காமம் ஓர் குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகள்! - மொபியஸ் - கிம் கி டுக்
மொபியஸ்
கிம் கி டுக்
ஒரு குடும்பத்தில் நடக்கும் மனைவியைத் தாண்டிய செக்ஸ் உறவு அந்த குடும்பத்தில் ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை படமாக எடுத்துள்ளார்.
காமம் எப்படி பல்வேறு உறவுகளை குலைக்கிறது. வாழ்வில் மறக்கமுடியாத வேதனையையும், குற்ற உணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்பதை பெரும்பாலும் வசன்ங்களே இல்லாமல் கிம் கி டுக் படமாக எடுத்துள்ளார். நிறைய இடங்களில் இந்த இடத்தில் வசனங்கள் இருந்திருக்கலாமே என நாடகமயமாக படம் பார்த்த அனைவருக்கும் தோன்றும். ஆனால் அப்படி நினைக்கும் காட்சிகளில் உடல்மொழியான நடிப்பு மட்டுமே நம்மை கலங்க வைக்கிறது.
ஆண்குறியை வெட்டுவது, அதை வாயில் இட்டு மெல்லுவது, இன்னொரு இடத்தில் ஆண் குறி மீது வாகனங்கள் நசுக்கியபடி செல்வது, காமத்தை அனுபவிக்கும்போது வலியை இன்பத்துடன் ஏற்று மார்பகங்களை தடவுவது, காதுகளை நாக்கில் உரசுவது என பல்வேறு காட்சிகள் மிரட்டலாகவே உள்ளது.
தந்தை தான் செய்த காரியத்தால் மகன் தண்டனை ஏற்பதை அறிந்து கண்ணீர் விடுவது, அதன் பிறகான அதற்கு பரிகாரமாக அவர் உதவி செய்யும் காட்சிகள் குற்ற உணர்வின் வெளிப்பாடாக வலிமையாக அமைந்துள்ளன. அதற்கான சோதனையாக ஆணுறுப்பு இல்லாதவர்கள் சுய இன்பம் அனுபவிக்கும் முறை சற்று கடுமையானது. அதற்காக அவர் மகனுக்கு உதவும் காட்சி மனதை கனமாக்குகிறது.
பௌத்த மத தத்துவத்தை கத்தி, துப்பாக்கி, ரத்தம் கொண்டு பார்ப்பவர்களின் மனதை விட்டு நீங்கமுடியாதபடி கா்ட்சிகளை அடுக்கியுள்ளார் கிம்.
காமம் உடல் என்பதை தாண்டி மனதில் எப்படி வேரூன்றுகிறது. உடலின் வரம்புகளை தாண்டியும் மனம் காமத்திற்காக அலைவதை தந்தை, மகன், தாய், புரோவிஷன் ஸ்டோர் பெண் மூலம் வலிமையாக காட்டியுள்ளார்.
காமம் நிஜம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக