2020 ஆம் ஆண்டின் சிறந்த கட்டுரை நூல்கள்! டைம் இதழில் பரிந்துரைக்கப்பட்ட நூல்கள்!
2020 ஆம் ஆண்டின் முக்கியமான கட்டுரை நூல்கள்
கேஸ்ட்
இசபெல் வில்கெர்ஸன்
அமெரிக்காவிலுள்ள மதம்,சாதி, இனவெறி பற்றிய நூல். கருப்பின மக்களை எப்படி இன்றுவரை அவமரியாதை செய்கிறார்கள் என்பதை சொல்லும் நூல் இது. சாதி சார்ந்த சமூகப்பிரச்னை ஜெர்மனி, நாஜி ஜெர்மனியிலும் உண்டு.
மைனர் ஃபீலிங்க்ஸ்
கேத்தி பார்க் ஹாங்
ஆசிய அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை நூல் ஆசிரியர் எழுதியுள்ளார். அவர்களுக்கான குரலாக ஆசிரியர் பேசியுள்ளார்.
தி டிராகன்ஸ்
தி ஜெயன்ட் தி வுமன்
வேய்டு மூர்
லைபீரியாவில் இருந்து வெளியேறிய மூரின் குடும்பம் எப்படி பயணித்து அமெரிக்கா்வுக்கு வந்து குடியேறுகிறார்கள் என்பதை பேசுகிற நூல் இது. போர் அதன் காரணமாக நடைபெறும் பிரச்னைகள் என நூல் அகதிகளின் வாழ்க்கையை துயரமும் தவிப்புமாக விவரிக்கிறது.
மெமோரியல் டிரைவ்
நடாஷா டிரீத்வே
எழுத்தாளர் நடாஷாவுக்கு பத்தொன்பது வயதாகும்போது அவரின் வளர்ப்பு தந்தை அவரது அம்மாவை படுகொலை செய்தார். இந்த நிகழ்ச்சியோடு நடாஷாவின் குடும்ப வரலாறு பற்றிய பல்வேறு சம்பவங்களை நூல் பேசுகிறது.
வெஸ்பர் ஃபிளைட்ஸ்
ஹெலன் மெக்டொனால்ட்
இயற்கை உலகைப் பற்றிய பல்வேறு விஷயங்களை சிறு கட்டுரைகளாக ஆசிரியர் எழுதியுள்ளார்.
தி அன்டாகுமெண்டெட் அமெரிக்கன்ஸ்
கர்லா கார்னெஜோ
விலாவிசென்சியோ
குடியேற்ற அனுமதியில்லாத பல்வேறு நாட்டு மக்கள் பற்றிய கட்டுரைகள் இவை. பலவும் ஊடகங்களில் வெளியாகாத விஷயங்கள் என்பதால் கவனம் பெறுகி்ன்றன.
ஹேவிங் அண்ட் பீயிங் ஹேட்
இயுலா பிஸ்
நாம் வாழ்க்கையில் பொருளுக்கு கொடுக்கும் மதிப்பு, மனிதர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி இந்த நூல் பேசுகிறது. இதன் வழியாக முதலாளித்துவம் நம் வாழ்வில் ஏற்படுத்தி விளைவுகளை விவரிக்கிறது.
ஹிட்லர்
டவுன்ஃபால்
வோல்கர் உல்ரிச்
உல்ரிச் எழுதியுள்ள ஹிட்லரின் இரண்டாவது வாழ்க்கை வரலாற்றுப் பகுதி. இதில் ஹிட்லர் எப்படி வீழ்ச்சிக்கு உள்ளாகிறார் என்பதை ஆசிரியர் விவரிக்கிறார். ஜெர்மனியின் ஆட்சியாளர் ஹிட்லர் எந்த அம்சங்கள் மூலம் வளர்ச்சி பெற்றாரோ அதே அம்சங்களின் மூலம் கீழே வீழ்கிறார். அவை என்னவென்பதை அறிந்துகொள்வது தலைமைத்துவத்திற்கு உதவக்கூடியது.
ஜஸ்ட் அஸ்
கிளாடியா ரான்கைன்
கருப்பின மக்கள் பள்ளி முதல் கல்லூரி வரை எப்படி ஒ.டுக்குமுறைக்கும் அவமானத்திற்கும் உள்ளாகிறார்கள் என்பதை ஆதாரத்துடன் நிறுவும் நூல் இது.
time
கருத்துகள்
கருத்துரையிடுக