விவசாயிகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ளாமல் அறிவுரைகள் சொல்பவர்களே இங்கு அதிகம்! ஹன்னன் மொல்லா
ஹன்னன் மொல்லா, அனைத்திந்தியா விவசாய சங்கம்
விவசாயிகள் மூன்று விவசாய சட்டங்களை மாற்றவேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். இப்போது போராட்டம் எப்படியுள்ளதுழ
விவசாயிகள் கடந்த ஆறுமாதங்களாகவே விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஆனால் அரசு கவனிக்கவில்லை. விவசாயிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் சட்டங்களை நிறைவேற்றிவிட்டனர். ஜனநாயக நாட்டில் அரசு இப்படி செயல்பட்டால் போராடங்களைத் தவிர வேறு என்ன வழி உள்ளது? எனவே தலைநகருக்கு திரண்டு வந்து சட்டங்களுக்கு எதிராக அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அரசு சட்டங்களை மாற்றவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
அரசு உருவாக்கிய மூன்று சட்டங்களை விலக்கிக்கொள்ளவேண்டும். சிறு திருத்தங்கள் செய்வது சட்டங்களின் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்காது.
போராட்டங்களுக்கு உலகளவிலான கவனம் கிடைப்பது அதனை பின்தங்க வைக்கிறதா? குறிப்பாக காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை எழுகிறதே?
யாரும் விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பேசுவது இல்லை. நாங்கள் பேசுவதை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை. ஆனால் ஏராளமான அறிவுரைகளை வழங்க மட்டும் தயாராக இருக்கிறார்கள். தேச பாதுகாப்பு என்பது அரசு எப்போதும் போராடுபவர்களை நோக்கி சொல்லும் வசைதான். இதனை ரெடிமேடாக வைத்திருக்கிறார்கள். சுதந்திரதிற்கு பிறகு மாநிலங்களின் எல்லைகளை எந்த அரசாவது மூடிவிட்டது என கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆனால் இங்கு நடக்கிறது.அமைதிவழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை எறிகிறார்கள். நீரைப் பாய்ச்சுகிறார்கள். குளிரில் நடுங்கிக்கொண்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இத்தனை ஆண்டுகளில் எந்த விவசாய அமைச்சரை எளிதாக சந்திக்க முடிந்திருக்கிறது?
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார். அவர் விவசாயிகள் மீது மனிதாபிமானம் கொண்டவர். அவர் அமைச்சராக இருந்தபோது, சட்டங்களில் சில மாற்றங்களை செய்தனர். ஆனால் நாங்கள் விவசாய கொள்கையில் மாற்றங்களை செய்ய கோரி வருகிறோம்.
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவில் விவசாயிகளுக்கான சிறந்த காலகட்டம் எது?
விவசாயிகள் தினசரி 18 மணிநேரம் உழைக்கிறார்கள். அவர்களின் முழு குடும்பமே நிலத்தில் உழைத்தாலும் கூட அவர்களுக்கு சரியான பொருளாதார வாய்ப்புகள் கிடைப்பதில்லை,. சுதந்திரத்திற்கு பிறகு விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை என்றே சொல்லுவேன். அரசு விவசாயிகளுக்கு உதவ முடியும். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை ஏற்று பிரச்னைகளை காதுகொடுத்து கேட்கவும் தயாராக இல்லை.
மனோஜ் சி ஜி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக