இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்

மசூதியை மாற்றிய மழைநீர் சேகரிப்பு!

படம்
தண்ணீர் பஞ்சம் என்பது இப்போதைக்கு தமிழ்நாட்டிற்கு இல்லை. ஆனாலும் கூட நீராதாரங்களை காப்பாற்றி வைப்பது எதிர்காலத்திற்கான முக்கியமான தேவை. அப்படியில்லாதபோது மழைப்பொழிவு குறைந்தகாலத்தில் பஞ்ச பருவத்தில் படாதபாடு படும் நிலை ஏற்படும். கோவையில் உள்ள முஸ்லீம்கள் அதனை உணர்ந்து நீரை சேகரிக்க தொடங்கியுள்ளனர். கோவையில் உள்ள 135க்கும் மேற்பட்ட மசூதிகள் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளன. இப்போது அங்கு உருவாக்கப்பட்டுள்ளன ஆழ்துளை கிணறுகளில் நீர் வரத்து கூடியுள்ளது. தொழுகைக்கு முன்னர் முஸ்லீம்கள் தங்கள் முகம், கை, கால்களை கழுவிக்கொள்வது வழக்கம். இதனை வுசு என்கின்றனர். இதற்காக செலவிடும் நீரையும் நிலத்திற்கு திருப்பிவிட்டிருக்கின்றனர். கூடவே மழைநீர் சேகரிப்பையும் செய்து வருகிறார்கள். இப்படி செய்வதற்கு காரணமான சம்பவம், 2016-17இல் நடைபெற்றது. அப்போது மசூதிகளில் இருந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டுபோய்விட்டன. நீருக்காக லாரி டேங்கர்களை நாடினர். இதற்கு தினசரி 8 ஆயிரம் ரூபாய் செலவானது. பிறகுதான் வுசு ஐடியா அத்தர் ஜமாத் தலைவர் ஷா நாவாஸூக்கு வந்திருக்கிறது. சிறுதுளி தன்னார்வ தொண்ட

தாரகை - சிறையில் தள்ளியவர்களை பழிவாங்கும் இளம்பெண்ணின் துணிச்சல்- ரா.கி.ரங்கராஜன் நாவல்

படம்
தாரகை ரா.கி.ரங்கராஜன் அல்லயன்ஸ் 624 பக்கம் இந்த முறை ஆசிரியர் முழுக்க வெளிநாட்டில் கதையை நடத்திச் செல்கிறார். கதையின் நாயகி, ட்ரேசி. வங்கியில் வேலை செய்து வருகிறாள் ட்ரேசி. அவளது வாழ்க்கையில் அம்மா துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்துகொள்கிறாள். அந்த சம்பவம் நடந்தபிறகுதான் ட்ரேசியின் வாழ்க்கை மாறுகிறது. அவளது பணக்கார காதலன், மெல்ல விலகிப்போகிறான். வேலையை விட்டு நீக்கப்படுகிறாள்.ரொமானோ என்ற குற்றவாளிதான் அவளது அம்மாவின் தற்கொலைக்கு காரணம். அதற்கு பழிவாங்கும் முயற்சியில், மேலும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறாள். அதிலிருந்து விலகி வரும்போது வாழ்க்கை வெகுதூரம் தள்ளிப்போயிருக்கிறது. தனது வாழ்க்கையை, அவள் எப்படி மீட்கிறாள் என்பதுதான் கதை. மொத்தகதையும், பரபர வேகத்தில் செல்கிறது. ட்ரேசியின் வாழ்க்கையில் துயரமான சூழலில் தனக்கு உதவும் மனிதர்கள் யார், ஆறுதல் சொல்பவர்கள் யார் என தெரிந்துகொள்கிறாள். அப்படித்தான் அவளது வாழ்க்கையில் சிறுமி ஆமி, மார்சன், கந்தர், ஜெஃப் ஆகியோர் வருகின்றனர். சிறையில் நடக்கும் சம்பவங்களை வாசிக்கும் ஒருவரால் எளிதாக கடப்பது கடினம். வல்லுறவு செய்யப்பட்ட

