இடுகைகள்

ஸீப்ரா ஃபின்ச் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவையின் மூளை இயக்கங்களை பாடல்களாக மாற்றி மனிதர்களுக்கு உதவலாம்! - புதிய ஆராய்ச்சி

படம்
  பறவைகளின் மூளையில் ஒரு பாடல் பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், அதன் மூளை இயக்கத்தை ஆராய்ந்து அதனை பாடலாக மாற்றியிருக்கிறார்கள். பாட்டு எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் கேட்க கூடாது. எதற்கு இப்போது இந்த ஆராய்ச்சி என்று கேட்டால் கட்டுரையை நீங்கள் தாராளமாக வாசிக்கலாம்.  அமெரிக்காவின் சாண்டியாகோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் மூளை இயக்கத்தை பாடலாக மாற்றும் ஆராய்ச்சியை செய்துள்ளனர். இதன்மூலம் பேச முடியாத மக்களுக்கு குரல் அமைப்புகளை வடிவமைக்க முடியும் என்பதுதான் அவர்கள் சொல்லும் சேதி.  தற்போதுள்ள மருத்துவக்கருவி மூலம் ஒரு நிமிடத்திற்கு இருபது வார்த்தைகளை பேச முடிகிறது.  யோசித்துப் பாருங்கள். நீங்கள் பேசுவதை கூறும் கருவியை விட என்ன பேசலாம் என்று நினைப்பதை பிராஸ்தெடிக் கருவி மூலம் பிறருக்கு தெரிய வைத்தால் பிரமாதமாக இருக்குமே என்கிறார் உளவியல் மற்றும் நரம்பு உயிரியல் பேராசிரியர் டிமோத்தி ஜென்ட்னர்.  ஸீப்ரா ஃபின்ச் என்ற பறவைகளின் உடலில் எலக்ரோடுகளைப் பொருத்தி, செயற்கை நுண்ணறிவு மூலம் அதன் மூளை இயக்கங்களை படம்பிடித்துள்ளனர். இதன்மூலம் மூளை எப்படி குரல்  தசைகளை இய