எந்த வயதினர் படங்களை பார்க்கவேண்டும் என்ற விழிப்புணர்வு பெற்றோருக்கு கூட இல்லை! - வாணி திரிபாதி
வாணி திரிபாதி திக்கூ
திரைப்பட சான்றிதழ் குழு
திரைப்படத்துறை தொடர்பான கொள்கை வகுப்பதற்கான ஐடியா எப்படி உருவானது?
திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது அதைச்சார்ந்த விஷயங்கள் பற்றி சேகர் கபூர் என்னிடம் பேசினார். அதற்குப்பிறகுதான் எனக்கு இதைப்பற்றி கொள்கை வகுப்பது பற்றிய எண்ணம் தோன்றியது. பொதுமுடக்க காலத்தில் மக்கள் இணையம் சார்ந்து ஓடிடி நிகழ்ச்சிகளை பார்க்கத் தொடங்கினர். இது பொழுதுபோக்குதுறையை மாற்றியுள்ளது. இவையன்றி விளையாட்டு துறை மற்றும் ஏஐ சார்ந்த விஷயங்களையும் மக்கள் பயன்படுத்துகின்றனர். நாங்கள் இக்காலகட்டத்தில் இதுபற்றி நிறையமுறை பேசி அதுபற்றிய கொள்கைகளை எழுதி உருவாக்கினோம். இப்போதுள்ள காலகட்டம் டிஜிட்டல் நிகழ்ச்சிகளுக்கு சரியானது.
மத்திய அரசு டிஜிட்டல் ஊடக நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்த சட்டங்களை கொண்டுவந்துள்ளது. நீங்கள் அதில் படைப்பு சுதந்திரம் பற்றி எப்படி பேசுகிறீர்கள்?
நாம் இங்கு பார்த்து வரும் பல்வேறு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை இன்னும் முறைப்படுத்தவில்லை. பலரும் போதைப்பொருட்கள், நிர்வாண காட்சிகள், மோசமான கெட்டவார்த்தைகளை படத்தில் பயன்படுத்துகிறார்கள். இதுபற்றி முன்னமே பொறுப்பு துறப்பு வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் பெறோர்கள் இதனை பத்து வயதிற்குட்பட்ட குழந்தை பார்க்கலாமா வேண்டாம என்று தெரியவில்லை. இதேநிலைதான் யு, ஏ சான்றிதழ் பெறும் படங்களைப் பார்ப்பதிலும் நிலவுகிறது.
படத்தின் இயக்குநர்கள் இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டும். பிரான்சில் நிர்வாண காட்சிகளை காட்டுவதில் பெரிய கட்டுப்பாடுகள் கிடையாது. அதுவே கேங்ஸ்டர் படங்களை எடுப்பதில் அவர்கள் கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். அமெரிக்காவில் நிர்வாண காட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. இது நாடுகளைப் பொறுத்து மாறும். அவர்களுக்கென சில கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறார்கள். இப்படி கட்டுப்பாடுகள் இருந்தால் பிரான்சிஸ் போர்டு கப்போலா, ரோமன் போலான்ஸ்கி எப்படி படங்களை எடுத்திருக்க முடியும்? நான் இயக்குநர்கள் படம் எடுக்கும் வேட்கையைத் தடுக்க நினைக்கவில்லை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து படம் எடுக்கும்போது, அது சரியானதாக இருக்கும் என்கிறேன்.
பொதுமக்களுக்கு திரையிடலுக்கான விதிகள், தனிப்பட்டவர்கள் படம் பார்ப்பதற்கான விதிகள் என என்ன மாறுதல்கள் உள்ளன?
திரைப்பட சான்றிதழ் என்பது அப்படியே ஓடிடி வகை படங்களுக்கு பொருந்தாது. சேக்ரட் கேம்ஸ் படம் உலகம் முழுவதும் 127 நாடுகளில் பெரும் வரவேற்பு பெற்றது. இது முழுக்க இந்தியா சார்ந்த படைப்பு. இதனை பெரும்பாலும் அனைவரும் ஸ்மார்ட்போனில் பார்த்தனர். இதனை கவனமாக பரிசீலிக்க வேண்டும்.
ஒரு படைப்பு எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கவனிக்கவேண்டும். திரைப்படங்களுக்கு சான்றிதழ் அளிக்கும் முறையை இங்கு அப்படியே பயன்படுத்துவது சரியாக இருக்காது.
உங்கள் அறிக்கையில் இந்தியா டிஜிட்டல் ஊடகங்களில் முன்னிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளதே?
இந்தியாவில் ராமாயணம், மகாபாரதம், ஜாதக கதைகள், முல்லா நஸ்ருதின் ஆகியோரின் கதைகள் வெகு பிரபலம். நாம் 5ஜி, ஏ.ஐ, விளையாட்டு, ஆக்மெண்ட் ரியாலிட்டி ஆகியவற்றை பயன்படுத்தி தெற்கு ஆசியாவை முன்னிலைப்படுத்துகிறோம். செயற்கை நுண்ணறிவு தொடர்பான விளையாட்டுகளை இந்திய இளைஞர்கள்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். நம்மிடம் உள்ள தகவல் இதனை உறுதிப்படுத்துகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா
ஸ்வாதி மாத்தூர்
கருத்துகள்
கருத்துரையிடுக