நிலம் எனும் நல்லாள்!

 





 

 

 

 நிலம் எனும் நல்லாள்

 சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளாகியும் நிலக்கிழார்த்தனத்தை ஏன் கைவிடக்கூடாது?

 அண்மையில், மத்திய கிழக்கு மும்பையில் வடாலாவில் உள்ள ஆறு ஏக்கர் நிலமானது விற்கப்பட்டது, வானியல் கணக்கு போல ஒரு பெரிய தொகைக்கு..... வடாலா வளர்ந்துவருகிற பகுதி என்றாலும் குறிப்பாக நவநாகரீக பகுதி என்று கூறிவிடமுடியாது. அதிர வைக்கும் தொகை சாத்தியமானது ப்ளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ்(FSI) பட்டியல் மூலகாரணம். நிலத்தின் சொந்தக்காரர் அந்த பகுதியின் நிலமதிப்புக்கு கூடுதலாக இருபது மடங்கு அதிக விலைக்கு நிலத்தை விற்றுள்ளார்.

ஆகஸ்ட் 2010, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் பல கூடுதல் படிகள், ஓய்வூதியம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட, அவர்களின் சம்பளம் ரூ. 10,000 லிருந்து மாதத்திற்கு ரூ. 50,000 எனும் அளவிலும், பல்வேறு படிகள் எனுமளவில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டன. இந்திய எம்.பிகளுக்கு உலகளவிலுள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைவான தொகையே வழங்கப்பட்டு வந்தது  (அ) திறமை தேவைப்படும் புத்திசாலித்தனம், தலைமைத்துவ தனித்துவம், குடிமைச்சேவை அதிகாரிகளின் சீரிய பணியினால் இவர்கள் சிறிது துறை பற்றிய புரிதலோடு இருக்கிறார்கள்.

 எம்.பிகளுக்கு சம்பளம், பிற தொழில்துறையினரை விட குறைவாக தரப்படுகிறது என்பதால் நமது சட்டங்களை உருவாக்குபவர்களும், அரசு நிர்வாகமும் நிதிப்பிரச்சனையில் தவிப்பதாக அர்த்தமல்ல. பெரும் அசையா சொத்துகளை அரசு தன்னகத்தே கொண்டிருக்கிறது. லுட்டின்ஸ் டெல்லி தவிர்த்து முக்கியமான ஆயிரம் ஏக்கர்களில் பெரிய பங்களாக்கள், எம்.பி வீடுகள், பல்வேறு அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மேலும் கூடுதலாக டஜன் கணக்கான  சிந்தனைக்குழுக்களின் ஆக்கிரமிப்பும் உள்ளது. இவர்கள் தம் அறிவினால் சமூகத்திற்கு அளித்த பங்களிப்பு குண்டூசி துவாரத்தின் அளவா இல்லை என்று கூறுவது கடினம் என்றாலும் ஒன்று (அ) இரண்டு வலுவான பங்களிப்புகளை கடந்த காலங்களில் செய்துள்ளதாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

 என்ன காரணமாகவேனும் இருக்கட்டும். நான் அவர்களை கீழே இறக்கவேண்டும் என்று கூறவில்லை. அரசு வீடுகள், முக்கியமற்ற அரசு அலுவலகங்கள், முக்கியமான அரசு நிலங்களில் இருந்து குறிப்பாக குர்கான் (அ) நொய்டா போன்ற தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலிருந்து வெளியேற வேண்டும். அந்த வெளியேற்றம்  மூலம் எம்.பிகள் அதனை குடிசைப்பகுதி ஆக்குவதல்ல (நமக்கு தெரியும் அவை நடக்காது).

புதிய அரசு கட்டிடங்கள் குளிர்சாதனவசதி, வை-பை வசதிகளைக் கொண்டிருப்பவையாகும். வீடுகள் வசதி, அளவு, கட்டுமானம் ஆகியவற்றின்படி சொகுசானவை ஆகும். எம்.பிகள் தமது தனிப்பட்ட கௌரவம் பொறுத்து அவர்கள் விரும்புகின்ற அறைகளைக்கொண்ட வீடுகளைப்பெற முடியும். அவர்கள் கேட்கும் அளவிலான பணத்தையும் உயர்த்திப்பெற முடியும்.

 நமது அன்பிற்குரிய சிந்தனைக்குழு அறிவுஜீவிகள் புதிய கட்டிடங்கள் வெளியே நீரூற்று கொண்டவற்றின் வெளியே அமர்ந்து, தலையை சொறிந்துகொண்டு நாள் முழுவதும் ஒன்று செய்வார்கள். மன்னிக்கவும், எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் சிந்திப்பார்கள். குர்கான் (அ) நொய்டாவில் செய்தது போலவே டெல்லியிலும் செய்வார்கள். நிச்சயமாக அடுத்து கோல்ப் லிங்க்ஸ், கான் மார்க்கெட் ஆகிய இடங்களிலும் இப்போது போலவே மக்கள் நலவாழ்வு குறித்த சிந்தனைகளோடு இவர்கள் இருக்கக்கூடும்.

 செலவுக்கணக்கொன்றினை கணக்கிடுவோம். ஒரு ஏக்கர் அளவிலான லுட்டிஸ் டெல்லியில் உள்ள பங்களா ரூ. 100-150 கோடிகளுக்கு விற்கப்படுகிறது. ஆயிரம் ஏக்கர் அளவில்(FSI) எனும்போது, இதைவிட பத்துமடங்கு அதிகம். இதில் பாதியாக பார்த்தால் 5,00,000 கோடி ரூபாய் வருகிறது. இவ்வளவு முதலீடுகளைக் கொண்டுள்ள நிலங்களை நமது  அரசு அற்பமான தொகைக்கு எம்.பிகளுக்கு வழங்குகிறது.

குர்கானில் உள்ள இடத்தில் இந்த அமைப்பு முழுவதையும் மாற்றினால், நவீன வீடு, அலுவலகம் நீருற்றுகளோடு சிந்தனைகுழுக்களுக்கு என்று தரும்போது 20,000 கோடிக்கு மேல் வருகிறது (அ) 4% முதலீட்டுத் தொகையில் இதுபோன்ற தொகையினை பயன்படுத்தினால், தள்ளாடிக்கொண்டிருக்கும் அரசின் கடன் தொகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அரசு செலுத்த வேண்டிய வட்டியைக் கணிசமாக குறைக்க முடியும். (4,80,000 கோடியாக தொகை குறைந்தால், 40,000 கோடி வட்டியை ஒவ்வொரு ஆண்டும் குறைக்கலாம்)

 இது டெல்லிக்கு மட்டுமேயான வாய்ப்புகள் எனலாம். இதுபோல ஒவ்வொரு மாநில தலைநகரிலும் எண்ணற்ற அரசு நிலங்கள் பல்வேறு உதவிகளுக்காக உறுதி செய்யப்பட்டு உள்ளன. ரயில்வே, ராணுவத்திற்கான நிலங்கள் என்பதை அடுத்தபடியாக கொள்ள முடியும். இதுபோல நிலங்கள் அனைத்தும் முதலீடாக மாறும்போது நாட்டின் நிதிநிலைமை ஆரோக்கியமாக மாறும். சாதாரண மனிதர்களை அச்சமூட்டும் பணவீக்க பிரச்சனையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இந்தியாவைப் போன்ற குறைந்த வருவாய் கொண்டுள்ள ஜனநாயக நாட்டில் அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்திற்கு இரண்டு ஏக்கர் பங்களா ஏறத்தாழ 200 கோடி மதிப்பில்  இருப்பது தவறானதாக தோன்றுகிறது. 21 ம் நூற்றாண்டில் நாற்றம் கொண்ட காலனியாதிக்கத்திற்கு இடமில்லை. புதிய பகுதிகளில் அரசு அலுவலகங்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகள் அமைவது அந்தப்பகுதி விரிவடைய உதவுகிறது. புதிய கட்டிடங்கள் நவீனபாணி கட்டிடங்களாக மாறி அமைவது அரசின் திறமையை கூர்மையாக்கும். இதுபோன்ற நடவடிக்கைகள் நிலங்களின் மீதான அழுத்தத்தை குறைத்து, விலை சரியான அளவில் இருக்க இவை உதவுகிறது.

 சில எச்சரிக்கைகளும் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட பாரம்பரிய கட்டிடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பல்வேறு இடங்களில் உள்ள நிலங்கள், அத்தனை பழைய கட்டிடங்களையும் பாதுகாப்பது அவ்வளவு சுலபமான ஒன்றல்ல; அதிக நிதிப்பற்றாக்குறை, அதிக பணவீக்கம் கொண்ட பொருளாதாரம் உள்ள சமகாலநிலையில். பழமையான கட்டிடங்களை பாதுகாப்பது வீண் ஆடம்பரமாகவும் இருக்கும். அவற்றை அரசு விற்பது என்பதைவிட சில காலத்திற்கு வாடகைக்கு  என்று தந்துவிடலாம். மேலே கூறிய வடாலா நிலமானது அதிக காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டதே. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

 இந்த நடவடிக்கையை தவறு என்று கூட சிலர் கூறலாம். ஆனால், இதுவே நிலைமையை சமாளித்து செல்வதற்கான வழி. வெளிப்படையாக கூற வேண்டுமானால் 7% பணவீக்க பொருளாதார நிலைமையில் ஏழைகள், நடுத்தரவர்க்கம் என பணவீக்க நிலையை எதிர்த்துப் போராடி வருகிறபோது இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கானது, இவற்றை நாம் ஏற்றுக் கொள்ளவில்லையென்றால் உண்மையான செல்வத்தை நாம் என்றுமே பெறமுடியாது. அறுபது ஆண்டுகளைக் கடந்த நிலைமையில் சொத்துக்களின் மீதான செலவுகள் மக்கள் தலையில் விழுவது நிலக்கிழார்த்தனம் எனப்படும்.

சட்டத்தை உருவாக்குபவர்களுக்கு கடினமானதாக இருக்கும் என்றாலும் இது முடியாததில்லை. நான் கூறியவை, மக்கள் நலனை உத்தேசித்த சிந்தனைகள் ஆகும். நமது மதிப்பிற்குரிய அரசியல்வாதிகளும் அப்படியே நினைத்து செயல்படுத்த வேண்டுமே?  அப்படி நடந்தால் சரிதானே!

சேட்டன் பகத் எழுதிய கட்டுரைகளை அடிப்படையாக கொண்ட தமிழாக்க கட்டுரை.
          

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்