உரிமைகளைக் காக்க, கடமைகளை அரசுக்கு நினைவுபடுத்த தெருக்களில் இறங்குவோம்!

 

 

 






 

 

 


 தெருக்களில் இறங்குவோம்!

நம் அனைவரிடமும் உள்ள சிடுமூஞ்சி மாமா ஒருவர் இந்தியா எவ்வளவு மோசமானது என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். ஆர்.டி.ஓவிலிருந்து நியாயவிலைக்கடை, நகராட்சி வரை ஒவ்வொரு அரசு அமைப்பும் லஞ்சம் பெறுவது குறித்து நம்மிடம் கூறுகிறார். உடைந்துபோன சாலைகள், சீர்கெட்டுப்போன அரசுப் பள்ளிகள், மோசமான கல்வி என தனது கூற்றுக்கு பலபுறமும் ஆதரவு தேடிக்கொள்கிறார். அவரது தரப்பு சரியாக இருக்கிறபோது, அவரிடம் வாதம் புரிவது மிக கடினமானதாக இருக்கிறது. சில விஷயங்கள் வேலை செய்யாது; நீதி கிடைப்பதில்லை; அதிகாரம் பேசுகிறது; சமநிலை அழிந்துபோனது. அனைத்தும் கேட்க சிரமமாக, கசப்பாக இருந்தாலும் உண்மை அவையாகத்தான் இருக்கிறது. ஒத்துக்கொள்ள மனமில்லை என்றாலும் அதுவே நிஜம்.

 மேலும் மாமா கூறுவார்: இங்கு எதுவும் மாறப்போவதில்லை. நமது சமூகம் சரிசெய்யமுடியாத அளவு பாதிக்கப்பட்டு இந்தியாவே துக்கத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பதாக விளக்குவார். சிடுமூஞ்சி மாமா அனைவரையும் சந்தேகத்திற்கு உள்ளாக்கி மோசமான மனிதர்கள் என முத்திரை குத்தி நாட்டை கீழே தள்ள திட்டத்தோடு யாரோ ஒருவர் இயங்குவதாக கூறுகிறார். இங்குதான் சிடுமூஞ்சி மாமா மோசமான தவறை செய்கிறார். பிரச்சனைகளை ஒருவர் சுட்டிக்காட்ட மற்றொருவர் அதனைத் தீர்ப்பதற்கான வழிகளைக் கண்டு பிடிக்கலாம். குற்றம்சாட்டுவது என்பது ஒரு வாதம் போன்றதல்ல. அது ஒரு குணம். உண்மையில் நம் சமூகத்தில், அரசுத்துறையில், என பல நல்ல மனிதர்கள் உள்ளனர். தொடர்ந்து குற்றம் சாட்டுவதால் அவர்களின் இருப்பு மெல்ல அழிந்துபோகிறது.

 அன்னா ஹசாரேவை நீங்கள் ஏன் ஆதரிக்கவேண்டும் என்பதற்கான காரணத்தை நான் கூறப்போவதில்லை. தன்னை கீழாக வைத்துக்கொண்டு நம்மை ஏமாற்றிவரும் அரசு ஆட்சிமுறையின் ஊழல்முறைகளை உங்களுக்காகவும் எதிர்த்து நிற்க நம்மிடம் ஆதரவு கோரி அன்னா செயல்படுகிறார். இதற்கான நிகழ்வுகள் முன்கதைச்சுருக்கமாக வேகமாக மனதில் ஓடுகிறது.

 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அன்னா தேசம் தழுவிய உண்ணாவிரதம் தொடங்கினார்; அது தொடர்ந்து வேகமாக பரவியது. போராடுபவர்களின் கருத்துகளை இணைத்து வலுவான மசோதாவாக மாற்ற அன்னா கூறும் கோணம் குறித்தும் அரசு பரிசீலிக்கவேண்டும் என்பதே அவர்கள் நினைத்தது. ஆனால் இன்றுவரை அரசு அன்னாகுழுவினரின் கோரிக்கைகளை நிராகரித்து தானே உருவாக்கிய வலுவில்லாத கொள்கைகள் கொண்ட லோக்பால் மசோதாவை, மக்களவையில் நிறைவேற்றியது. ஆனால் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற வழியின்றி தடுமாறி நிற்கிறது. நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பித்த அறிக்கை, ஊழலைத் தீர்க்கும் அளவு வலிமையானது அல்ல. 0.5% (அ) இருநூறில் ஒரு பங்கு என்ற அளவு அதிகார மையங்கள் இச்சட்டத்தின் வரம்பில் வருகின்றனர்.

 நியாயவிலைக்கடை (அ) பாஸ்போர்ட்  அலுவலகம், பஞ்சாயத்து அலுவலகம் (அ) நகராட்சி அதிகார மையங்கள் என எவையும் இதன் உள்ளே வராது. ஏன் பிரதமரும் கூட இதற்கு கட்டுப்படமாட்டார். ஊழல் எதிர்ப்பு மசோதா என்பது குறிப்பிட்ட மக்களுக்குத்தான் என பிரித்து வைப்பதில்  ஜனநாயகம் எங்கே இருக்கிறது?

 அரசு கல்வியறிவற்றவர்கள், புறக்கணிப்பட்டவர்கள் என வித்தியாசம் அறியாதபடி மந்திரப்பொடியை நம் அனைவரின் கண்களிலும் தூவி வருகிறது. இதைப் படிக்கிறீர்களே நீங்கள் கல்வியறிவு பெற்றவர். உங்களுக்குத் தெரியும் தவறு எங்கே என்று. ஊழலை எதிர்கொண்டுதான் உங்களது தினசரி வாழ்வு நடந்து வருகிறது. ஆனால் இந்நிலை உங்களது மகனுக்கும் தொடர்வதை விரும்பமாட்டீர்கள். பலவீனமான லோல்பால் மசோதா இன்று உங்களைப் பாதிக்காது ஆனால், நாளை உங்களது மகனுக்கு கல்லூரி இடம் கிடைக்காது; மருத்துவ சிகிச்சை போதுமானதாக, தரமாக கிடைக்காது; அரசு வேலை கிடைக்காது என சம்பவங்கள் நடக்கலாம். நாம் ஏழையான நாட்டில் வாழ்கிறோம். ஏழை என்பதற்கு  நாடு காரணமல்ல. நாட்டில் உள்ளவற்றைக்கொண்டு அதனை வளர்த்து வளமாக மேம்படுத்தி வைத்துக்கொள்ள தெரியாத மோசமான தலைவர்களால் விளைந்த கேடு இது.

 அரசியல்வாதிகளுக்கு அதிகளவு அதிகாரத்தை கொடுத்துவிட்டதால் அவர்கள் மக்களது வாக்குகளை எளிதாக போட்டியிடமுடியாதபடி திருட முடியும் என்று நினைக்கிறார்கள். பொறுப்பை வெறுக்கின்றவர்கள் அவர்கள். பொறுப்பில்லாதபோது நமது நாட்டின் முன்னேற்றமே தடைபட்டு விடும். பல நாடுகளில் சராசரி தனிமனித வருவாய் இந்தியாவில் இருப்பதைவிட ஐம்பது மடங்கு அதிகமாக உள்ளது. அவர்களைப்போல நாமும் முன்னேற்றம் அடையவேண்டாமா?

 அன்னா குறித்த தனிப்பட்ட பார்வை உங்களுக்கு என்னவாக இருக்கிறதென்று எனக்கு தெரியாது. ஆனால் இந்தப் பிரச்சனையில் போராடும் அவருக்கு நாம் ஆதரவு அளிக்கவேண்டும். ஊழல் எதிர்ப்பு குறித்து அன்னா எந்த கருத்தையும் உருவாக்கவில்லை. அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்திருக்கிறார். அன்னாவை அழிப்பது என்பது கருத்தை மட்டும் அழிக்காது. அது குறித்த நிகழ்வுகளை அதிகரிக்கக்கூடும். இப்போது அந்த அமைப்பு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் அரசு தொடர்ந்து அதன் நடவடிக்கைகளை கவனமாக ஆராய்ந்து வருகிறது. ஊழல் மிதமிஞ்சிப் பெருகிய நிலையில் நாட்டினை பெரும் குழப்பம், கலவரம் ஆக்கிரமிக்கும்.

 இறுதியாக இந்திய மக்கள் சிடுமூஞ்சி மாமா கூறுவது தவறென நிரூபிக்கவேண்டும். எதுவும் இந்தியாவில் மாறாது என்பதில் பெரும் உண்மை உள்ளது. பகவத் கீதையில் எதுவும் நிரந்தரமில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் பானை எப்போது நிரம்பி வழிகிறதோ. அப்போது அதனை புதுப்பிக்கவேண்டும். இப்போது பானை நிரம்பி வழிகிறது எனும்போது நாம் தர்மத்தினை செய்யவேண்டும். இப்போது நீங்கள்தான், நீங்கள் மட்டுமே தெருக்களில் எப்போது இறங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும்; முடிவு உங்கள் கையில்தான் இருக்கிறது.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்