மிச்சமிருக்கும் 24 மணிநேரத்தில் எதிரியை அழித்து, கடத்தப்பட்ட சிறுவனை மீட்க முடியுமா? 24 ஹவர்ஸ் லைவ்
24 ஹவர்ஸ் லைவ்
கூலிக்கு கொலை செய்யும் ஆள், ஈதன் ஹாக். மெல்ல தொழிலை விட்டு அமைதியாக வாழ்ந்து வருபவருக்கு இன்டர்போல் ஆட்களிடம் உள்ள ஒருவரைக் கொல்ல உத்தரவு வருகிறது. தினசரி பத்து லட்சம் ரூபாய் என பேரம் பேசுகிறார்கள். இதனால் சபலப்பட்டு ஒத்துக்கொள்ளும் ஈதன் இந்த முயற்சியில் சொதப்பல் செய்ய அ்வரின் உயிர் ஆபத்தான நிலையில் மாட்டிக்கொள்கிறது. எப்படி அந்த ஆபத்துகளை சமாளித்து வெளியே வருகிறார். அதற்கு காரணமானவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்று ரத்தம் தெறிக்க துப்பாக்கி முழங்க சொல்லியிருக்கிறார்கள்.
ட்ராபிஸ் என்ற பெயர்தான் ஈதனுக்கு சூட்டியிருக்கிறார்கள். அவரைத் தேடி வரும் ரகசிய படுகொலை அமைப்பின் ஆட்களை பாத்ரூமில் வைத்து காட்டு காட்டு என காட்டிவிட்டு வெளியே வரும்போது எதிரே மது அருந்துவதே வேறு யாருமல்ல உயிர்த்தோழன்தான். அவன் கொடுக்கும் வேலையை காசுக்காக ஏற்கிறார் ட்ராபிஸ். இதில் சொதப்பலானால் என்னாகும் என்பதை அவன் நண்பன் சொல்லுவதில்லை. படுகொலை அமைப்பின் முன்னாள் பணியாளரான டிராபிஸ் வேலை காரணமாகவே தனது மனைவி குழந்தையை பறிகொடுக்கிறார். இதனால் அடிக்கடி அவரது மகன் அழைப்பது போல தோன்றும் மாயக்காட்சி, ஹல்லுசினேஷனுக்கு உட்படுகிறார். இதனால் கொல்ல வேண்டும் என்று கூறும் பெண்ணோடு செக்ஸ் வைத்துக்கொள்கிறாரே தவிர கொல்லும் முடிவுக்கு வரமுடியவில்லை. காரணம் அ்வளுக்கு கிறிஸ்டோபர் என்ற ஒற்றை மகனுண்டு.
இதனால் ட்ராபிஸின் உயிருக்கு நேரும் ஆபத்து, அவனை 24 நான்கு மணி நேரம் மட்டுமே உயிருடன் வைத்திருக்கும் மருத்துவநிலைக்கு கொண்டு செல்கிறது. இதற்குள் தன்னை சுட்ட பெண்ணை பழிவாங்கினாரா, படுகொலை அமைப்பு செய்த துரோகத்திற்கு தனது ஆத்ம நண்பனே காரணம் என்பதை உணர்ந்தாரா என்பதை ரத்தம் தெறிக்க தெறிக்க குருதி ஆட்டம் ஆடி சொல்லியிருக்கிறார்கள்.
ரேட்டிங்கை கைவிட்டு ஈதன் ஹாக்கின் நடிப்புக்காக பார்க்கவேண்டிய படம்.
குருதி ஆட்டம்!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக