இடுகைகள்

இதழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இடது

படம்
                        இடது சமூக அரசியல் பண்பாட்டு காலாண்டிதழ் ஆசிரியர் ஓடை.பொ.துரையரசன் மார்க்ஸ் புதிய உலகின் திறவுகோல் பேராசிரியர் ஹிரென் முகர்ஜி தமிழில் : நா. தர்மராஜன் உலகத்தில் கடைசி மனிதன் இருக்கின்றவரை, அவனுடலில் கடைசி மூச்சு இருக்கின்ற வரை அவர்களுடைய பெயர் நிலைத்திருக்கும் என்று சொல்லப்படுகிற தகுதியுடைய பெரியோர்கள் சிலரே. அந்த சிலரில் கார்ல் மார்க்ஸ் தலைசிறந்தவர். அவர் பிறந்தநாள் (1818 மே 5) உலகம் முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. ‘’உலகத்தில் முதலாளிகளும் தொழிலாளிகளும் இருக்கின்றவரை நமக்கு முன்னாலிருக்கின்ற புத்தகத்தைப் போல தொழிலாளர்களுக்கு அதே அளவு முக்கியத்துவத்தைக் கொண்ட வேறு புத்தகம் இதுவரை வெளிவரவில்லை’’  வாழ்நாள் முழுவதும் மார்க்சினுடைய நண்பராக சகாவாக இருந்த ஏங்கெல்ஸ் ‘மூலதனத்தின்’ முதல் தொகுதியின்(1867) விமர்சனத்தை இப்படித்தொடங்கினார். இந்த வார்த்தைகள் முதன்முறையாக எழுதப்பட்டபோது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு இன்றும்கூட உண்மையாக இருக்கின்றன. கார்ல் மார்க்சும் அவருடைய சகாவான ஏங்கெல்சும் ஒன்றிணைந்தும் தனியா