால் அமைதியைப் பெறமுடியாது.

பாகிஸ்தான் எப்போது தவறு செய்கிறது என்கிற முன்முடிவோடு காஷ்மீர் இந்தியாவிற்கானது என்று கருதுகிறோம். அப்பகுதி எப்போதும் நமக்கு இடைஞ்சலாகவே இருந்து வருகையில் மற்றவர்களின் கருத்திற்கும் வாய்ப்பு அளிக்கலாம். பலருக்கு இதில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கு வாழ்வது குறித்து கற்பது நிலைமையை தெளிவாக்க உதவக்கூடும்.

 நமக்கு அமைதிவேண்டும் எனபது அது சிறந்தது என்பதற்காக மட்டுமல்ல நாம் தொடர்ந்து சண்டையிட (அ) அதற்கான முன் தயாரிப்புகளிலோ அடுத்த இருபது ஆண்டுகளை வீணடிக்கவேண்டாம் என்பதும் காரணமாகும். வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்கென பல நூறு நபர்களை  நிறுத்திவைத்தால், பிறகு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப, கல்விக்கட்டணம் கட்டபணம் ஏதும் மிச்சம் இருக்காது. பாதுகாப்பு குறித்த செலவுகள் கட்டுப்படுத்தப்பட்டு சரியான அரசியல் மற்றும் செயல்பாடுகளை உருவாக்க நாம் முயலவேண்டும். தோட்டாக்களுக்கு செலவு செய்யும் பணம் திரும்பாது. ஆனால் அடிப்படை கட்டமைப்பிற்கு செலவு செய்வது திரும்பும்.
              
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்