மேட் இன் இந்தியா ட்ரோன்ஸ்! - தன்மய் பங்கர்

படம்
2019ஆம் ஆண்டு நடைபெற்ற விமானப்படையின் போட்டியில் கூட தோல்விதான். ஆனாலும் ட்ரோன்களை தயாரிப்பதை கைவிடவில்லை. இவரது ஆர்வத்தைப் பார்த்து, ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை 50 லட்ச ரூபாயை ஆராய்ச்சிக்காக வழங்கியுள்ளது. இந்திய அரசு, மேட் இன் இந்தியா பொருட்களை தேவை என்று கூவினாலும் பெரியளவு பொருட்கள் அனைத்து துறைகளிலும் உருவாகவில்லை. அதற்கு தேவையான ஊக்கமும் பணமும் கிடைக்கவில்லை என்பதே காரணம். இதன் காரணமாக டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இந்தியா, அமெரிக்காவிடமிருந்து அதிக செலவில் வாங்கி வந்தது. இதை எப்படி தயாரிக்கிறார்கள் என தன்மய் ஆராய்ந்தார். பொட்டாசியம் நைட்ரேட்டை பயன்படுத்துவது தெரிய வந்தது. இது அதிக செலவு பிடிக்கும் ஏவுகணைத்திட்டம் என்பதை அறிந்து அதனை கைவிட்டார். பிறகுதான் ட்ரோன்களை தயாரிக்கும் திட்டத்தை உருவாக்கினார். பாகிஸ்தான் அண்மையில் ஜம்முவில் ட்ரோன் தாக்குதலை நடத்தியது பலருக்கும் நினைவிருக்கலாம். துருக்கியும் கூட இப்போது பெருமளவு தனது ஆயுதங்களை விட ட்ரோன்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கத் தொடங்கியுள்ளது. 2014இல் தொடங்கிய ஆராய்ச்சி 2016இல் பாட் டைனமிக்ஸ் என்ற நிறுவன

காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை - கன்னையா குமார், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்

படம்
இடதுசாரி அமைப்புகள் இவருக்கு ஆதரவாக இருந்தபோதிலும் கூட அதிகாரத்திற்கு வர காங்கிரஸ்தான் சரியான கட்சி என அதில் சேர்ந்துவிட்டார். இப்போது பீகாரில் செயல்பட்டு வருகிறார். நேரு பல்கலைக்கழக காலத்திலிருந்து ஜனநாயகத்தை காக்கும் புரட்சி குரலாக ஒலித்து வந்தார். நாடு முழுவதும் இவரது புகைப்படங்கள சென்றன. பிறகு தேர்தலில் நின்றார். பாஜகவின் கிரிராஜ் சிங் என்பவரிடம் தோற்றுப்போனார். ஆனால் இப்போது நாம் கன்னையாவைப் பற்றித்தானே பேசுகிறோம். கிரிராஜைப் பற்றி அல்ல. அதுதான் கன்னையாவின் செல்வாக்கு. இவரின் பேச்சுகளை சமாளிக்க முடியாத பாஜக, உதைப்பதற்குள் ஓடிவிடு என மிரட்டியும் பார்த்தது. அப்போதும் பணியாத ஆள் என்பதால், தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மூன்றாவது நினைவுநாளில் தேசவிரோத ஸ்லோகன்களை சொன்னதாக உபா சட்டத்தைப் பயன்படுத்தியது. 2016ஆம் ஆண்டு பிப்ரவரி இந்த சம்பவம் நடைபெற்றது. 2019இல் தேர்தலில் நின்று தோற்றுப்போனவரை காங்கிரஸ் கட்சி அரவணைத்து ஏற்றுக்கொண்டது. இந்த சம்பவம் நடந்தது செப்டம்பர் மாதம் 28. சவால்கள் இதோடு நின்றுவிடவில்லை. பீகாரில் புகழ்பெற்ற பெரிய கட்சி ஆர்ஜேடி. பெயரைப் பார்த்தால் ஏதோ ரியல் எஸ

சூழல் சார்ந்த கவனம் கொள்ளும் இளைய தலைமுறை - ஆதித்ய தாக்கரே- மகாராஷ்டிரம்

படம்
தாக்கரே குடும்பத்தில் அடுத்த அரசியல் வாரிசு, ஆதித்ய தாக்கரே. தேர்தலில் வென்றுவிட்டு சுற்றுச்சூழல் அமைச்சராகியிருக்கிறார். குடும்ப அரசியல் என்றாலும் கூட சூழல் குறித்த அக்கறை கொண்டவராக இருக்கிறார். அதுவே இவரைப் பற்றி நாம் இங்கே எழுதுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்த டிசம்பர் 13 முதல் சூழல் சார்ந்த பாடத்தை பள்ளிக்கல்வியில் கொண்டு வர முயற்சிசெய்து வென்றிருக்கிறார். மஜிதி வசுந்தரா என்பது இதன் பெயர். பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக இருந்தபோது, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்யவேண்டும் என கோரிக்கை எழுப்பியவர் ஆதித்யா. பின்னர், அப்பா முதல்வர் ஆன பிறகு சூழல் அமைச்சகத்தின் தலைவராக ஆனார். பிறகுதான் தனது ஆட்டத்தைத் தொடங்கினார். மின் வாகனங்களை மும்பை சாலைகளில் ஓட்டுவதை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டவர். கவிதை நூல் ஒன்றை பதிப்பித்துள்ளார். தனியாக ஆல்பம் ஒன்றை தயாரித்தவர், அதில் எட்டு பாடல்களையும் தானே எழுதியுள்ளார். சுற்றுலாவை அதிகரிக்கவும் ஏராளமான திட்டங்களை மனதில் வைத்திருக்கிறார். ஹோட்டலை தொடங்க இதற்கு முன்னர் 70 முதல் 100

புத்தக வாசிப்பு வட்டமா? அப்ஸ்காண்ட் ஆயிருங்க ப்ரோ!- மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! நமக்கான பிரச்னைகள் நாம் செய்யும் செயலால் உருவாகிறது என்று சொல்லுவார்கள். எனக்கும் அப்படித்தான் நடக்கிறது. என்ன அதன் டிசைன்தான் கொஞ்சம் வேறுவடிவில் இருக்கிறது. சில பல ஆண்டுகளுக்கு முன்னரே புத்தக வாசிப்பு, விமர்சன கூட்டங்களுக்கு போவது வேண்டாம் என்ற முடிவெடுத்தேன். அதற்கு காரணம், அரைகுறையாக படித்துவிட்டு அந்த கூட்டத்திற்கு வருபவர்களும், எழுத்தாளரை கேள்வி கேட்டால்போதும் அவரை மடக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட சினிமாவில் இயங்கும் உதவி இயக்குநர்களும்தான். இப்படி இலக்கிய அக்கறையைக் காட்டிக்கொண்டாலும் இவர்கள் படம் எடுக்கும்போது கதை என்ற தலைப்பில் தனது பெயரை மட்டுமே போட்டுக்கொள்வார்கள் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை. எங்கேயோ சிக்கிக்கொண்ட கதையைத்தானே சொல்ல வருகிறாய் என இந்நேரம் யோசித்திருப்பீர்கள். அதேதான். மோசமான டைமிங்கில் மாட்டிக்கொண்ட சம்பவம். எனது மடிக்கணினி அடிக்கடி பிடிவாதம் பிடித்த குழந்தையாக வேலை செய்யமாட்டேன் என அடம்பிடித்துக்கொண்டிருந்தது. எனவே இதனை வாங்கிக்கொடுத்த டெக் நண்பரிடம் உதவி கேட்டேன். அவரைப் பொறுத்தவரை இதெல்லாம் ஒரு விஷயமா என்ற ரீதியில் எனது

ஆக்டோபஸை எதிர்க்கும் சூசைட் ஸ்குவாட்! - ரத்தம் தெறிக்கும் அவல நகைச்சுவைப் படம்!

படம்
சூசைட் ஸ்குவாட் 2021 இயக்குநர் ஜேம்ஸ் குன் முதல் படத்தில் வில் ஸ்மித் நடித்திருப்பார். இந்த படத்தில் இட்ரிஸ் எல்பா அந்த கேரக்டரை எடுத்துக்கொண்டு அட்டகாசப்படுத்தியிருக்கிறார். படத்தில் நினைத்து நெகிழ எந்த காட்சிகளும் கிடையாது. அனைத்து காட்சிகளுமே கொண்டாடியபடி பார்க்கவேண்டியதுதான். சூசைட் ஸ்குவாட்டிற்கு இம்முறை ஒரு நாட்டுக்கு சென்று அங்கு நடைபெறும் ஸ்டார்ஃபிஷ் என்ற திட்டத்தை அழிக்க வேண்டிய திட்டம் வழங்கப்படுகிறது. எப்போதும் போல தேசியவாத தலைவர், கைதிகளை மிரட்டி இந்த திட்டத்தில் இணையச்செய்கிறார். பிளட்ஸ்போர்ட், பீஸ்மேக்கர், டாட் மனிதன், கிங் ஷார்க், ராட் கேட்சர் 2 என்ற பெண் என வினோதமான பழக்கம், திறன்களைக் கொண்டவர்கள் இணைகிறார்கள். இவர்கள் எல்லோரும் கார்ட் மால்டிஷ் என்ற தீவுக்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு முன்னர் சென்றவர்கள் அனைவரும் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இதற்கு ஸ்குவாட்டில் உள்ள துரோகியே முக்கியமான காரணம். அதில் பிழைக்கும் கேப்டன் பிளேக் என்பவரும் பிளட் ஸ்போர்டும் இணைந்து மால்ட்டிஷ் தீவுக்கு போய் திங்கர் என்ற ஆய்வாளரை மிரட்டி எப்படி ஸ்டார்ஃபிஷ் திட்டத்தை அழிக்கிறார்கள்

2021 முக்கியமான டேட்டாக்கள்!

படம்
டோக்கியோ ஒலிம்பிக்ஸிலும் பாராலிம்பிக்ஸிலும் இந்தியா வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 7 முதல் 19 ஆகும். இதுதான் இந்தியாவில் ஆல்டைம் அதிக எண்ணிக்கை கூட. இந்த ஆண்டில் இந்திய நிறுவனங்கள் பங்கு வெளியீடு மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை திரட்டியுள்ளன. பத்தாண்டுகளில் இதுவே அதிக அளவு ஆகும். இலங்கை பாடகியான யோகானி தனது மணிகே மகே பாடலுக்கு 3 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளார். இலங்கை பாடகருக்கு இதுவே அதிகபட்ச பார்வையாகும். கடந்த செப் - ஜூலையில் 50 சதவீத எஸ்யூவி வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதற்குப்பிறகுதான் செடான், ஹாட்ச்பேக் கார்கள் எல்லாம். தலைவன் எஸ்யூவிதான். பயணிகள் அதிகம் பயணிப்பதற்கான வாகனத்தின் மீது மக்களுக்கு ஆர்வம் கூடியுள்ளது. ஸ்டேன்சாமி. கிறிஸ்தவர் என்பதால் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளாகி சிறையில் குற்றுயிராக ஆக்கப்பட்டவர். 84 வயதில் அவரை ஒன்றிய அரசு சிறைவைத்து சித்திரவதை செய்து கொன்றது. இந்த வயதில் தீவிரவாத குற்றச்சாட்டுக்கு ஆளான வேதனையான பெருமை ஸ்டேன்சாமிக்கே சொந்தம். இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு என்ற பெருமையை இடதுசாரி அரசு கேரளத்தில் பெற்றுள்ளது. அங்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற முதல்முறை விஷயங்கள்!

படம்
அமிதாப் பையா நம்பர் 1 இந்தி சினிமா நடிகரான அமிதாப் பச்சன், இந்தியாவில் தனது திரைப்படங்கள் தொடர்பான என்எஃப்டி டோக்கன் விற்பனையைத் தொடங்கினார். இவரைப் பின்பற்றி இன்னும் நிறைய நட்சத்திரங்கள் இந்த தொழிலில் இறங்கினர். எல்லாமே வியாபாரம்தான் ப்ரோ? வாட்ஸ்அப் தனது புதிய பிரைவசி கொள்கைகள் அறிமுகப்படுத்தியது. தனது தகவல்களை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்துகொள்ள பயனர்கள் ஒத்துழைக்குமாறு அக்ரி, டிஸ் அக்ரி நிபந்தனைகள் இருந்தன. இதன் காரணமாக பலரும் பயந்துபோய் டெலிகிராம்,சிக்னல் என மாறிவிட்டு பிறகு மீண்டும் வாட்ஸ்அப்புக்கே வந்தனர். ஏன் இப்படி? வாட்ஸ் அப் அளவுக்கு மேற்சொன்ன ஆப்கள் சமர்த்து கிடையாது. நீதிமன்றத்தில் வாட்ஸ்அப்பும் நாங்கள் யாரையும் புதிய கொள்கைக்கு கட்டாயப்படுத்தவில்லை என சம்பிரதாயமாக பேசி பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது. ட்ரோன் தாக்குதல் ஜம்முவில் இரண்டு விமானப்படை தளங்களில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன்கள் மூலமாக தாக்குதலை நடத்தியது. இந்த வகையில் தாக்குதல் நடப்பது இதுவே முதல்முறை. முதல் மாற்றுப்பாலின மருத்துவர் மருத்துவர் அக்சா ஷேக் என்பவர் முதல் மாற்றுப்பா

2021 ஆம் ஆண்டு முதன்முறையாக நடந்த விஷயங்களின் அணிவகுப்பு!

படம்
முதல் பெண் சாதனையாளர் ஃபால்குனி நாயர் நைகா என்ற கம்பெனியை அறிந்திருப்பீர்கள். அதனுடைய உடைகளுக்காக அல்ல. கத்ரீனா கைப் அதில் நிறைய முதலீடு செய்திருக்கிறார் என தந்தி முதல் தினகரன் வரை எழுதினார்கள். அந்த நிறுவனத்தின் இயக்குநர் பெண்தான். இது இந்தியாவில் ஆச்சரியமான செய்தி. ஃபால்குனி நாயர். தன்னைத்தானே செதுக்கி இன்று ஏராளமான முதலீடுகளைப் பெற்று கோடீஸ்வரி ஆகிவிட்டார். மென்சா பிராண்ட்ஸ் இந்த நிறுவனத்தை மிந்த்ராவில் வேலை செய்த முன்னாள் இயக்குநர் ஆனந்த் நாராயண் தொடங்கி சிறப்பாக வளர்த்தெடுத்திருக்கிறார். ஸ்டார்ட்அப்பாக தொடங்கி ஆறு மாத த்தில் யுனிகார்ன் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. தன்பாலின நீதிபதி சௌரப் கிர்பால் ஒரினச்சேர்க்கையாளர். அடுத்து அவர் படித்த படிப்பிற்கு நீதிபதியாக பதவிக்கு வரவிருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வேலை கொடுக்கவிருக்கிறார்கள். இந்த பதவி நியமனம் நடந்தால் மாற்றுப்பாலினத்தவர்களின் வரலாற்றில் முக்கியமான வெற்றி என்று சொல்லலாம். முதல் மாசுபாட்டு கட்டுப்பாட்டு கருவி டெல்லியில் கன்னாட்பிளேசில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஸ்மோக் டவர் உருவாக்கப்பட்டது.

