இடுகைகள்

ட்ரோல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்களை வளைக்க முயலும் காவிக்கட்சி! - ரூட்டு புதுசு

படம்
  இன்ஸ்டாகிராம் இளைஞர்களை குறிவைத்து வளைக்கும் பாஜக இன்று சாதாரணமாக பாய் விற்கும் வியாபாரி கூட இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக்கொண்டு   மகிழ்ச்சியுடன் தனது பயண நேரத்தை செலவிடுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூட்யூப் ஷார்ட்ஸ், ஃபேஸ்புக் ஆகியவை மூலம் இளைஞர்களின் வாழ்க்கை அதிவேகத்தில் பயணித்து வருகிறது. ஒரு நிமிட வீடியோ போதும் ஒருவரை பிரபலமாக்க.. இதில் எதையும் யோசிக்க வேண்டியதில்லை. டிவி பார்ப்பது போல... ரீல்ஸை  விரல்களால் தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே போகலாம்.  அரசியல் கட்சிகளில் 2024ஆம் ஆண்டு தேர்தலுக்கான ஏற்பாட்டை பாஜக ஏற்கெனவே தொடங்கிவிட்டது.   சமூக வலைத்தளங்களில் மோடியின் அனைத்து செயல்பாடுகளும் ரீல்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டு பகிரப்படுகிறது. ஓராண்டுக்கு முன்னர், இந்திய பிரதமர் மோடி பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றார். இந்த பயணத்தில் இருபத்தைந்து சந்திப்புகள் நடந்தன. இவை அனைத்துமே பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டு ரீல்ஸ் வடிவில் வெளியாகின. இதை அப்போதே 2.4 மில்லியன் பேர் பின்தொடர்ந்தார்கள். 40 ஆயிரம் பேர் லைக் போட்டு விரும்புவத

என்னை நானே மணப்பதில் பிறருக்கு என்ன பிரச்னை? - ஷாமா பிந்து

படம்
  இந்தியாவைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. இவரது வயது 24. கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் இவரைப் போல் இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்ட ஒருவரைப் பார்க்க முடியாது. இத்தனைக்கும் அவர் யாரையும் விமர்சிக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்ற பதிவைத்தான் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதற்கு இத்தனை எதிர்ப்பு, ஒரு பெண் திருமணம் செய்துகொள்வதை ஏன் இத்தனை பேர் எதிர்க்கிறார்கள். அதில் தான் சூட்சுமம் உள்ளது. ஷாமா, தன்னைத்தானே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறார். இதனை சோலோகாமி என அழைக்கிறார். அவரிடம் பேசினோம்.  மணப்பெண், மனைவி இரண்டுக்குமான வேறுபாடு என்ன? நான் இளம்பெண்ணாக வளர்ந்தபோது எனக்கு திருமணம் செய்துகொள்ளத் தோன்றியது. நிச்சயம் நான் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் மனைவியாக இருக்கமாட்டேன் என உறுதியாக நினைத்தேன். திருமணம் செய்துகொண்டால் உங்கள் வீட்டை விட்டு செல்லவேண்டும். பிறரது வீட்டில் அவர்களின் விதிகளுக்கு ஏற்றபடி வாழ வேண்டும். இதைப்பற்றி யோசித்துக்கொண்டு இணையத்தில் தேடியபோது சோலோகாமி பற்றி தெரிந்தது. எனவே அதைப்பற்றி படித்து என்னை நானே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தேன். இந்தியாவில் இது முதல் ம