இடுகைகள்

இளமைக்காலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையைச் சொன்னால் கொல்வேன் - பாபி மிரட்டல்

படம்
அசுரகுலம் பாபி ஜோ லாங் 1953 ஆம் ஆண்டு மேற்கு வர்ஜீனியாவில் பிறந்தவர் பாபி. பின்னர் தாயுடன் மியாமிக்கு இடம்பெயர்ந்தார். சிறுவயதிலிருந்து மேற்கு நாடுகளில் குழந்தைகளை தனியாக படுக்க வைத்து பழக்குவார்கள். அவர்களின் சுய ஆளுமைக்கு அது முக்கியம். ஆனால் பாபி, பதிமூன்று வயது வரை தாயுடனே தூங்கிப் பழகியவன். தாய் வெயிட்ரஸாக பணியாற்றியவர். அவர் தூங்கிய இடம் பின்னாளில் தாயின் காதலனுக்கு என்றானபோது பாபியின் மனம் உடைந்து போனது. அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மெல்ல தனியாக தூங்கத் தொடங்கினான். இதற்கிடையில் அவனது உடல்ரீதியான பாதிப்பு பெரியதாக தொடங்கியது. குறிப்பாக பள்ளியில். பாபி சிறுவனாக இருக்கும்போதே அவனுக்கு ஹார்மோன் குறைபாட்டால் மார்புக் காம்புகள் பெரிதாகி ( Klinefelter syndrome ) பெண்கள் போல வளரத் தொடங்கியது. சாதாரணமாக ஆண்கள் படிக்கும் பள்ளியில் லேசாக பெண் சாயலில் இருக்கும் பையன்களுக்கு கன்னத்தில் முத்தம் கொடுப்பதும், மார்பைத் தடவுவதும், புட்டத்தைக் கிள்ளுவதுமாக இருப்பார்கள். இங்கு பாபி இப்படி இருந்தால் சும்மா விடுவார்களா? பட்டப் பெயர் வைத்து அழைத்தனர். தொட்டு தடவினர். மார்பை