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு

படம்
  ரொமான்டிக் ரொமான்டிக்  தெலுங்கு  இயக்குநர் அனில் பதூரி கதை, திரைக்கதை, தயாரிப்பு, வசனம் - ஆல் இன் ஆல் அனைத்துமே பூரி ஜெகன்னாத்.  கோவாவில் உள்ள போதைப்பொருள் கும்பலின் தலைவன் வாஸ்கோவுக்கும், இன்ஸ்பெக்டர் ஒருவரின் தங்கை மோனிகாவுக்குமான காதல், இன்ன பிற பிரச்னைகளும்தான் கதை.  படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தவுடனே பலரும் கேத்திகா சர்மா மீது மையல் கொண்டு படத்தை எப்போது புக் செய்யலாம் என ஸ்மார்ட்போனில் ஐநாக்ஸ் ஆப்பை தேடுவார்கள். ஆனால் அவசரப்படாதீர்கள்.  ரொமான்டிக் - ஆகாஷ் பூரி, கேத்திகா சர்மா ரோமியோ ஜூலியட் ரகத்தில்தான் முடிகிறது,. ட்ரெய்லரில் உள்ள காட்சிகள் மட்டுமே முழுமையாக படத்தில் தேறுகிற சில காட்சிகள். எனவே பணத்தை வீணடிக்காதீர்கள்.  படத்தைப் பார்க்க வைக்கத் தூண்டுவது ஒரே ஒருவர்தான் அது கேத்திகா சர்மாதான். அவரது அழகான உடலும் அதனை மேயும் கேமரா கோணங்களும்தான் படத்தை அழகாக்குகிறது. படத்தில் வேறு ஒன்றும் இல்லை.  கோவாவில் இரண்டு போதைக் கடத்தல் கும்பல்கள், அதில் ஒன்றில் வாஸ்கோ சேருகிறார்.வேலை மோசம் என்றாலும் லட்சியம் பெரிது. குடிசையில் வாழும் தனது மக்களை வீடுகட்டி வாழ வைப்பதுதான் நோக்கம். அதற்காகவ

இந்தியாவில் அதிகம் அறியப்பட்ட முகங்கள்! - 2021 முகங்கள் புதிது

படம்
  கங்கனா  ரணாவத் மணிகர்ணிகா படத்தில் பொம்மைக் குதிரையில் அபிநயம் பிடித்து தேசப்பற்றில் பொங்கினார். ஆனால் ஷூட்டிங் முடிந்தும் கூட அம்மணியிடம் வைப்ரேஷன் குறையவில்லை. இந்தியாவுக்கு சுதந்திரம் 2014இல் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகுதான் கிடைத்தது, அமைதி வழியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகளை தீவிரவாதிகள் என்று சொன்னது, விவசாயிகளை ஆதரித்த அமெரிக்க பாப் பாடகியை முட்டாள் என்று சொன்னது என ஏதாவது உளறி வைத்துக்கொண்டே இருந்தார். இதனால் அவர் பத்ம விருது வாங்கிய செய்தி கூட காணாமல் போனது. தமிழில் தலைவி படத்தில் ஜெயலலிதாவாக அரிதாரம் பூசி நடித்தார். ஆனால் படத்தில் அவருக்கு எதுவுமே சிங்க் ஆகவில்லை என்பதால்,  படம் அப்பளமாய் நொறுங்கியது. நடிப்பை விட வாய்ப்பேச்சால் சமூக வலைத்தளங்களில் வலிமையாக இருந்தார் கங்கனா.  நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றார். அப்புறம் அவர் வேறு ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. ஏராளமான பரிசுகள் அவருக்கு வழங்கப்பட்டன. நூறு ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வாங்க காத்திருந்தோம் என ஊடகங்கள் உணர்ச்சி கொந்தளிப்பில் பொங்கின. இந்த நேரத்தில் பாஜக ஐடி ஆட்

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் புழங்கிய வார்த்தைகள் ஒரு பார்வை!

படம்
  2021 ஆம் ஆண்டு திகைப்பு, அதிர்ச்சி, பயம், தைரியம், நம்பிக்கை, நிம்ம்மி என ஏராளமான உணர்ச்சிகளை அடைந்திருப்போம். அதனை இப்போது திரும்பி பார்க்கும் நேரம். அதில் நாம் அதிகம் பயன்படுத்திய சில வார்த்தைகளை இப்போது பார்க்கலாம்.  கேலா ஹோப் மேற்கு வங்கத்தின் அக்கா அதாவது தீதி சொன்ன ஸ்லோகன் இது. சொன்ன மாதிரியே அடித்து விளையாடினார். ஆனால் அவரை தேர்தலில் தோற்றதாக சொல்லி உளவியல் ரீதியான பாதிப்பை பாஜக ஏற்படுத்த முயன்றது. ஆனால் மீண்டும் நடந்த தேர்தலில் தீதி மாஸ் காட்டி வென்று தாமரையை பொசுக்கினார். பாஜகவிற்கு எதிரான போராட்டமாக இப்போது கட்சியை பல்வேறு மாநிலங்களிலும் விரிவாக்கி வருகிறார். காங்கிரஸூக்கு மாற்றாக திரிணாமூல் காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் பரவுகிறது. கோவாவில் பாஜகவிற்கு எதிராக இதே ஸ்லோகன் சற்று மாற்றம் பெற்று கேல் ஸட்லோ என்று மாற்றம் பெற்றிருக்கிறது.  டூல்கிட் விவசாயிகளின் போராட்டம், இயற்கையைக் காக்கும் போராட்டம், அதற்கான செயல்முறை, எப்படி போராடுவது என்ற திட்டங்களைத்தான் டூல் கிட் என்று சொல்லுவார்கள். இதனை தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற வகையில் பாஜக பார்த்தது. இப்படி தான் செய்வதை எதிர்த்த ப

வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி!

  வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி ! விண்வெளியிலுள்ள வேற்றுகிரகவாசிகளைக் கண்டறியும் ஆராய்ச்சி நவீனமடைந்து வருகிறது . 1960 ஆம் ஆண்டு ரேடியோ வானியலாளர் ஃபிராங்க் டிரேக் , விண்வெளியிலிருந்து வரும் சிக்னல்களில் மாறுதல்களை கண்டார் . அவர் பணியாற்றும் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் உள்ள தொலைநோக்கி ஆய்வகத்தில் , 26 மீட்டர் அளவிலான தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது . இது , எபிசிலான் எரிசிலானி என்ற விண்மீனை கண்காணித்து வந்தது . அப்போது திடீரென அதன் கருவிகளில் சிக்னல்களை பெறும் வேகம் அதிகரித்தது . வேற்றுகிரகத்திலிருந்து உயிரினங்கள் பூமியைத் தொடர்புகொள்கின்றன என டிரேக் நினைத்தார் . சில நாட்கள் கழித்து தொலைநோக்கியில் முன்னர் கிடைத்தது போன்ற சிக்னல்கள் கிடைத்தன . பிறகுதான் அது ஆகாய விமானம் ஒன்றிலிருந்து பெறப்பட்டவை என தெரிய வந்தது . வானியலாளர் டிரேக் எபிசிலான் எரிசிலானி மற்றும் தாவ் செடி என்ற இரு விண்மீன்களை கண்காணிப்பதில் சுணங்கவேயில்லை . செவ்வாய் கோளை ஆராய்தற்கு பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் போலவே , வேற்றுகிரகவாசிகளின் புத்திசாலித்தனத்தை அறியும் ஆராய்ச்சி முற

சிறந்த தொழிலதிபர்

   சிறந்த தொழிலதிபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பேஸ்எக்ஸ் , டெஸ்லா நிறுவனங்களைத் தொடங்கியவரான எலன் மஸ்க் , பார்ச்சூன் இதழால் 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழிலதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . பொதுவாக டிவிட்டரில் தொழில்தொடர்பான விஷயங்களை பலரும் பகிர்ந்துகொள்ளமாட்டார்கள் . ஆனால் எலனின் பல்வேறு டிவிட்டர் பதிவுகள் நாளிதழில் தலைப்புச்செய்தியாகும் வகையில் பகிரங்கமான உண்மையை பேசுவதாக உள்ளன . இப்படி பேசுவது மட்டுமல்ல செய்யும் செயலிலும் அவர் புலிதான் . கடந்த பத்தாண்டுகளில் நாசாவின் பல்வேறு பணிகளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது . நூற்றுக்கு மேற்பட்ட முறை விண்வெளிக்கு அதன் ஃபால்கன் ராக்கெட்டுகள் சென்று திரும்பியுள்ளன . கடந்த ஆண்டு நவம்பரில் , அமெரிக்காவின் மூன்று விண்வெளி வீரர்களுடன் , ஜப்பான் நாட்டு வீரரையும் கூட சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி சாதனை புரிந்தது ஸ்பேஸ் எக்ஸ் . இதற்கான அனுமதி கூட ஒருவாரத்திற்கு முன்னர்தான் எலன் மஸ்க் பெற்றார் என்பது முக்கியமான விஷயம் . செவ்வாயில் மக்களை குடியேற்றுவதுதான் எலனின் நீண்டகால திட்டம் . இவரின் டெஸ்லா நிறுவ

அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை!

  அப்கிரேட் எனும் கட்டாய டெக் கொள்கை ! இணையம் வழியாக பல்வேறு டிஜிட்டல் பொருட்களை வாங்குகிறோம் . ஸ்மார்ட்போன் , கணினி போன்றவற்றை வாங்கிய உடனே இணைய இணைப்பில் இணைத்து மென்பொருட்களை மேம்படுத்துவது முக்கியம் . அதற்குப் பிறகுதான் அதனை சீராக பயன்படுத்த முடியும் . ஒருமுறை மேம்படுத்திவிட்டால் , டிஜிட்டல் சாதனங்களை பிரச்னையின்றி நீண்டகாலம் பயன்படுத்த முடியும் என நினைத்திருப்போம் . ஆனால் அதுவும் கூட குறைந்த காலத்திற்குத்தான் . கூகுள் , ஆப்பிள் ஆகிய டெக் நிறுவனங்கள் வெளியிடும் ஸ்மார்ட்போன்களில் , சில ஆண்டுகளிலேயே புது இயக்கமுறைமை , பாதுகாப்பு வசதி ஆகிய மேம்பாட்டு சலுகைகள் நிறுத்தப்பட்டு விடுகின்றன . இதனால் ஒருவர் பயன்படுத்தி வரும் சாதனங்களை வேறுவழியின்றி கைவிட்டு புதிய சாதனங்களுக்கு மாறவேண்டிய கட்டாயம் உருவாகிறது . உதாரணமாக 2017 இல் வெளியிடப்பட்ட கூகுளின் பிக்ஸல் 2 போனுக்கான பாதுகாப்பு வசதிகள் நடப்பு ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டுவிடும் என கூறப்படுகிறது . அக்டோபர் 2020 ஆம் ஆண்டு , விற்கப்பட்ட கூகுள் பிக்சல் 5 போனை , 2023 ல் பயன்படுத்தமுடியாது . இதற்கு நிறுவனங்கள் தரப்பில்

பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி!

  பெருநிறுவனங்களின் போட்டாபோட்டி ! உலகம் முழுவதும் மக்களுக்கான சுதந்திரத்தன்மையை , இணையம் வழங்கியுள்ளது . இதில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் அதன் கட்டற்ற தன்மையை தடுத்து வருகின்றன . டெக் உலகில் கூகுள் , மைக்ரோசாப்ட் , அமேசான் , ஆப்பிள் , ஃபேஸ்புக் ஆகிய நிறுவனங்கள் முக்கியமானவை . இந்த பெரு நிறுவனங்கள் பிற நிறுவனங்கள் இத்துறையில் போட்டியிடுவதை தடுத்து வருகி்ன்றன என்ற குற்றச்சாட்டு இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது . அமெரிக்கா , இங்கிலாந்து , ஆஸ்திரேலியா , பிரான்ஸ் ஆகிய நாடுகள் , டெக் நிறுவனங்களுக்கு எதிரான சட்டப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளனர் . கூகுளின் சர்ச் எஞ்சின் வழியாக தேடும் தகவல்களில் பெரும்பாலானவை , கூகுளின் நிறுவனங்களிலிருந்து வழங்கும் சேவையாகவே உள்ளது என புகார்கள் கூறப்படுகிறது . மக்கள் , பிற வலைத்தளங்களை விட கூகுளின் தளங்களை விட்டு வேறு தளங்களுக்கு செல்லாதபடி இந்த நிறுவனம் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது . இதுபற்றி , தி மார்க்அப் என்ற நிறுவனம் இணையவழியில் ஆய்வை மேற்கொண்டது . இதன்படி கிடைத்த 15 ஆயிரம் முடிவுகளை சோதித்ததில்