இடுகைகள்

சீக்கியர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு

படம்
  பிரிவினைவாத இயக்க தலைவர் படுகொலை – இந்தியாவின் பங்கு ரா அமைப்பு பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் பல்வேறு அரசியல் சித்து விளையாட்டுகளை விளையாடி வருவது பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள். ஆனால், கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற காலிஸ்தான் ஆதரவு தலைவரை கொல்வார் என யாரும் நினைத்திருக்க முடியாது. இதுபற்றிய உளவுதுறை தகவலை கனடா பெற்று, இந்தியாவின் ரா அமைப்பு படுகொலைக்கு காரணம் என வெளிப்படையாக நாடாளுமன்றத்தில் பேசியது. இது இந்தியாவுக்கு தர்மசங்கடமாக ஆகிப்போனது. கொலைக்கு ஆதரவான தடயங்கள், ஆதாரங்களை கனடா இந்தியாவுக்கு தரவில்லை. அரசியல்ரீதியாக அவற்றை தர முடியாது என்றாலும் கூட இந்தியாவை நேரடியாக குற்றம்சாட்டியது மேற்கு நாடுகளுக்கே சற்று அதிர்ச்சிதான். சீக்கியர்கள் கனடாவில் பெரும்பான்மையினராக வசித்து வருகிறார்கள். கனடா அரசின் அமைச்சர்களாகவும் சீக்கியமதத்தினர் இருக்கிறார்கள். எனவே, அவர்களில் ஒரு முக்கியமான தலைவர் கொல்லப்பட்டால் அதை பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே நகரிலுள்ள குருத்துவாராவுக்கு வழிபாட்டிற்கு சென்றுவிட

காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை உருவானது எப்படி? - காலக்கோடு

படம்
  காலிஸ்தான் வரைபடம் காலிஸ்தான் தனி மாநிலமாக.. அதன் லோகோ காலிஸ்தான் தனிநாடு கோரிக்கை -காலக்கோடு 1920ஆம் ஆண்டு அகாலி தளம் என்ற அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இந்த கட்சி, பஞ்சாபி மக்களுக்கான தனி நாடு கோரிக்கையை உருவாக்கியது. இதற்காகவே பஞ்சாபி சுபா என்ற இயக்கம் உருவானது. 1966 பஞ்சாப் இரண்டாக பிரிக்கப்பட்டு   பஞ்சாப், ஹரியாணா என இரு மாநிலங்களாக உருவானது. இதில் சில பகுதிகள் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சென்றது. சண்டிகர் நகர், மைய நகரமாக மத்திய அரசின் யூனியன் பிரதேச நகரமாக மாற்றப்பட்டது. 1969 அரசியல் தலைவர் ஜக்ஜித் சிங் சோகன் இங்கிலாந்திற்கு சென்றார். அங்கு சென்று காலிஸ்தான் நாட்டை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கினார். 1973 அகாலி தளம் கட்சி, பஞ்சாப் மாநிலத்திற்கு சுயாட்சி கோரி ஆனந்த்பூர் சாகிப் தீர்மானத்தை (Anandpur sahib resolution) உருவாக்கியது. 1978 துறவி நிரான்காரி மிஷன் அமைப்பின் உறுப்பினர்களுக்கும், மரபான சீக்கியர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக, பதினாறு பேர் கொல்லப்பட்டனர். ஜர்னைல்சிங் பிந்த்ரான்வாலேவை பஞ்சாபிற்கு கூட்டி வருவதற்கான கருத்தில் ஏற்பட்ட மோதலே, கொல

ஒரே இந்தியா என்ற கூக்குரலால், பன்மைத்தன்மை வாய்ந்த பஞ்சாபி கலாசாரம் அழிக்கப்படுகிறது! - அம்ரித்பால் சிங்

படம்
  அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராளி அம்ரித்பால் சிங் - காலிஸ்தான் போராட்டத் தலைவர் அம்ரித்பால் சிங் சந்து, துபாயில் குடும்பத் தொழிலான சரக்கு போக்குவரத்தை கவனித்துக்கொண்டிருந்தனர். மழுங்கச் சிரைத்த கன்னம், குறைவான தலைமுடி, டீ ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் என வாழ்ந்தவர். இப்போது தோற்றத்தில் நிறைய மாறிவிட்டார். கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வந்தவர், சீக்கிய மதகுரு கோபிந்த் சிங் தொடங்கிய அம்ரித் சன்சார் என்ற விழாவில் பங்கேற்றார். காலிஸ்தான் கோரிக்கையை எழுப்பிய ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவின் அடிச்சுவட்டை பின்பற்றத் தொடங்கிவிட்டார். அம்ரித்பாலைச் சுற்றி எப்போதும் பாதுகாவலர்கள் உண்டு. இவர்களின் கையில் துப்பாக்கி, வாள் என இருவகை ஆயுதங்கள் உள்ளன. சொகுசு காரில் பல்வேறு இடங்களுக்குச் சென்று சீக்கியர்களின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி பேசி வருகிறார். சீக்கியத்தை தனி மதமாக இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை என்பதால், அம்ரித்பால் அதன் மீது பெரிய மதிப்பை வெளிப்படுத்தவில்லை. இந்தச் செய்தியை எழுதும்போது தனது கன்னத்தில் தேசியக்கொடியை வரைந்த சீக்கிய சிறுமி தங்க கோவிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கப்பட்டு

இந்திய சமூகத்தில் செக்ஸ் அனுபவிப்பதில் ஆர்வம் காட்டும் பெண்கள்!

படம்
1  இந்தியா டுடே இந்தியா முழுக்க ஒரே வாரம் மட்டும் பரபரப்பாக விற்கும். அந்த வாரம் அப்படி என்ன கவர் ஸ்டோரி என மனதிற்குள் கேள்வி ஓடுகிறதா? அது மக்களின் முக்கியமான வாழ்வாதார பிரச்னை என்னவென்று தெரியுமா? செக்ஸ்.  செக்ஸ் வாழ்க்கை இந்தியா முழுக்க எப்படியிருக்கிறது என சர்வே ரெடி செய்வார்கள். ஆணுறை பிராண்டுகளில் சர்வதேச பிராண்டுகள் வரை விளம்பரம் கொடுத்து அமர்க்களப்படுத்துவார்கள். இந்தியாடுடே, செக்ஸ் சர்வே என்பதற்காகவே தனியாக போட்டோஷூட் வேறு நடத்துவார்கள்.  பின்னே வாழ்க்கை பிரச்னை அல்லவா? செக்ஸ் சம்பந்தமான விஷயங்களின் ஆதாரமே பெண்கள்தான். அவர்கள்தான் இதில் முக்கியமான இயற்கை வளம். அதனை வெற்றிகொள்ளத்தான் ஆண்கள் அரும்பாடு படுகிறார்கள். இதற்காக டைம்ஸ் ஆப் இந்தியா முதல் இந்துஸ்தான் டைம்ஸ் வரை பல்வேறு டிப்ஸ்களை வாரம்தோறும் வெளியிட்டு மனித சமூகத்திற்கு அருந்தொண்டு ஆற்றுகிறார்கள்.  பழங்குடிகளைப் பொறுத்தவரை குறிப்பிட்ட வயதில் விருப்பமானவர்களை தேர்ந்தெடுத்து தனியாக தங்க வைக்கிறார்கள். இதில் பெண், ஆணோடு உறவு கொள்வது தொடங்கி வாழ்வது வரையிலான பல்வேறு பயிற்சிகள் முயன்று பார்க்கிறார்கள். இதனால் அவர்களது வாழ்க்க

சீக்கியர்களை கொன்ற சம்பவங்களை நானே நேரடியாகப் பார்த்தேன்! - எழுத்தாளர் எம் முகுந்தன்

படம்
        எழுத்தாளர் எம் . முகுந்தன்   நேர்காணல் எம் . முகுந்தன் டைம்ஸ் ஆப் இந்தியா கே பி சாய் கிரண்   பிரெஞ்சு தூதரகத்தில் பணியாற்ற டெல்லி வந்தவர் , அந்த நகரைப் பற்றிய நூல்களை எழுதியுள்ளார் . டெல்லி எ சாலோக்யூ என்ற நூலை எழுதி நடப்பு ஆண்டிற்கான ஜேசிபி இலக்கிய விருதை வென்றுள்ளார் . நீங்கள் டெல்லி பற்றி டெல்லி , டெல்லி 1981, டெல்லி என சாலிக்யூ என்ற நூல்களை எழுதியுள்ளீர்கள் . நீங்கள் வெளியிலிருந்து வந்து டெல்லியில் குடியேறி வெகு ஆண்டுகளாக இங்கு வாழ்ந்து வருகிறீர்கள் . உங்கள் பார்வையில் டெல்லியைப் பற்றிய கருத்து என்ன ? அறுபதுகளில் நான் டெல்லிக்கு வந்துவிட்டேன் . அடுத்த நாற்பது ஆண்டுகளில் நகரம் ஏராளமான மாற்றங்களை சந்தித்துள்ளது . இதனை நான் வெளிப்புற தன்மையில் மட்டும் கூறவில்லை . கலாசாரம் சார்ந்தும் பேசுகிறேன் . அன்றைய காலத்தில் நகரமாக இருப்பதை விட பல்வேறு கிராமங்களின் இணைப்பு புள்ளியாகவே நகரம் இருந்தது . முபாரக்பூரில் கோதுமையும் காலிப்ளவரும் ஏராளமாக விளைந்து வந்த்து . எருமைகளும் இங்கே சாலைகளில் ஏராளமாக உலவி வரும் . இப்போது டெல்லியில் வன்முறையும் குற்றங்களும் அ

ஆங்கிலேயர் கால சீக்கிய குடும்பத்தின் வழியே வரலாற்றுப் பயணம்! - கடிதங்கள்

படம்
  விடியல் முகம் - முல்க்ராஜ் ஆனந்த் இனிய தோழர் முருகானந்தம் அவர்களுக்கு,  வணக்கம். இந்த ஆண்டு குருபெயர்ச்சி உண்மையாகவே நிறைய செயல்பாடுகளை செய்துள்ளது என்றுதான் கூறவேண்டும். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்து வந்த குங்குமம் நிருபர், கல்வி வேலை வழிகாட்டி ஆசிரியர் நீலகண்டன், தலைமை உதவி ஆசிரியர் கோகுலவாச நவநீதன், குங்குமம் தோழி ஆசிரியர் வள்ளிதாஸன், குங்குமம் டாக்டர் ஆசிரியர் ஆர்.வைதேகி ஆகியோர் வரும் நாட்களில் விடைபெற்று வேறு பத்திரிகை அலுவலகங்களுக்கு செல்லவிருக்கின்றனர்.  ஒவ்வொருவரின் எதிர்கால வாழ்க்கைக்கு அவர்களது செயல்களும் முடிவுகளும்தான் பொறுப்பு. ஆனால் இவர்கள் அனைவரும் பேசி வைத்தது போலவே அடுத்தடுத்து வேலையிலிருந்து விடைபெறுவது பயமாக உள்ளது.  நான் முத்தாரம் இதழின் முழுப் பொறுப்பையும், சூரியன் பதிப்பக ஒருங்கிணைப்பு பணிகளையும் செய்து வருகிறேன். கூடவே குங்குமத்தின் உதவி ஆசிரியர் பணிகளையும் சுமக்கிறேன். இதை சுமத்தப்பட்டு விட்டது என்றுதான் கூறவேண்டும். இனி என்ன ஆகுமென தெரியவில்லை. தினகரனின் வியாழன் இணைப்பிதழான கல்வி மலருக்கான கட்டுரைகளையும் எடிட் செய்து தரச்சொல்லியிருக்கிறார்கள். தற்போது, புது

வன்முறையும் பயமும் எனது வாழ்க்கை முழுக்க இருந்தது! - எழுத்தாளர் அர்ஜூன் ராஜ் கெய்ன்

படம்
  அர்ஜூன் ராஜ் கெய்ன்ட் எழுத்தாளர்  இந்தியாவின் முக்கியமான காமிக்ஸ் எழுத்தாளராக உங்களை அமெரிக்க பிரசுரமான பாய்சன்டு பிரஸ் கூறியுள்ளது. நீங்கள் அனாட்டமி ஆப் ஸ்கேர்ஸ் நூலை எழுதுவதற்கு என்ன காரணம்? இந்த நூலை நான் எனது 26 வயதில் எழுதினேன். அப்போது எனக்கு இந்தியர்கள் வெளிநாட்டில் இருப்பதால், தங்களது தாய்நாடு பற்றி தோன்றும் எண்ணம் இப்படித்தான் நூலாக வரும் என்று  தோன்றியது. இதனை தொடக்கமும் , முடிவும் என்று நினைத்து எழுதினேன். இதனை பிரசுரிக்க பல்வேறு இடங்களுக்கு சென்றாலும் அந்த எண்ணம் எளிதாக நடக்கவில்லை. பெங்குவின் இந்தியா எனது நூலை பிரசுரிக்க ஏற்றது. காமிக்ஸ்களை எழுதுவதும், மகாராஜா சிக்கந்தர் பற்றிய கதையும் மெல்ல வலிமை வாய்ந்ததாக மாறியது.  இந்திராகாந்தி இறந்தபோது நிலைமை எப்படியிருந்தது? அப்போது நானும் அப்பாவும் டெல்லியில் ஜிம்கானா கிளப்பில் இருந்தோம். மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் ஓடி வந்து எல்லோரும் கிளப்புங்கள் உடனே உடனே என அவசரப்படுத்தினார்.  அப்பாவுக்கு அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட அவரை சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியிருந்தது.  இதில் வரும் மையப் பாத்திர