பாரத ரத்னா விருது பெற்ற சாதனைப் பாடகி! - லதா மங்கேஷ்கர்

 





லதா மங்கேஷ்கர் 




லதா மங்கேஷ்கர் 

பாடகி

இந்தி சினிமாவில் முக்கியமான பாடகி என்று சொன்னால் பலரும் அடிக்க வருவார்கள். இவரை யாருக்குத்தான் தெரியாமல் இருக்கும்? இந்திய இசைப்பாடல்களை கேட்பவர்களுக்கு லதாவின் குரல் நிச்சயம் அறிமுகமாகியிருக்கும். 

இந்திய சினிமாவில் அறுபது ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார் லதா.  1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர்.  இவரது பெற்றோர் சேவந்தி மங்கேஷ்கர், தினாநாத் மங்கேஷ்வர். லதாவின் தந்தை நாடக நடிகர் என்பதோடு இந்துஸ்தானி பாடகரும் கூட. 

லதாவுக்கு அவரது தந்தை ஐந்து வயதிலிருந்து பாடகியாக பயிற்சி கொடுத்து வருகிறார். இவர் உஸ்தாத் அமான் அலி கான், உஸ்தாத் அமாநாத் கான் ஆகியோரின் கீழ் பயிற்சி எடுத்துள்ளார். 

1942ஆம் ஆண்டு லதாவுக்கு பனிரெண்டு வயதாகும்போது அவரது தந்தை காலமானார். இந்த நேரத்தில் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் கட்டாயம் லதாவுக்கு இருந்தது. இவரது முதல் வெற்றி மகால் என்ற படத்தின் மூலம் கிடைத்தது. 1949ஆம் ஆண்டு வெளியான ஆயேகா ஆனேவாலா என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற, அடுத்தடுத்து பாடல் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்தன. 

லதா  நடிகை மதுபாலா முதல் பிரியங்கா சோப்ரா வரை பாடல்களை பாடியுள்ளார். இசையமைப்பாளர்களில் மதன்மோகன் முதல் ஏ.ஆர். ரஹ்மான் வரை பாடியுள்ளார்.  1974ஆம் ஆண்டு லதா லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால் என்ற இடத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது. இங்கு பாடும் முதல் இந்தியர் லதாதான்.  தனது பாடல்களுக்காக மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். 1989ஆம் ஆண்டு தாதாசாகேப் பால்கே விருது பெற்றார். 2001இல் பாரத் ரத்னா விருது பெற்றார் லதா மங்கேஷ்கர். 

டெல் மீ வொய் இதழ் 

கருத்துகள்