சுவேந்து அதிகாரியால் பாஜக வெல்ல முடியாது! சௌகதா ரே, திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்
சௌகதா ரே
திரிணாமூல் காங்கிரஸ்
சுவேந்து அதிகாரி வரும் தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா?
இல்லை. அவர் நந்திகிராமில் இருந்து எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். அங்கு 40 சதவீதம் முஸ்லீம்கள் உண்டு. போனதடவை பெற்ற வாக்குகளை அவர் இம்முறை கட்சி மாறியதால் இழக்கவே வாய்ப்புண்டு.
அவருக்கு இது தெரியாதா?
தெரிந்திருக்கலாம். அவர் மேல் நிறைய குற்றவழக்குகள் உண்டு. அதனால்தான் அவர் அமித்ஷாவில் வலையில் விழுந்துவிட்டார்.
உங்கள் கட்சி உறுப்பினர்களை பாஜக இழுப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பாஜக பல்வேறு சலுகைகளைக் காட்டி எங்கள் கட்சி ஆட்களை இழுப்பது உண்மைதான் அதில் சுவேந்து முக்கியமானவர். அவர் ஒரு தலைவராக இங்கு இருந்தார். மற்றவர்கள் அவ்வளவு முக்கியமானவர்கள் அல்ல. எங்கள் கட்சி ஆட்களுக்கு நிறைய அச்சுறுத்தல்கள் பாஜக கொடுத்துவருகிறது. அதனை நேரடியாக எதிர்கொண்டு கட்சியிலேயே இருக்க நிறைய பேரால் முடியவில்லை.
ஐந்து எம்எல்ஏக்கள் ஒரு எம்பி என பாஜ பக்கம் போய்விட்டார்கள். இது உங்களுக்கு பெரிய இழப்பு இல்லையா?
இவர்கள் யாரும் இத்தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் எங்களுக்கு அதுபற்றி கவலையில்லை. இவர்களை தங்கள் கட்சிக்கு இழுத்துக்கொண்ட பாஜக வெற்றிக்கூத்தாடுவது எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை.
எதற்காக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்?
பாஜகவில் அண்மையில் இணைந்த முகுல்ராய் கட்சியை உடைப்பதற்கான தரகு வேலையைப் பார்க்கிறார். அதற்காவே கட்சி உறுப்பினர்களை பாஜகவிற்கு எந்த விலை கொடுத்தாவது இழுக்க முயல்கிறார்கள். இப்போது சுவேந்து தரகராக மாறிவிட்டார்.
பிரசாந்த் கிஷோரின் காரணமாகத்தான் பலரும் கட்சியை விட்டு செல்வதாக கூறுகிறார்களே?
பிரசாந்த் கட்சியில் எந்த பதவியையும் வகிக்கவில்லை. அவர் வேறு பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சுவேந்து, தன்னை முதல்வர் அல்லது துணை முதல்வராக நினைத்து நடந்துவந்தார்.
அவர் முதல்வருக்கு தகுதியில்லாதவர் என்று நினைக்கிறீர்களா?
முதல்வராக இருக்கவேண்டும் என்பது அவரது நம்பிக்கை. பாஜக ஆர்எஸ்எஸ் ஆட்களை தவிர்த்து வேறு யாரையும் முதல்வராக நியமிப்பது இல்லை. அப்படியில்லாத நிலையில் கூட்டணி அரசுகளை அமைத்து வருகிறது. சுவேந்து இளமையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்தவர். அதில் தீவிரமாக களமிற்ங்கி செயல்பட்டவர் அல்ல.
அப்படியெனில் அவர் வெளியேறக்காரணம் என்ன?
கட்சியில் அபிஷேக்கை தனக்கு போட்டியாக சுவேந்து கருதியிருக்கலாம். எனவே, வேறு கட்சிக்கு மாறி சென்றுவிட்டார். அபிஷேக் தன்னை முதல்வர் வேட்பாளராக எங்குமே கூறவில்லை. அவரின் இருப்பது தனக்கு ஆபத்து என சுவேந்து நினைக்க வாய்ப்புண்டு.
மத்திய அரசும் மாநில அரசும் நிறைய விவகாரங்களில் மோதிக்கொள்கின்றனவே, இது அரசியலைப்பு சீர்குலைவு என நினைக்கிறீர்களா?
மாநில அரசு தன்னுடைய உரிமைகளைக் காப்பாற்ற போரிடுகிறது. இதில் தவறென்ன இருக்கிறது? அரசியலமைப்பு உரிமைகள் சார்ந்து மத்திய, மாநில அரசுகள் மோதிக்கொண்டு வருவது உண்மை. இதைக் காரணமாக வைத்து குடியரசுத்தலைவர் ஆட்சி கொண்டுவருவது என்று கூறுவது தவறானது.
ரபி பானர்ஜி
தி வீக்
கருத்துகள்
கருத்துரையிடுக