இடுகைகள்

நாக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பூதம் நீட்டிய நாக்கின் பெயர் - ட்ரோல்டுங்கா

படம்
  ட்ரோல்டுங்கா  பூதத்தின் நாக்கு! நார்வே நாட்டில், 700 மீட்டர் உயரத்தில் உள்ள மலைப்பகுதி இது. இதனை அடையாளப்படுத்துவது  அந்தரத்தில் நீட்டிக்கொண்டிருக்கும் பாறைத்துண்டு ஒன்று. ட்ரோல்டுங்கா (Trolltunga) என்பதற்கு, ஸ்வீடிஷ் மக்களின் மொழியில் பூதத்தின் நாக்கு என்று பொருள். நார்வே நாட்டின் தெற்குப்பகுதியில் ஏரியும் மலைப்பகுதியும் அமைந்துள்ளது. மேகமூட்டமான, ஈரப்பதமான குளிர்ந்த தட்பவெப்பநிலையே இங்கு காணப்படுகிறது.  பாறை அல்லது மலைத்திட்டில் நின்று கீழே பார்த்தால் அழகான காட்சிகள் தெரியும். ஆனால் அதற்கு நிறைய துணிச்சல் தேவை. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இடம் ட்ரோல்டுங்கா என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். தொன்மைக் காலத்தில், நார்வேயில் பனிப்பாறை நகர்ந்து வந்தது. அதிலிருந்து உருகிய நீர் பாறைகளின் பரப்பில் உறைந்தது. பின்னாளில், இவை ஏற்படுத்திய மாற்றங்களால் பாறைகள் உடைந்து ட்ரோல்டுங்கா மலைப்பகுதி உருவானது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்பகுதியில் உள்ள புற்கள், தாவரங்களை ரெய்ன்டீர் (Reindeer)எனும் கலைமான் இனத்தைச் சேர்ந்த விலங்கினம் உண்கிறது. ட்ரோல்டுங்கா பகுதியைப் பற்றிய நிறைய புனைவுக் கதைக