உயிர்களை பலிவாங்கும் பணியிட நச்சு கலாசாரம்!
பெங்களூருவில் அன்னா செபாஸ்டியன் என்ற இளம்பெண், வேலை சார்ந்த மன அழுத்தம் காரணமாக இறந்துபோயுள்ளார். பொதுவாக, வலதுசாரி இந்து பேரினவாத கட்சி ஆட்சியில் வல்லுறவு செய்யப்பட்டவர்கள், வீடுகளை புல்டோசர்களுக்கு பறிகொடுத்தவர்கள், இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர்கள் என அனைவரையுமே அவதூறு செய்து இழிவுபடுத்துவது வழக்கம். பாதிக்கப்பட்டவர்களையே குறை சொல்வது புதிய மனுநீதி.
இந்த அநீதிக்கு அன்னாவும் இலக்காக மாறினார். அந்த வகையில் இம்முறை ஆட்சித்தலைவரின் வழிகாட்டலில் நிதியமைச்சர், வரி ஏய்ப்பில் கொழிக்கும் நிறுவனங்களைப் பற்றி ஏதும் கூறாமல் அவர்களின் சுரண்டலை தாங்கிக்கொள்ளும் வகையில் பணியாளர்கள் ஆன்மிகத்தன்மையை மனவலிமையை வளர்த்துக்கொள்ளவேண்டும் என திருவாய் மலர்ந்தருளியுள்ளார். மூன்று சதவீத இனக்குழுவின் ஆணவமும், நாட்டை இழிவுபடுத்தி அதில் குளிர்காய்வதும், அதை பிறர் அடையாளம் கண்டால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பதும் புதிதல்ல. அந்தமான் சிறையில் இருந்த வலதுசாரி பேரினவாத இயக்கத் தலைவரே, பிரிட்டிஷாரின் ஷூக்களுக்கு நாக்கால் பாலிஷ் போட்டு விடுதலைப் பிச்சை பெற்ற ஆள். அந்த முட்டாள்களைப் பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அதிக வேலை நேரம் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் என்றால் டாப் டென் பட்டியல் போடுவோம். அதில் இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இந்தியாவில் மும்பையில் உள்ளவர்கள் அதிக நேரம் உழைப்பதாக மெக்கின்சி ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இந்த தகவலில், டெல்லி நான்காவது இடம் வகிக்கிறது. இப்படி விடுமுறை கேட்காமல், எங்கேயும் போகாமல் வேலை பார்த்தாலும் அறுபது சதவீதப் பேர் மனநல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.
வாரத்திற்கு ஐம்பத்தைந்து மணி நேரத்திற்கு மேல் உழைப்பவர்களுக்கு அதற்கு கீழாக உழைப்பவர்களை விட இறப்பு அபாயம் அதிகமாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் 2021ஆம்ஆண்டு அறிக்கையில் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஆக்கப்பூர்வ வளர்ச்சி மெல்ல மறைந்து மதக்கலவரம், கும்பல் படுகொலை என சாவின் களை தெரியத்தொடங்கிவிட்ட காலம் இது. அதிக நேரம் வேலை செய்து நோய் வந்து சாகும் பணியாளர்கள் உள்ள முதன்மை நாடு இந்தியா. இதில், சீனாவை இந்தியா முந்திவிட்டதற்காக பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உலகளவில் இருபது துறைகளில் வாரத்திற்கு ஐம்பது மணிநேரத்திற்கும் அதிகமாக உழைக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை ஐடி துறையில் அதிக நேரம் வேலை வாங்குகிறார்கள். கட்டுமானம், வேளாண்மையில் வாரத்திற்கு நாற்பத்து எட்டு மணி நேரம் வேலை செய்கிறார்கள்.
உலகளவில் ஒருவர் வாரத்திற்கு நாற்பத்து எட்டு மணிநேரம் உழைத்தால் போதுமானது. விதியும் கூட அதுதான். ஏழை நாடான, முதலாளித்துவ குடியரசான இந்தியாவில் தொழிலாளர் விதிகளும் மெல்ல அழிந்துபோய்விட்டன. இங்கு இளைஞர்கள் இருபது வயதில் வாரத்திற்கு ஐம்பத்தி எட்டு மணிநேரமும், முப்பது வயதில் ஐம்பத்தி ஏழு மணி நேரமும், ஐம்பது வயதில் ஐம்பத்து மூன்று மணி நேரம் என உழைக்கிறார்கள். இந்த தகவலை சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாட்டின் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில் இந்தியர்கள் எட்டு டாலர்களை ஒரு மணிநேரத்திற்கு ஈட்டுகிறார்கள். வியட்நாம் 9.8 டாலர், பிலிப்பைன்ஸ் 10.5 டாலர், இந்தோனேசியா 13.5 டாலர், சீனா 15.4 டாலர் என வருமானம் பெறுகின்றன.
சீனாவில் வாரத்திற்கு வேலை செய்யும் அழுத்தம் அதிகம். இதை 996 என அலிபாபா உரிமையாளர் அலிபாபா பெருமையாக கூறினார். காலையில் ஒன்பது மணிக்கு வேலை தொடங்கி, இரவு ஒன்பது மணிக்கு பணி முடியும். இதை வாரத்திற்கு ஆறு நாட்களும் செய்யவேண்டும். இந்தியர்களில் 51.4 சதவீதப்பேர், வாரத்திற்கு நாற்பத்து ஒன்பது மணிநேரத்திற்கும் அதிகமாக உழைக்கிறார்கள். இதில் இந்தியாவைக் கடந்து முதலிடத்தில் பூடான் உள்ளது. அங்கு, 61.3 சதவீத மக்கள் மாங்கு மாங்கென உழைக்கிறார்கள்.
டிஓஐ - சந்திரிமா பானர்ஜி
தமிழாக்கம் தீரன்
கருத்துகள்
கருத்துரையிடுக