இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதி வன்முறைகளை மறைக்கவே இந்தியா அகிம்சை நாடு என்று கூறப்பட்டது! - அபர்ணா வைதிக், வரலாற்று ஆய்வாளர்

படம்
              வரலாற்று ஆய்வாளர் அபர்ணா வைதிக் அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் லவ் ஜிகாத் முயற்சிகள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புழக்கமாகி நடைபெற வாய்ப்புள்ளதா ? இந்து என்பதை நம்மில் பலரும் கேட்டுப்பழகியது 19 ஆம் நூற்றாண்டு வாக்கில்தான் என்பதை நினைவுகூருங்கள் . அப்போதிலிருந்து இந்து என்பது பெரும்பான்மையான பல்வேறு ஊடகங்களில் ஒலித்தபடிதான் இருக்கிறது . ஆனால் லவ் ஜிகாத் என்ற சட்டம் இப்போது குறிப்பிட்ட மாநிலத்திற்கான சட்டமாக உள்ளது . நாளை இது நாடு முழுக்க அமலாகும் வாய்ப்புள்ளது . லவ் ஜிகாத் என்ற சட்டம் இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த சட்டமாக இருந்தாலும் இது இந்து முஸ்லீம் என்ற இரு மதங்களைக் கொண்டது மட்டுமல்ல . முஸ்லீம் , கிறிஸ்துவ அமைப்புகள் உத்தரப்பிரதேசத்ததிலுள்ள சமர் , சந்தால் , தோம் , லாய் பேகிஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதிப்பிரிவினரை தங்கள் மதத்திற்கு மாற்றிவந்தன . இதனால்தான் ஆரிய சமாஜமும் , இந்து மகாசபையும் இந்து மக்கள் எண்ணிக்கையில் குறைகின்றனர் என்று குரல் எழுப்பி பேரணிகளை நடத்தினர் . லவ் ஜிகாத் என்பதே மேல்சாதியைச் இந்து பெண்களை கிறிஸ்தவர்கள் , முஸ்லீம்கள்

ஒரே நேரத்தில் மாநில அரசுகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தல் நடத்துவது சாத்தியம்தான்! - சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்

படம்
                சுனில் அரோரா தேர்தல் ஆணையர் மேற்கு வங்க தேர்தலுக்கு மத்திய அரசின் பாதுகாப்புபடையினரை மாநிலஅரசு அனுமதிக்க மறுப்பதாக கூறப்படுகிறதே ? எங்களுக்குத் தேவையானபாதுகாப்பு படையினரை பற்றி மத்திய அரசிடம் பேசி வருகிறோம் . இன்னும் எண்ணிக்கை முடிவாகவில்லை . இதுபற்றிய தகவலை இன்னும் மாநில அரசிடம் நாங்கள் பேசவில்லை . தேர்தல் பத்திரம் பற்றி உங்கள் கருத்து என்ன ? 2018 ஆம் ஆண்டு பாஜக தவிர பிற கட்சிகள் தேர்தலுக்கு செலவிடுவது பற்றிய புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தது பற்றி கூறுங்கள் ? உச்சநீதிமன்றத்தில் நாங்கள் எங்கள் தரப்பு கருத்தை பதிவு செய்துள்ளோம் . தேர்தல் பத்திரம் என்பதை நாங்கள் வெளிப்படையானது என நம்புகிறோம் . இன்றுவரை அதே கருத்தில்தான் உள்ளோம் . பெருந்தொற்று காலத்தில் தேர்தல் செலவுகள் பற்றிய கவனம் தேவை . இதுதொடர்பாக ஹரிஷ்குமார் தலைமையில் கமிட்டி ஒன்றை நியமித்துள்ளோம் . இவர் முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி . அவர்களுடைய அறிக்கை கிடைத்துவிட்டால் இதுதொடர்பாக விரைவில் முடிவெடுத்து விடலாம் . கோவிட் -19 காலத்தில் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேர்

2020 ஆம் ஆண்டின் பரிசோதனை முயற்சி படங்கள்! - ஓடிடியை சுவாரசியப்படுத்தும் புதிய இயக்குநர்கள்

படம்
              ஓடிடியாகட்டும் சினிமாவாகட்டும் சோதனை முயற்சிகள் எப்போதும் வந்துகொண்டே இருக்கும் . இந்த படங்களில் பட்ஜெட் குறைவாக இருந்தாலும் ஐடியாரீதியாக நிறைய முயற்சிகள் செய்திருப்பார்கள் . இன்று ஓடிடி தளம் இதற்கான வாய்ப்பாக உள்ளது . அப்படி வந்த படங்களைப் பார்ப்போம் . கார்கோ இறந்துபோனவர்களை திரும்ப பூமிக்கு அனுப்பி வைக்கும் பணியை நாயகன் செய்துவருகிறார் . அவருக்கு உதவும் உதவியாளர் கூட அப்படி பூமிக்கு வந்தவர்தான் . பட்ஜெட் குறைவுதான் என்றாலும் அறிவியல் கான்செப்டிக் இந்திய புராண சமாச்சாரங்களை கலக்கி சிறப்பாக செய்திருக்கிறார்கள் . விக்ரம் மாசே , சுவேதா திரிபாதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள் . இவர்கள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் வேண்டாம் என தூக்கியெறிந்தவைதான் . அதையெல்லாம் கவலைப்படாமல் படத்தைப் பார்த்தால் ரசிக்கலாம் . டைஸ் பிஜய் நம்பியார் இதற்கு முன்னர் எடுத்த படங்கள் எப்படியோ அப்படித்தான் இந்தபடமும் . புல்கித் சாம்ராட் , ஹர்ஸ்வர்த்தன் ரானே ஆகியோருக்கு இடையிலான முரண்பாடுகள்தான் படம் . படத்தின் இசை , காட்சிக்கோப்பு என அனைத்துமே பரிசோதனை முயற்சிதான் . படத

நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள்- தமிழ், தெலுங்கு, இந்தி- ஓடிடி முதல் சினிமா வரை .....2020

படம்
                        நம்பிக்கை அளிக்கும் நடிகர்கள் காளிதாஸ் பாவகதைகளில் சுதாவின் பகுதியில் நடித்தவர் , இவர் நடித்த முதல் படமாக ஒருபக்க கதையும் இப்போது வெளியாகியுள்ளது . புத்தம் புது காலை என்ற அமேசானின் படத்தில் கூட நடித்திருக்கிறார் . சிறுவனாக நடித்தபோது தேசிய விருது பெற்றவர் காளிதாஸ் . வாணி போஜன்    ஓடிடியில் வரும் பல்வேறு படங்களுக்கு இவரைத்தான் புக் செய்கிறார்கள் . இவரும் தனக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ இல்லையோ ஓகே என பதில் சொல்லி நடித்துக் கொடுத்துவிடுகிறார் . அப்படித்தான் லாக்கப் , டிரிபிள்ஸ் படங்கள் வந்தன . சினிமாவாக ஓ மை கடவுளேவில் கொடுத்த வாய்ப்பில் சிறப்பாகவே நடித்திருந்தார் . தெலுங்கில் தருண் பாஸ்கரோடு ஒரு படத்தில் நடித்தார் . சித்து ஜோனலகட்டா   இப்போது நடித்த இரண்டு ஓடிடி படங்களும் இவரே எழுதி திரைக்கதை எழுதி நடித்தவைதான் . கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா , மா விந்த கதா வினுமா ஆகியவற்றில் இளைஞர்களை குறிவைத்து எழுதிய வசனங்கள் , காட்சிகள் அனைத்தும் பிரமாத வெற்றி பெற்றன . இவர் நடித்த குண்டூர் டாக்கீஸ் படம் முக்கியமானது . அதில் கொஞ்ச

சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்

படம்
                சௌகதா ரே திரிணாமூல் காங்கிரஸ் சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா ? இல்லை . அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார் . அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு . போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு . அவருக்கு இது தெரியாதா ? தெரிந்திருக்கலாம் . அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு . அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார் . உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர் . அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார் . மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல . எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது . அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை . ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள் . இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா ? இவர்கள் யாரும் இத்தேர்தல

தொழில் மாநாடு மேற்கு வங்கத்தில் கூட்டப்பட்டது மோசடியானது! ஜக்தீப் தன்கர், மேற்கு வங்க ஆளுநர்

படம்
                  ஜக்தீப் தன்கர் மேற்குவங்க ஆளுநர் மாநில அரசு உங்களை நிறைய விஷயங்களில் தலையிடுவதாக குற்றம் சாட்டுகிறதே ? மேற்கு வங்க மாநிலம் முழுக்க காவல்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது . இங்கு மனித உரிமைகளுக்கு எந்த மதிப்பும் இல்லை . மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் , உயர்நீதிமன்ற நீதிபதி . அவர் இப்போது வெண்டிலேட்டர் வசதியுடன்தான் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கிறார் . அரசியலமைப்புச் சட்டப்படி மாநில அரசின் ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தலாமே ? நீங்கள் கொடுக்கும் அறிக்கைப்படி செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கூட கூறியிருக்கிறாரே ? நான் மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையை வெளிப்படையாக கூறமுடியாத நிலையில் உள்ளேன் . ஆளும்கட்சி தலைவர் உங்கள் மீது வழக்குப்பதிவதாக கூறுகிறார் . அக்கட்சியைச் சேர்ந்தவர் உங்கள் மாமா என்று வேறு அழைக்கிறார் . இதற்கு உங்கள் பதில் என்ன ? ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நான் எந்த பதிலும் கூறவிரும்பவில்லை . நிதிஅமைச்சர் அமித் மித்ரா நீங்கள் மத்திய அரசிடமிருந்து எந்த நிதி உதவிகளையும் பெற்றுதரவில்லை என்ற

நாடு வளர்ச்சிபெற பெருநிறுவனங்கள் வங்கிகள் தொடங்குவது அவசியம்தான்! - உதய் சங்கர், இந்திய வணிகநிறுவனங்களின் அமைப்பு

படம்
            உதய் சங்கர் இந்தியன் சேம்பர்ஸ் ஆப் காமர்ஸ் அடுத்து வரும் பட்ஜெட்டில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் ? இந்தியாவின் தொழில்துறையில் பல்வேறு துறைகளில் பொருளாதாரம் மீண்டு வருகிறது . இந்த விஷயத்தில் நாங்கள் அரசுக்கு உதவி செய்ய நினைக்கிறோம் . எங்கள் அமைப்பு முதன்முதலாக மக்களின் கையில் பணத்தை கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியது . காந்தி கிராமபுற வேலைவாய்ப்பு திட்டம் போன்ற நிறைய திட்டங்கள் இப்போது தேவை . இங்கு அனைத்து துறைகளும் ஒரே மாதிரியான பொருளாதார நிலையில் வளர்ச்சி பெறவில்லை . நகர்ப்புறத்தில் உள்ள வறுமையை அரசு அடையாளம் காண்பது அவசியம் . ஹோட்டல் , சுற்றுலா துறைகளுக்கு அரசு உதவி செய்துவருகிறது . இதைப்போலவே பொருளாதார இழப்பைச் சந்தித்து வரும் பல்வேறு தொழில்துறையினருக்கு அரசு உதவி செய்யவேண்டும் . 2021 இல் பொருளாதாரம் என்ன மாற்றம் காணும் என்று நினைக்கிறீர்கள் ? அதற்கு முழுக்க நாம் பெருந்தொற்று பாதிப்பை அளவிடவேண்டும் . பிறகே ஒரு முடிவுக்கு வரமுடியும் . இதில் நல்ல செய்தி , தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் , அது விரைவில் நமது நாட்டிற்கு கிடைக்கும் என்பதுதா

காட்டு விலங்குகளை பாதுகாக்க முயலும் கரடியும் மானும்! - ஓபன் சீசன் -1

படம்
                ஓபன் சீசன்2006 முதல் பாகம் Directed by Roger Allers Jill Culton Produced by Michelle Murdocca Screenplay by Steve Bencich Ron J. Friedman Nat Mauldin Story by Jill Culton Anthony Stacchi Based on An original story by Steve Moore John B. Carls பூக் என்ற கரடிதான் படத்தின் ஹீரோ . வேட்டைக்காரன் ஒருவன் மானை வண்டியை விட்டு ஏற்றி கொலை செய்ய முயல , அதில் மயக்கமுற்று கரடியால் உயிர்பிழைக்கும் மான் , கரடியின் ஒரே ஆத்ம நண்பனாகிறது . கரடிதான் தன் ஒட்டுமொத்த வாழ்க்கைக்கும் இன்சார்ஜ் என்கிறது . மான் அத்தியாயம் பின்னால்தான் வருகிறது . அதற்கு முன்னால் கரடியை ரேஞ்சர் பெண்மணி பராமரித்து வருகிறார் . அவரைப் பொறுத்தவரை அதன் வளர்ப்பு பிராணி போல நடத்துகிறார் . அதை வைத்து வித்தைகாட்டி அவர் சம்பாதிக்கிறார் . ஆனால் கரடிக்கு காட்டில் எப்படி உணவு பெறுவது என்பதைப் பற்றியெல்லாம் தெரியாது . அப்போது கொம்பு உடைந்த மானின் நட்பு கிடைக்க , காட்டுக்குள் கிடைக்கும் சுதந்திரம் கரடிக்கு தேவைப்படுகிறது . மேலும் சாப்பிட நிறைய தீனியை மானும் கரடியும் சென்று வேட்டையாட சூப்பர் மார்க்கெட் சுமார் மார்க்கெ