இந்தியா எப்படி இந்து ராஷ்டிரத்தை நோக்கி நகர்கிறது என்பதை அறிவதற்கான நூல்! புத்தக அறிமுகம்
புத்தக அறிமுகம்
இந்தியன் எகனாமிஸ் கிரேட்டஸ்ட் கிரிசிஸ்
டி அருண்குமார்
பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
ப. 264 ரூ.499
பெருந்தொற்று இந்தியாவில் ஏற்படுத்திய பொருளாதார மாற்றங்களை நூல் பேசுகிறது. வி வடிவ முன்னேற்றம் சாத்தியப்படவில்லை என்பது தற்போதைய நிலவரம். இதனை அரசு எப்படி கையாண்டது, அதில் ஏற்பட்ட தடைகள், சமாளித்த விதம் என ப்லவேறு விஷயங்களை நூலாசிரியர் பேசுகிறார்.
அவர் இந்து ராஷ்டிரா
ஆகார் படேல்
வெஸ்ட்லேண்ட்
ரூ. 799
இந்துத்துவா கருத்தியல் எப்படி இந்தியாவில் அடிப்படையான விஷயங்களை ஆக்கிரமித்து வருகிறது என்பதை பல்வேறு அடுக்குகளில் விவரிக்கிறார் நூலாசிரியர் ஆகார் படேல். எப்படி பல்வேறு நம்பிக்கையான அரசு அமைப்புகள் வீழ்த்தப்படுகின்றன என்பதையும் செயல்பாட்டாளர் ஆகார் படேல் சிறப்பாக எழுதியுள்ளார்.
டில் வீ வின்
ரந்தீப் குலேரியா
ககன்தீப் காங், சந்திரகாந்த் லகாரியா
பெங்குவின் ராண்டம் ஹவுஸ்
ப. 352 ரூ. 299
இன்னும் எத்தனை நாட்கள் நாம் மாஸ்க் பயன்படுத்தவேண்டும், கொரோனா இறப்புகள் குறைந்துவிட்டனவா என்பது பற்றிய பல்வேறு விடை தெரியாத கேள்விகளுக்கு இந்த நூல் பதில் அளிக்கிறது. பெருந்தொற்று விவகாரத்தில் இந்தியா எப்படி செயல்பட்டு வருகிறது என்பதை அறிந்துகொள்ள படிக்கவேண்டிய நூல் இதுவே.
ஹிமாலயன் சேலஞ்ச்
சுப்பிரமணியன் சுவாமி
ரூபா
இந்தியா சீனா உறவு பற்றிய நூலை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் சுப்பிரமணினன் சுவாமி எழுதியுள்ளார். 1962 தொடங்கி இன்று எல்லை வரையிலான பிரச்னைகள் வரை விரிவாக எழுதப்ப்பட்டுள்ள நூல் இது. நினைவுக்குறிப்பு போன்ற வடிவில் எழுதப்பட்டுள்ள சுவாரசியமான நூல் எனலாம்.
பினான்சியல் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக